உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்மைத்‌ தடைக்‌ கருவி 189

படுத்தப்படுகின்றன. இக்கருவிகள் ஒரு வரையரைக் குட்பட்டு எதிர்மைத் தடைத் தன்மையைப் பெற்றுள் ளன. டனெல் இருமுனையம், ஒருமுனை திரித தடையம் (transistor) ஆகியவை முக்கியமாக இப்பணியில் பயன்படுத்தப்படுகின்றன. டனெல் இருமுனையம் முதன்முதலாக 1958 ஆம் ஆண்டு இசாக் என்பாரால் உருவாக்கப்பட்டது. இதன் சின்னம் படம் 1 (அ) விலும், சம சுற்றுவழிப் படம் 1 (ஆ) விலும் காட்டப்பட்டுள்ளன. டனெல் இருமுனையத்தின் எதிர்மைத்தடைத் தன்மை அதன் மின்னழுத்த மின்னோட்டத் தன்மை கொண்டு படம் 2 இல் விளக்கப்பட்டுள்ளது. மின்னழுத்தத்தைச் சுழியிலிருந்து சிறிது சிறிதாக உயர்த்திக் கொண்டே சென்றால் டனெல் இரு முனையத்தின் மின்னோட்டமும் I, வரை உயர்ந்து கொண்டே செல்கிறது. Vpயும், Iரயும் அவற்றின் உச்ச நிலையைக் காட்டும். ஆனால் மின்னழுத்தத்தை Vpக்கு மேலும் உயர்த்தினால் மின்னோட்டம் IV வரை குறைந்து கொண்டே வரும். இதற்கு மேலும் மின்னழுத்தத்தை உயர்த்தினால் மின்னோட்டம் அதிகரித்துக் கொண்டே செல்லும். (Vp.lp) என்ற உச்சியிலிருந்து (Vv, Iv) என்ற பள்ளத் தாக்கு வரை டனெல் இருமுனையம் ஓர் எதிர்மைத் தடைக் கருவியாகப் பயன்படுகிறது. PA I Ly Vp படம் 2. எதிர்மைத்தடைக் கருவி மின்னழுத்தம் சின்னம் E (ஆதன்மை VE மின்னழுத்தம் IE Ip Iv மின்னோட்டம் B2 081 படம் 189