184 எதிர் மின்கதிர்
184 எதிர் மின்கதிர் தடைக் காப்புறுதி ஊன்நீர் கரையும் அல்புமின் கரையாத குளோபுலின் Į நீரில் கரையும் குளோபுலின் போன்றவை நீரில் கரையாத உண்மைக் குளோபுலின் காபாட் என் 1938ஆம் ஆண்டு டிஸிலியஸ், போர் எதிர்ப்பொருள் காமா குளோபுவின் வகை யைச் சேர்ந்தது என்று கண்டறிந்தனர். வேறு சில ஆல்ஃபா, பீட்டா வகையைச் சேர்ந்தவை.பெரும் பான்மையான எதிர்ப்பொருள்கள் 7 ஸ்வெபெர்க் போது சுழற்சியின் அலகு (sveberg unit) வேகச் விடுகின்றன. படிந்து எதிர்ப்பொருள் என்பது குளோபுலின் எதிர்ப்பொருள், மையலோமா மேக்ரோ குளோப்புலினீமியா, கிரையோ குளோபு லினீமியா ஆகியவற்றில் காணப்படும் மாறுபட்ட புரதங்கள், இயற்கையிலேயே உண்டாகும் தடைக்காப்பு குளோபுலின் அனைத்தையும் குறிக்கிறது. தடைக்காப்பு குளோபுலின்கள் பிளாஸ்மா செல்க ளாலும், நிணச்செல்களாலும் உற்பத்தி செய்யப்படு கின்றன. (தடைக்காப்பை, தடுப்பாற்றல் (Immunity) எனவும் குறிப்பிடலாம்). ஊன்நீர் புரதத்தில் 20-25% தடைக்காப்பு குளோபுலினாக இருக்கிறது. அவை IgG, 1gA, IsM. IgD, IgE எனப் பல வகைப்படும். ஐஜிஜி. இது தடைக்காப்பு குளோபுலின் 75% ஆகும். து ஊன்நீரில் 6-16 மில்லி கிராம்/மில்லி லிட்டர் அளவு உள்ளது. இது இரண்டு மெல்லிய சங்கிலிகளும் இரு கனமான சங்கிலிகளும் இணைந்த வண்ணம் அமைந்துள்ளது. கனத்த சங்கிலிகளின் முனைகள் மாறும் தன்மையுள்ள பகுதி என்றும், மாறாப் பகுதி என்றும் பெயர் பெறும். இந்த மாறும் தன்மையுள்ள பகுதி, ஒவ்வோர் எதிர்ப் பொருளுக்கும் தனித்தனியே அமைந்திருக்கும். இந்தப் பகுதிதான் எதிரியுடன் ஓட்டிக் கொள்ளும் தன்மை வாய்ந்தது. ஐஜிஜி ஒன்றுதான் தாயிடமிருந்து குழந்தைக்குத் தாய்சேய் இணைப்பு (placenta) மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. வேண்டிய அளவில் கருவினால் இதை உற்பத்தி செய்ய முடிவதில்லை. இது பல விதமான தடைக்காப்புறுதிச் செயல்களாகிய நிரப்பி நிலைப்படுத்தல் (complement fixation) படிம மேற்படுத்தல் (precipitation) நச்சுப் பொருள்களையும் மிகு நுண்ணுயிர்களையும் சரிநிகராக்குதல் போன்ற வற்றில் பங்கேற்கிறது. ஐ.ஜி.எ. IgG க்கு அடுத்த படியாக இது மிகை அளவில் (10%) காணப்படுகிறது. ஊன்நீரில் 0.6-4.2 மில்லி கிராம்/மில்லி லிட்டர் அளவு உள்ளது. உமிழ்நீர், கண்ணீர். சீம்பால் (colostrum) ஆகியவற்றில் மிகுதியாக உள்ளது. ஐ.ஜி.எம்.இதுவும் 5-10% அளவிலும் 0.5-2.0 மி.கிராம்/மி.லிட்டர் அளவிலும் உள்ளது. 20 வாரக் கால வளர்ச்சி நிலையிலேயே கரு இதனை உற்பத்தி செய்கிறது. இதைக் கொண்டு பிறவியிலேயே ஏற்படும் பால்வினை நோய், அம்மை, டாக்ஸோபிளாஸ் மோஸிஸ் ஆகிய நோய்களைக் கண்டறியலாம். ஐ.ஜி.டி. இது அமைப்பால் IgGஐ ஒத்தது. இது 3 மி.கிராம்/மி.லிட்டர் அளவு ஊன்நீரில் உள்ளது. ஐ.ஜி.இ.இதுவும் உருவத்தில் IgG ஐப் போல் உள்ளது. ஊன்நீரில் சிறிதளவே உள்ளது. இதன் அளவு ஒவ்வாமை நோய்களான ஆஸ்துமா 'ஹே' எக்சிமா காய்ச்சல், ஆகியவற்றில் அதிகரித்துக் காணப்படுகிறது. இது மூச்சுப் பாதையிலும் உணவுப் பாதையிலும் உற்பத்தி செய்யப்படுகிறது. gG உடலில் உள்ள நீர்மங்களையும் JgA உடலின் தோல் மட்டத்தையும் igM இரத்த ஓட்டத்தையும் பாதுகாத்துச் செயல்படுவதையும் IgE உடலின் ஒவ்வாமை நிலைமைக்குக் காரணமாய் இருப்பதையும் எதிர்ப் பொருள்களின் வேலைகளாகச் சுருக்கமாகக் குறிப்பிடலாம். தடைக்காப்பும், எதிர்செனியைப் பொறுத்து எதிர்ப் பொருள் உருவாவதும், தடைக்காப்புக்கு உட்பட்ட ஜீன்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இந்த எதிர்ப் பொருள்களை உருவாக்கி உடலைக் காக்கவே தடுப்பூசிகள் போடுகின்றனர். இதனால் ஒரு குறிப்பிட்ட எதிர்செனிக்கு எதிராக முதல் நிலை விளைவும், மறுபடியும் கொடுக்கும் போது இரண்டாம் நிலை விளைவும் உண்டா கின்றன. முதல் நிலை விளைவில் எதிர்ப்பொருள் நேரம் கடந்து தோன்ற ஆரம்பிக்கும். மேலும் உடைய ஆற்றல் குறைந்தும், குறுகிய வாழ்நாள் தாகவும் விளங்குகின்றது. இரண்டாம்தர விளைவில் தோன்றும் எதிர்ப் பொருள்கள் வெகு வேகமாக உற்பத்தி செய்யப்படுவதுடன் மிகவும் ஆற்றல் வாய்ந்தவையாகவும், நெடுநாள் நீடித்து இருக்கக் கூடியவையாகவும் இருக்கின்றன. இந்நிலை அடையவே தடுப்பூசிகளைப் பல சிறு அளவுகளில் சில மாத இடைவெளிகளில் போடுகின்றனர். எதிர்மின் கதிர் சுவயம்ஜோதி ஒரு குழாயில் தாழ்ந்த அழுத்தத்தில் வளிமங்களை வைத்து, அதனூடே மின்னிறக்கம் செய்யும்போது,