உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 எந்திரச்‌ சுருள்வில்‌

218 எந்திரச் சுருள்வில் செறிவு சற்றுக் குறைவாக இருக்கும். இச்சாவி சிறிய உருளை வடிவில் அமைந்திருக்கும். இச்சாவியைப் பொருத்தும் முன்னர், சுழல்தண்டு மற்றும் மையப் ரண்டும் சேரும் பகுதி இணைந்த கூட்டமைப்பில் சாவியின் விட்டத் இடத்தை மையமாகக் கொண்டு திற்கு ஒரு துளை இடவேண்டும். இதன் விளைவாக ற்றத்தக்க தன்மை பாதிக்கப்படலாம். மா காடித்தண்டு (splined shaft) என்னும் சுழல் தண்டில் பல சாவிகள் கூட்டாக அமைந்திருக்கும். இதற்குத் தக்கவாறு மையப்பகுதி கொத்துப் பொறி broaching machine) மூலம் துருவி எடுக்கப்பட்டிருக் கும். இவ்வகைத் தண்டுகள் பெருமளவு உற்பத்தி செய்ய ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆரத் திசையில் பயன்படுத்த குறைவான இடத்தைப் வேண்டிய தருணங்களில் இவை பொதுவாகப் பயன் படுத்தப்படும். நேரான சாவிகளுக்கான சாவிப் பாதைகளைப் பக்கத் துருவல் வெட்டியைப் (side- milling cutter) பயன்படுத்தியும் முனைத் துருவல் (end milling) வெட்டியைப் பயன்படுத்தியும் உருவாக்குவார்கள். சிறகுச் சாவிகள் (feather keys), சுழல்தண்டில் இருந்து ஒரு கப்பியையோ, சக்கரத்தையோ நழுவி எடுக்க ஏதுவாகப் பொருத்தப்பட்டிருக்கும். பொது வாசுச் சாவிகள் சுழல்தண்டுக் காடியில் இறுக்கமாக வும் மையத்தண்டின் காடியில் சற்றுத் தளர்வாகவும் பொருத்தப்பட்டிருக்கும். சுழல்சக்தி செலுத்தப்பட்டு இருக்கும்போது ஒரு கப்பியையோ, சக்கரத்தையோ வெளியே எடுக்க, குறைவான் விசையைப் பயன் படுத்துவதே விரும்பத்தக்கது. இதன் பொருட்டு இரண்டு சிறகுச் சாவிகள் சம தூரத்தில் உள்ளவாறு பொருத்தப்பட்டிருக்க வேண்டும். இவ்வகை அமைப் பில் ஒரு சாவிக்கு வேண்டிய விசையில் அரைப்பங்கு மட்டுமே பயன்படுத்தினால் போதும். எந்திரச் சுருள்வில் க. வேதகிரி எந்திரவியல் துறையில் மட்டுமன்றி, அனைத்துத் தொழில்நுட்ப அமைப்புகளிலும் சுருள்வில் பலவாறு பயனளிக்கத் தக்க வகையில் உள்ளது. சுருள்வில் என்பது மீள்திறனுள்ள கம்பிச் சுருளாகும். மீள் திறன் பெற்றுள்ள உலோகத்தினைக் கொண்டு சுருள் சுருளாக வளைத்து உருவாக்கப்பட்ட கம்பியின் அமைப்பினைப் பெறுவதையே சுருள்வில் (spring) விசையில் வில்லின் என்பர். நாணேற்றி, அதன் திறனைப் பெறுவதைப் போலச் சுருள் சுருளாக அழுத் தப்பட்டு, அதன் பயனாக நீளும் போது விசையினைப் பெறுவதால் இதனைச்சுருள்வில் எனக் கொள்ளலாம். மீள்திறனைச் சரிவரப் பெற்றுள்ள உலோகத்தினால் செய்யப்படுவதால், சுருங்கியும் விரிந்தும் பயனளித்து மீண்டும் பழைய நிலையினை அடைந்து விடும். சுருள்வில்லின் இத்தகைய மீள்தன்மை அமுக்கத் நிற்கு உள்ளடங்கி, நீள்தன்மையினால் விரிவடையும் போது ஏற்படுத்தும் விசை, பொறியியல் துறை யில் பல வியக்கத்தக்க செயல்களைச் செய்கிறது. சுருள்வில் சுருக்கமடையும்போது ஆற்றலைத் திரட்டி வைத்துப் பின்னர் விரிவடையும்போது தகுந்தவாறு வெளிப்படுத்துகிறது. செயல்படச் பயன்கள். அதிர்வுகளால் ஏற்படும் ஆற்றல்களைச் சேகரித்தும், கட்டுப்படுத்தியும் அதிர்ச்சி விளைவு களைக் குறைத்தும் சுருள்வில்கள் பயன்படுத்தப்படுகின்றன. நீராவிப் பொறி-இரயில் வண்டிகளிலும், தானியங்கிகளிலும் அதிர்வு தாங்கி யாகச்சுருள்வில் சிறப்பான பயனைத் தருகிறது. பயன் வில்விசையினைத் தக்க நேரத்தில் சுமுகமாக அளிக்கச் சுருள்வில் பெரிதும் பயன்படுத்தப்படு கின்றது. உதாரணமாக, கொதிகலன்களில் படுத்தப்படும் அடைப்பிதழ்கள் (valves), தானியங்கி ஊர்திகளில் உள்ள (clutch) ஊடிணைப்புப் போன்றவற்றில் சுருள்வில்லின் பங்கு போற்றுதற் குரியது. தொடர்பில் உள்ள இரண்டு பகுதிகளில் தொடர்பு விட்டுப் போகாதவாறு சீரான நிலையில் வைத்திருக்கவும் தகுந்த அமுக்கத்தினைச் செலுத்து வதற்கும் சுருள்வில் சீரிய முறையில் பயன்படுகிறது. எடுத்துக்காட்டாக, நெம்புருள் (cam), அதன் பின் பற்றி (follower) ஆகியவை சுருள்வில்லின் சிறப்பான இயல்பினைப் பெறுகின்றன. இயக்கத்திலுள்ள பளுவான பொருள்களைத் தாங்கவும், எந்திரத்தில் ஏற்படும் அதிர்ச்சியைக் குறைக்கவும் அல்லது தடுக்கவும் சுருள்வில் பெரிதும் உதவுகின், றது. வாறு சுருள்வில்லின் தன்மைகளைப் பொறுத்து ஏற்ற விசைகளை உண்டாக்கவும் செலுத்தவும் முடியும். அவ்வப்போது இயக்கத்தில் ஏற்படும் ஆற்றலைச் சேகரித்துப் பின்னர் சீரான தரத்துடன் வெளிப்படுத்தச் சுருள்வில்கள் உதவுகின்றன. இம் விளையாட்டுப் முறையில் சுருள்வில் கடிகாரம், பொருள், துப்பாக்கி போன்றவற்றில் செயலாற்று கிறது. வகை, ம் விலக்கங்களைத் (deflections) தாங்கும் ஆற்றலைப் பொறுத்துச் சுருள்வில்கள் பாகுபடுத்தப் படுகின்றன. இவை விதவிதமான வடிவங்களிலும், அமைப்புகளிலும் இருக்கின்றன. ஆற்றல், திறன்