150 எண்ணெய் வளிம வயல்களின் தீர்க்கை
150 எண்ணெய் வளிம வயல்களின் தீர்க்கை கடலில் கொள் கலங்கள். நிலப்பகுதியில் எண் ணெயைத் தேக்கி வைப்பது கடினமான செய லன்று. ஆனால் கடலில் தேக்கி வைப்பது மிகவும் கடினமான செயலாகும். கடல் அண்மை எண்ணெய் வயல்கள் பெரும்பாலான நாடுகளில் கண்டுபிடிக்கப் பட்டதால் கடலில் கொள்கலன்களின் தேவை அதிக மாயிற்று. பொதுவாகக் கடலுக்கடியில் எண்ணெ யைச் சேமித்து வைப்பதற்கு, கொள்கலன்கள் கட்டப் படுவதோடு பழைய கப்பல்களையும் கொள்கலன் களாகப் பயன்படுத்துவதும் உண்டு. கடல் அண்மை யில் எடுக்கும் எண்ணெயைக் குழாய் வழியாக நிலப்பகுதியோடு இணைத்துக் கடல் பகுதியில் தேக்கி வைக்க வேண்டிய சிரமத்தைக் குறைத்துக் கொள்வார்கள். புவிக்கடியில் கொள்கலன்கள். புவிக்கடியில் யற்கையாகவே குகைகள் அமைந்துள்ளன. சுண்ணாம்புப்பாறைக் குகைகளைப் பெட்ரோலிய எண்ணெயைத் தேக்கி வைப்பதற்குப் பல நாடுகளில் பயன்படுத்துகிறார்கள். அமெரிக்கா, கனடா, பெல் ஜியம், பிரான்ஸ், ஸ்வீடன், ஜெர்மனி போன்ற நாடுகளில் குகைகளில் தேக்கி வைக்கும் பழக்கம் உள்ளது. புரோப்பேன், பியூட்டேன் போன்ற வளி மங்களும் புவிக்கூடியில் தேக்கி வைக்கப்படுவது உண்டு. க பல நாடுகளில் புவிக்கடியில் கொள்கலன்கள் கட்டி அவற்றில் இயற்கை வளிமங்களைத் தேக்கி வைத்திருக்கிறார்கள். இத்தேக்கங்கள் பெரும்பாலும் நுகர்வோர் மிகுதியாக வசிக்கும் நகர்ப்புறங்களுக்கு அருகிலேயே கட்டப்பட்டு வளிமம் தேக்கி வைக்கப் படுகிறது. இவற்றிலிருந்து வீட்டு உபயோகத்திற்குக் குழாய் மூலமோ தேவையான பொழுது சிறு கொள் கலன்களில் அடைத்தோ பயன்படுத்துகிறார்கள். கோடைக் காலங்களில் தேக்கி வைத்து மழைக் காலங்களில் பயன்படுத்துவதும் உண்டு. நீர் ஏற்கெனவே எண்ணெய் எடுக்கப்பட்ட கிணறு கள், துளையுள்ள மணற்பாறைப் பகுதிகள், எடுத்த பிறகு எஞ்சியுள்ள குழாய்க் கிணறு மற்றும் ஆர்ட்டீசியன் தன்மையுள்ள நிலப்பகுதிகளில் எண் ணெயும் வளிமமும் தேக்கி வைக்கப்படுவதுண்டு. இவ்வாறு தேக்கி வைக்கப்படும் எண்ணெய் வளிமம் தேவைக்குத் தகுந்தாற்போல் எக்கி மூலம் எடுக்கப் படும். க வீடுகளில் பயன்படுத்தப்படும் இயற்கை வளிமம் நீர்ம புரோப்பேன் வளிமமாகும். இரும்புக் கலன் களில் தகுந்த அழுத்தத்தில் இயற்கை வளிமம் அடைக்கப்பட்டுப் பயன்படுத்தப்படுகிறது. சிறிய கலன்களில் அடைக்கும் முன்னர் இவ்வளிமம் மிகப் பெரிய கோள வடிவ இரும்புக் கொள்கலன்களில் தேக்கி வைக்கப்படுவதுண்டு. சென்னை, கொச்சி. கோவை போன்ற நகரங்களில் சிறு கலன்களில் நீர்ம புரோப்பேன் வளிமத்தை நிரப்பும் தொழிற் சாலைகள் உண்டு. சென்னை கப்பல்களிலிருந்து நேரடியாக ° இந்தியாவில் பெரும்பாலான எண்ணெய் தூய்மை செய்யும் ஆலைகள் பம்பாய், விசாகப்பட்டினம், கொச்சி போன்ற கடற்கரை நகரங்களில் அமைந்திருப்பதால், வெளிநாடுகளி லிருந்து இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலிய எண்ணெய் இந்த ஆலைக்குச் சென்றுவிடுகிறது. எனவே, கொள்கலன் களின் தேவைச் சிக்கல்கள் அதிகமில்லை. பம்பாய் போன்ற கடல் அண்மைக் கிணறுகளிலிருந்து இவ் வாலைகளுக்கு நேரடியாகக் குழாய்கள் மூலம் எண்ணெய் செல்வதால் கடலில் கொள்கலன்களின் தேவை அதிகமில்லை. ஆனால் சரியான கொள் கலன்கள் இல்லாத காரணத்தால் இயற்கை வளிமம் கடற்பகுதியிலேயே ஓரளவு எரிக்கப்படுகிறது. கொள்கலன்களில் எண்ணெயையோ வளி மத்தையோ தேக்கி வைக்கும்போது பாதுகாப்பாக வைத்திருத்தல். எளிமையாக எடுத்தல், ஆவியாக மாறி வீணாகாமல் தடுத்தல் போன்ற முக்கிய கருத்துகளைக் கருத வேண்டும். இராம. இராமநாதன் எண்ணெய் வளிம வயல்களின் தீர்க்கை எண்ணெய், வளிமம் அல்லது இரண்டும் கிடைக்கும் டங்கள் எண்ணெய்ப் படிவுகள் எனப்படுகின்றன. பல எண்ணெய்ப் படிவுகள் கொண்ட பல கிணறுகள் உள்ள இடத்தை எண்ணெய் வயல் எனக் குறிப்பிட லாம். இத்தகு எண்ணெய்க் கிணறுகளிலிருந்து எண்ணெய் மற்றும் வளிமம் எடுத்தலையே தீர்க்கை என்பர். எண்ணெய் வயல்கள் வணிக அளவில் பயன் தரத் தக்கவையாக அமைந்திருத்தல் வேண்டும். மேம்பாடு. எண்ணெய் வயல்களைக் கண்ட றிதல். குழாய்க்கிணறு தோண்டுதல், துளையிடுதல், வளப் படுத்துதல், எண்ணெய் எடுக்கத் தேவையான கருவி களைத் தொகுத்தல் போன்ற பல்வேறு வகையான செயல்கள் மேம்பாடு எனக் கூறப்படுகின்றன. ஹைட்ரோகார்பன்களால் ஆக்கப்பட்ட நீர்ம, வளிமப் பொருள்களுக்கும் பொதுவான பெயர் பெட்ரோலியம் ஆகும். இப்பொருள்கள், வெப்பம், அழுத்தம் காரணமாக வெவ்வேறு நிலைகளை அடை கின்றன. சாதாரணமாகப் பெட்ரோலிய எண்ணெய்