உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 எதிர்‌ வடிவம்‌

190 எதிர் வடிவம் சுற்றுப்புறச் மலிவாகவும் எளிமையாகவும், சூழ்நிலைப் பாதிப்பு இல்லாமலும் விரைவாக வேலை செய்வதால் இது மின்னணுத் துறையில் மிகவும் பயன்படுகிறது. ஒரு முனைத் திரிதடையம் (unijunction transistor) டனெல் இருமுனையத்தைப் போலவே ஒருமுனைத் திரிதடையமும் எதிர்மைத்தடைச் சாதனமாகப் பயன் படுகிறது. டனெல் இருமுனையத்தின் மின்னழுத்தக் கட்டுப் பாட்டினால் இதனை எதிர்மைத் தடைக் கருவியாகப் பயன்படுத்தலாம். ஆனால் ஒருமுனைத் திரிதடையத்தில் அதன் மின்னோட்டத்தைக் கட்டுப் பாடு செய்து எதிர்மைத் தடைக் கருவியாகப் பயன் படுத்தலாம். உமிழ்ப்பான் (emitter) வழியாக மின்னோட்டத் தைச் சிறிது சிறிதாக உயர்த்திக் கொண்டே சென்றால் மின்னழுத்தமும் Vp வரை உயர்ந்து கொண்டேசெல்லும், Ipக்கு மேலும் மின்னோட்டத்தை உயர்த்தினால் மின்னழுத்தம் V.வரை குறைந்து கொண்டே வரும். (Ip, Va) என்ற உச்சியிலிருந்து (Iv V.) என்ற பள்ளத்தாக்கு வரை உள்ள தன்மையைக் கொண்டு இதை ஒரு எதிர்மைத் தடைக்கருவியாகப் பயன்படு படுத்தலாம். எதிர் வடிவம் ந. பழனிச்சாமி ஒன்றின் மேல் ஒன்றாகப் பொருந்தாத அமைப்பு வசங்களைக் (Configurations) கொண்ட ஒளி மாற்றி யங்கள் (optical isomers) முனைவுடைத் தள ஒளியை plane polarised light) எதிரெதிர்த் திசைகளில் சுழற்று கின்றன. இவ்வாறு முனைவுடை ஒளியைச் சுழற்றும் மாற்றியங்கள் எதிர்வடிவங்கள் (enantiomers) எனப் படுவன. இம் மாற்றியங்கள் இவ்வாறு ஒளி சுழற்று வதற்கு அவற்றில் சமச்சீரற்ற மையம் (chiral centre) இருக்க வேண்டும். காட்டாக, லாக்டிக் அமிலத்தின் எதிர்வடிவங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. COOH COOH HC OH OH C H 1 CH3 வலஞ்சுழி அல்லது CH, இடஞ்சுழி அல்லது (+) லாக்டிக் அமிலம் () லாக்டிக் அமிலம் இவ்விரு எதிர்வடிவங்களும் முனைவுடை ஒளியை எதிரெதிர்த் திசைகளில் சமமாகச் சுழற்றுகின்றன; முனைவுடை ஒளியை வலப்புறமாகச் சுழற்றும் வடிவம் வலஞ்சுழி (dextro rotatory) என்றும், இடப் புறமாகச் சுழற்றும் வடிவம் இடஞ்சுழி (laevo rotatory) என்றும் அழைக்கப்படும். வேதி எதிர்வடிவமைப்புகளால் அமையும் சேர்மங்கள் வினைகளிலும் இயற்பண்புகளிலும் ஒரே தன்மை உடையனவாக இருக்கின்றன; ஆனால் ஒளி சுழற்றும் தன்மையில் எதிர்ப்பண்புடன் இருக் கின்றன. லாக்டிக் அமிலத்தின் எதிர் வடிவங்களின் தன்மைகள் கீழ்க்காணும் அட்டவணையால் அறியப் படும். இவ்வாறு பொருள்களின் எதிர்வடிவங்கள் மற்ற ஒளிசுழற்றும் தன்மையுடைய பொருள்களுடன் வினை புரியும்போது மாறுபட்ட காலத்தன்மையில் வினை புரிகின்றன. இவ்வெதிர் வடிவங்கள் உடற்சுற்றில் முக்கிய பங்கேற்கின்றன. நொதி வினையூக்கிகளிலும் இவற் றிற்குப் பங்கு உண்டு. பெனிசிலியம் நுண்ணுயிரி (+) டார்டாரிக் அமிலத்துடன் வினைபுரிகிறது; ஆனால் () டார்டாரிக் அமிலத்துடன் வினைபுரிவதில்லை. குளோரோமைசிடினின் ஓர் எதிர்வடிவம்தான் நுண்ணு யிர்க் கொல்லியாகத் திகழ்கிறது. (+) எஃபிட்ரின் மருந்தாகச் செயல்படுகிறது; ஆனால் எதிர்வடிவம் (-) எஃபிட்ரின், மருந்துப் பொருள் அன்று.D(+) உயிர்களின் வளர்சிதைமாற்றத்தில் குளுகோஸ் பங்கு ஏற்கிறது. அமினோ அமிலங்களில் முக்கிய அஸ்பாராஜினின் ஓர் எதிர் வடிவமும், லுயூசினின் எதிர் வடிவமும், சுவை மிகுந்தவை. ஓர் உருகும்நிலை அடர்த்தி ஒளிசுழற்றும் தன் மை. வலஞ்சுழி (+) லாக்டிக் அமிலம் 26°C 1.24 2.2° இடஞ்சுழி (-) லாக்டிக் அமிலம் 26°C 1.24 -2.2° 127 எஸ். கிருஷ்ணமூர்த்தி