166 எத்திலீன்
166 எத்திலீன் அவை முதலில் டைசாக்கரைடுகள் (சுக்ரோஸ், மால்டோஸ் போன்றவை) ஈஸ்டுகளினால் மோனாசாக்கரைடு களாகப்பகுக்கப்படுகின்றன. ஸ்டார்ச், செல்லுலோஸ் போன்ற பாலிசாக்கரைடுகளை இதேபோல் நேரடியாக ஈஸ்டுகளால் நொதிக்க வைக்க இயலாது; முதலில் நீராற் பகுக்கப்பட்டு தனிச் சர்க்கரைகளாக மாற்றப்பட வேண்டும். இதனை நொதிகளைக் கொண்டு அல்லது கனிம அமிலங்களைச் சேர்த்து வெப்பப்படுத்தும்போது பெறலாம். கருப்பஞ்சாறு (molasses), தானியங்கள், மரக்கழிவு போன்றவை எத்தில் ஆல்கஹால் தயாரிக்க முதற்பொருளாக விளங்குகின்றன். பெரும்பாலும் நொதித்தல் முறை காற்றில்லாச் சூழ்நிலையிலேயே நடைபெறுகிறது. இதனால் கார்பன் டைஆக்சைடு உண்டாவது குறை வதுடன் ஆல்கஹால் மிகுதியாகக் கிடைக்கிறது. அதிக செறிவுள்ள தூய ஆல்கஹால் காய்ச்சி வடித்தல் முறையில் பெறப்படுகிறது. கருப்பஞ்சாற்றிலிருந்து தயாரித்தல். சர்க்கரைத் தயாரிப்பில், சர்க்கரைச் சாற்றிலிருந்து சர்க்கரைப் படிகங்களை நீக்கியபின் எஞ்சியிருக்கும் மூல நீர்மத் திற்குக் கருப்பஞ்சாறு என்று பெயர். இந்நீர்மத்தில் 40% க்கும். மேல் சர்க்கரை இருக்கிறது. இந் நீர்மத்தை 10% கரைசலாக மாற்றி அதனுடன் நீர்த்த சல்ஃப்யூரிக் அமிலத்தைச் சேர்க்கவேண்டும். சுமார் 25°C வெப்பநிலையில் இந்நீர்மத்துடன் ஈஸ்ட்டைச் சேர்க்க வேண்டும். இவ்வெப்பநிலையில் நொதித்தல் 2-3 நாள் வரை நிகழ்கிறது. பின்னர் ஈஸ்ட்டை வடிகட்டி அகற்றினால் நீர்த்த ஆல்கஹால் கரைசல் உண்டாகிறது. இம்முறையில் கார்பன் டை ஆக்சைடு பயன்மிகு துணைப் பொருளாகக் கிடைக்கிறது. மேலும் சில கரிம அமிலங்களும் கிளிசராலும் துணைப் பொருள்களாக விளைகின் றன. உருளைக்கிழங்கிலிருந்து தயாரித்தல். பெரும் பாலான ஆல்கஹால் தயாரிப்புத் தொழிலகங்களில் அமைலேஸ் நொதியின் மூலப்பொருளாக நீரில் ஊற வைத்து முளைகட்டி உலர்த்திய பார்லி பயன்படு கிறது. உருளைக்கிழங்கை நீருடன் சேர்த்துக் கூழாக் கிப் பின்னர் அதனுடன் முளைவிடும் பார்லியைச் சேர்த்து 50°C. வெப்பநிலையில் வைத் ஸ்டார்ச் திருக்க வேண்டும். நொதித்தலினால் மால்ட்டோசாகவும், டெக்ஸ்ட்ரின் ஆகவும் மாறு கிறது. வினை நிறைவு பெற்றபின் நீர்மத்தைக் குளிரச் செய்து பின் ஈஸ்ட்டை அதனுடன் சேர்க்க வேண்டும். ஈஸ்ட்டிலுள்ள மால்ட்டோஸ் நொதி மால்ட்டோஸை குளுக்கோஸாகவும். நொதி குளுக்கோஸை