உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்ணெயும்‌ வளிமமும்‌, கடலண்மைப்‌ படிவில்‌ 155

மெருகேற்றப்பட்ட கம்பி காப்புக்குழாய் எண்ணெய்ப் படுகை எண்ணெய் பாயும் வழி காப்புக் குழாய்த் துளை எண்ணெய்க் குழாய் உறிஞ்சு குழாய் ரீமெண்ட் படம் 4. எக்கிகள் மூலம் எண்னெய் எடுக்கும் குழாய்க் கிணற்றின் குறுக்குவெட்டுத் தோற்றம் யாலும் மின் வேதியல் வினைகளாலும், எண்ணெய்க் குழாய்கள் மற்றும் ஏனைய கருவிகளில் அரிமானம் ஏற்பட்டுப் பெருஞ்செலவு ஏற்படுகிறது. . எண்ணெய்ப்படுகையில் பேரபின் மெழுகு ஓரளவு காணப்படுகிறது. இது எண்ணெய்க் குழாய்களில் நாளடைவில் சேர்ந்து கட்டியாகி எண்ணெய் வரும் வழிகளை அடைத்துக் கொள்ளும். இக்கட்டிகளை உடைத்து வெளியேற்றிய பிறகுதான் எண்ணெய் எடுக்க முடியும். பாரபின் மெழுகுக் கட்டியை எண்ணெயும் வளிமமும், கடலண்மைப் படிவில் 155 உடைக்க நன்றாகக் காய்ச்சிய எண்ணெயை ஊற்றி உருகவைத்தல், சுரண்டி எடுத்தல், மின் கருவிகளின் துணையோடு வெப்பமாக்கி உருகவைத்தல், மின் சக்தியால் உருகவைத்தல், நீராவியால் உருகவைத்தல் போன்ற பல முறைகள் உள்ளன. எண்ணெயோடு வெளியேற்றும் முறையும் ஞெகிழி உட்பூச்சு முறையும் தடுப்பு முறைகளாகப் பயன்படுத்தப் படுகின் றன. சு கடல் ஓரப்பகுதிகளில் உப்பு நீர், எண்ணெய்க் கிணறுகளிலிருந்து வெளிவருவதுண்டு. இவ்வாறு வெளிவந்த நீரை அப்புறப்படுத்துவது பெரிய வேலை யாகும். எண்ணெய்க் கிணற்றிற்குப் பக்கத்தி லேயே ஒரு கிணறு தோண்டி அக்கிணற்றில் உப்பு நீரை உட்செலுத்தி அப்புறப்படுத்துவதும் உண்டு. இதன் மூலம் எண்ணெய்ப் படிவுகளில் அழுத்தமும் எண்ணெய் வெளிவரும் அளவும் குறையாமல் இருக்கும். ஆனால், கிணறு தோண்டி உப்பு நீரை உட்செலுத்துவதால் எண்ணெயின் உற்பத்திச் செலவு சற்று உயரும். . எண்ணெயும், உப்பு நீரும் சேர்ந்து சில கிணறு களில் ஒரு கலவையாக வெளிவரும். 90% உப்புநீர் கூட இக்கலவையில் இருக்கும். கலவையைப் பிரித்து எண்ணெயைத் தனியே எடுக்க, கிணற்றின் உள்ளே வெப்பமாக்குதல், வேதிப் பொருள்களை உட்செலுத்து தல், மின்னாற்பகுப்பு முறை. மின்னோட்டம் செலுத்திப் பிரிக்கும் முறை போன்ற வழி முறைகள் பின்பற்றப்படுகின்றன. கடல் அண்மையிலுள்ள கிணறுகளில் கடல் அலைகள், சூரிய வெப்பம், சூறா வளிக்காற்று, துரப்பணக் கருவி மேடை வெடித்துச் சிதறும் அபாயம் போன்ற பல இன்னல்கள் உண்டு. வளிமம் தீப்பற்ற அதனாலும் இழப்பு ஏற்படுவதுண்டு. எண்ணெய் மற்றும் வளிம வயல்களின் தீர்க்கை என்பது எண்ணெய் வயல்களில் கிடைக்கும் முழு அளவு எண்ணெயையும் முடிந்தவரை இன்னல் கடந்து மேம்படுத்தப்பட்ட முறைகளால் எடுப்பதேயாகும். களைக் இராம. இராமநாதன் எண்ணெயும் வளிமமும், கடலண்மைப் படிவில் பெட்ரோலிய எண்ணெய், இயற்கை வளிமம் கடலை ஒட்டிய நிலப்பகுதியிலும் கடலுக்குள்ளே கடற்கரை ஓரப்பகுதிகளிலும் கிடைக்கின்றன. பெட்ரோலிய எண்ணெயும் இயற்கை வளிமமும் கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய கடல் வாழ்