உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்‌ இயக்கம்‌ 167

எதிர் இயக்கம் 167 கின்றன. வெள்ளியை வினையூக்கியாகப் பயன்படுத் தினால் எத்திலீன் ஆக்சைடு உண்டாகிறது: அமில வினையூக்கிகளைப் பயன்படுத்தி நீரேற்றம் செய்யும் போது தொழில் துறையில் மிகவும் பயன்படுகின்ற எத்தில் ஆல்கஹால் உண்டாகிறது. போன்ற முக்கியமான ற கரிம பயன். இருமூலக்கூறு சார் நீர்நீக்கத்தால் bimolecular dehydration) கிடைக்கும் டைஎத்தில் ஈதர் கரைப்பானாகவும், மயக்க மருந்தாகவும், பிரித் தெடுக்க உதவும் பொருளாகவும் பயன்படுகிறது. எத்தில் ஆல்கஹாலை ஹைட்ரஜன் நீக்சு வினைக்குட் படுத்துவதால் விளையும் அசெட்டால்டிஹைடு, அசெட்டிக் அமிலம் அசெட்டிக் நீரிலி, குளோரால், பியூட்டனால், குரோட்டனால்டிஹைடு, எத்தில் ஹெக்சனால் வேதிச் சேர்மங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது. கார்பாக்சிலிக் அமிலங்களுடன் ஆல்கஹால் வினைப் படுவதால் உண்டாகும் எஸ்ட்டர்கள் மிகவும் பயனுள்ள சேர்மங்கள் ஆகும். எத்தில் ஆல்கஹால் அம்மோனியாவுடன் வினைப்பட்டு உண்டாகும் அசெட்டோநைட்ராலை ஒடுக்கவினைக்குட்படுத் தினால் எத்தில் அமீன் கிடைக்கிறது. இதுவும் ஏனைய ஆல்கஹால் பெறுதிகளும் சாயத் தயாரிப்பில் இடை நிலைப் பொருளாகவும், மருந்துத் தயாரிப்பிலும், செயற்கை ரப்பர் தயாரிப்பிலும் அழகுப் பொருள்கள், வெடிமருந்துகள், பிளாஸ்டிக் ஆக்கிகள், மாசுநீக்கிகள் செயற்கை இழைகள் போன்றவற்றின் தயாரிப்பிலும் பெரிதும் பயனாகின்றன. எத்திலீன் குளோரோஹைட்ரின் த.தெய்வீகன் இது பீட்டா குளோரோஎத்தில் ஆல்கஹால் என்றும் 2-குளோரோஎத்தனால் என்றும் குறிப்பிடப்படும். இதன் மூலக்கூறு வாய்ப்பாடுHOCH,CH,CI எத்திலீன் குளோரோஹைட்ரின் (ethylene chlorohydrin) நிற மற்ற நீர்மம். இதன் கொதி நிலை 128.8°C. பெரு மளவில் இதனை நீரிய ஹைப்போகுளோரஸ் அமிலத் தினுள் (குளோரின் நீர்) எத்திலீனை உட்செலுத்திப் பெறலாம். H,C=CH + HOCI→ HOCH,-CH,CI மேலும் இதனை 100·C வெப்பத்தில் கிளைக்காலு டன் ஹைட்ரஜன் குளோரைடை வினைப்படுத்தியும் தயாரிக்கலாம். இது நீரில் கரைகிறது. காரத்துடன் சேர்த்துக் காய்ச்சி வடிக்கும்போது எத்திலீன் ஆக்சைடு கிடைக் கிறது. இதில் இருவேறுபட்ட வினைத் தொகுதிகள் இருப்பதால் கரிமத் தொகுப்புகளில் முக்கியமாகப் பயன்படுகிறது. எடுத்துக்காட்டாக நீரிய சோடியம் சயனைடுடன் வினைப்படுத்தும்போது எத்திலீன் சயனோஹைட்ரின் கிடைக்கிறது. இதனை HCI ஐப் பயன்படுத்தி நீராற் பகுக்கும்போது பீட்டா ஹைட் ராக்சி புரோப்பியோனிக் அமிலம் கிடைக்கிறது. HOCH2-CH,C] + NaCN--HOCI,-CH,CN+NaCl H, HCl HOCH,-CH,COOH + NH,CI இது பெருமளவில் எத்திலீன் ஆக்சைடு தயாரிக்கவே பயன்படுகிறது. எத்திலின் ஆக்சைடு சிறந்த பூச்சிக் கொல்லியாகவும், மாசுநீக்கிகள் தயாரிப்பிலும் பயன் படுகிறது. த.தெய்வீகன் எதிர் இயக்கம் சில வேளைகளில் ஒரு நோயைக் குணப்படுத்த இரு மருந்துகளைச் சேர்த்துக் கொடுக்கும்போது ஒரு மருந்து மற்ற மருந்தின் இயக்கத்தைக் குறைக்கும் செயல் எதிர் இயக்கம் (antagonism) எனப்படும் இது மருந்தியல் எதிர் இயக்கம், இயங்கியல் (physio- logical) எதிர் இயக்கம், வேதியியல் எதிர் இயக்கம், பாரம்பரியக் காரணிகள் (genetic factors) இயக்கம் என நான்கு வகைப்படும். மருந்தியல் எதிர் இயக்கம். இவ்வகை வினையில், ஏற்பித்தூண்டிகள் (agonists) ஏற்பிகளில் (receptors) சேர்வதை, ஏற்பித்தூண்டிகளின் இயக்கத் தடுப் பான்கள் (antagonists) தடுக்கின்றன. ஏற்பிகளில் சேர்த்து வினையை உண்டாக்குபவைக்கு ஏற்புத் தூண்டிகள் என்று பெயர். ஏற்புத் தூண்டிகளில் இயக்கத் தடுப்பான்கள் சேர்ந்தாலும் வினையை உண்டாக்குவதில்லை. ஆனால் இவை ஏற்பிகளை அடைத்துக் கொள்வதன் மூலம், ஏற்பித்தூண்டிகள் இயங்காதவாறு செய்கின்றன. மருந்தியல் எதிர் இயக்கத்தைப் போட்டியிடமுடியும் அல்லது மீளும் எதிர் இயக்கம் (competitive or reversible antago- nism) போட்டியிட முடியாத அல்லது மீளாத எதிர் இயக்கம் (non competitive or irreversible antagonism) மேலும் வகையாகப் இரு மீளும் எதிர் இயக்கவினையில் ஏற்பித்தூண்டிகளின் அளவை அதிகரிப்பதன் மூலம், ஏற்பித்தூண்டிகளின் இயக்கம் தடுப்பான்களின் முடியும். என இயக்கத்தை பிரிக்கலாம். எதிர்க்க மீளா இயக்க வினையில் ஏறபித்தூண்டிகளின் இயக்கத் தடுப்பான்கள், ஏற்பிகளில் வலுவாக இணைந்து விடுவதால், ஏற்பித்தூண்டிகளின் அளவை