எத்தில் ஆல்கஹாலாகவும், கார்பன் டைஆக்சைடைாகவும் மாற்றுகின்றன. ஸைமேஸ் இவ்வாறு மேற்கூறிய மூலங்களிலிருந்து பெறப் பட்ட ஆல்கஹால் சுரைசல்களில் ஆல்கஹாலின் மிகக் விழுக்காட்டளவு குறைவாக இருக்கும். இதனைக் காய்ச்சி வடித்தால் 75.6% ஆல்கஹால், 4.4% நீர் கொண்ட தூய எத்தில் ஆல்கஹால் கிடைக்கிறது. தனி ஆல்கஹால். நீர், ஆல்கஹால் ஆகியவை கொதிநிலை மாறாக் கலவையை உண்டாக்குவதால் தனி ஆல்கஹாலைப் பின்னர்க் காய்ச்சி வடித்தல் முறையில் தயாரிக்க இயலாது. தூய எத்தில் ஆல்க ஹாலைச் சுண்ணாம்புக் கல்லில் பல மணி நேரம் வைத்திருந்து காய்ச்சி வடிக்கவேண்டும். வடிநீரில் 0.20% நீர் உள்ளது; 0.5% வரை நீர் உள்ள ஆல்க ஹால் தனி ஆல்கஹால் எனப்படுகிறது. அசுத்தம் நீக்கப்பட்ட ஆல்கஹாலுடன் மிகையளவு பென்சீ னைச் சேர்த்துக் காய்ச்சி வடிப்பதாலும் தனி ஆல்கஹாலைப் பெறலாம். காண்க, ஆல்கஹால்கள். த.தெய்வீகன் எத்திலீன் இது ஒரு நிறமற்ற வளிமம். இதன் மூலக்கூறு அமைப்பு H,C=CH, எத்திலீனின் காதிநிலை 103.8°C; உருகுநிலை - 169.4°C. தொகுப்புமுறைச் சேர்மங்கள் தயாரிப்பில் எத்திலீன் மிகவும் பயனுள்ள ஒரு கரிம வேதிப் பொருளாகும். தொழிலகங்களில் தயாரிக்கப்படும் எத்திலீனில் பெருமளவு பாலி எத்திலீன் அல்லது பாலித்தீன் தயாரிப்பில் பயன்படு கிறது. எத்தனால், வினைல் அசெட்டேட், அசெட் டால்டிஹைடு போன்றவை இதன் முக்கிய பெறுதி களாகும். தயாரிப்பு. நீராவி உடனிருக்கபெட்ரோலியம் பிளத்தல் வினைக்குட்படும்போது எத்திலீன் உண்டா கிறது. தொழில்முறையில் எத்திலீன் தயாரிக்க இம்முறையே பயன்படுகிறது. இப்பிளத்தல் வினை 1600°C வெப்பநிலையில் 2 kPa அழுத்தத்தில் நடை பெற்று 1000°C வெப்பநிலைக்கு வேகமாகக் குறைக்கப்படுகிறது. பெறுதி. எத்திலீனைப் பல்லுறுப்பாக்க வினைக் குட்படுத்தும்போது உயர் மூலக்கூறு எடையுள்ள பாலி எத்திலீன் உண்டாகிறது. அலுமினியம் அல்க்கைல் வினையூக்கிகள் (சைக்களர் வினையூக்கி) குறைந்த எடைகொண்ட மூலக்கூறு நீள்தொடர் பெறுதி களைப் பெறப்பயன்படுத்தப்படுகின்றன. பல்லேடியம் வினையூக்கியைப் பயன்படுத்தி ஆக்சிஜனேற்றம் செய்யும்போது அசெட்டால்டிஹைடும், அசெட்டிக் அமிலத்தைக் கரைப்பானாகப் பயன்படுத்தினால் வினைல் அசெட்டேட்டும் உண்டாகின்றன. குளோரி னேற்றம், ஆக்சிகுளோரினேற்ற முறை ஆகிய முறை களால் வினைல் குளோரைடு உண்டாக்கப்படு .