உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எந்திரச்‌ சுருள்வில்‌ 219

எந்திரச் சுருள்வில் 219 அமைப்பு, அளவு ஆகியவற்றிற்கு ஏற்றவாறு சுருள் வில் பலவாறு வகைப்படுத்தப்படுகின்றது. பொ துவாகச் சுருள்வில் மூன்று வகைப்படும்: அவை சுழல்விசைச் சுருள்வில், நெகிழ் நிலைச் சுருள் வில், நீள்விசைச் சுருள்வில் அல்லது அழுத்தச் சுருள்வில் எனப்படும். சுழல்விசைச் சுருள்வில். இதில் இரண்டு வகை கள் உண்டு. ஒன்று எழுவில் அல்லது திருகு சுழல் அமைப்பு, மற்றொன்று உருளை வடிவ அமைப்பு. திருகு சுழல் அமைப்பில் உருளை வடிவமும்,கூம்பு வடிவமும் உண்டு. பிறிதொரு வகையான உருளை வடிவ அமைப்பில், தண்டு போன்றும் வளையம் போன்றும் சுருள்வில் அமைக்கப்படும். மிகச் சிறிய சுழல் திறனைக் கடத்தவும் நெகிழ்வுத் தன்மையுடைய (flexible) இயக்கங்களில் சுழற்சியையோ சுழல்திற னையோ எளிதாகச் செலுத்தவும் ஒரு மென்மை யான அதிர்வு தாங்கியாகச் சுருள்வில் பயன்படுகின் றது. கதவுகளின் இணைப்பிலுள்ள கீல் (binge), தானியங்கி ஊர்திகளில் சுழற்சியினை உண்டாக்க உதவும் இயக்கிகள் (starters). மின்னியக்கிகளில் உள்ள பிடிப்பான்கள் (holders) ஆகியவற்றில் சுழல் விசைச் சுருள்வில்லின் பயன் குறிப்பிடத்தக்கதாகும். இதன் அமைப்பு படம் 1 - இல் காட்டப்பட்டுள்ளது. நெகிழ் நிலைச் சுருள்வில். இவ்வகையில் எழுவில் வடிவம், நீள் அல்லது அகச் சுருள் (spiral) வடிவம், தட்டை வடிவம் (flat), தகட்டு வடிவம் (disc) நான்கு வகைகள் உண்டு. என நீளமான அல்லது அமுக்கப்பட்ட அமைப்பு. இவற் றில் சுருள்வில், வளையமாகவோ பாளமாகவோ, உருவாக்கப்படும். மேற்கூறப்பட்டவைகளுள் வட்ட வடிவக் குறுக்கு வெட்டுத் தோற்றமுடைய திருகு சுழல் அமைப்பில் உருவான எழு சுருள் வில்லே (helical spring) சிறப் பானது. மற்றும் தகடு தகடுகளாகப் பொருத்தி உருவாக் கப்படும் சுருள்வில் அமைப்பு (leaf spring) அதிக அளவு பயனளிக்கக்கூடியது. இத்தகைய சுருள்வில்கள், அவை பயன்படுத்தப்படும் வேலைகள், செய்யப்படும் உலோகம் ஆகியவற்றைப் பொறுத்துக் குளிர்ந்த நிலையிலோ சூடேற்றப்பட்ட நிலையிலோ சுருள் சுருளாக்கப்படும். எழுவில்லின் சிறப்பியல்புகள். இதன் அமைப்பு படம் 1 - இல் விளக்கப்பட்டுள்ளது. இத்தகைய சுருள் வில், அச்சு மையச் சுமைகளை எளிதாகத் தாங்கு கின்றது. இத்தகைய வடிவத்தினை உற்பத்தி செய் வதும் எளிது; மிகவும் நம்பகமானது: வெவ்வேறான ஆற்றல் எல்லைகளிலும் கிடைக்கும். இத்தகைய சுருள்வில்லின் தன்மை அடிக்கடி பயன்படுத்துவ கம்பிலிட்டம் (d) T C (p) புரியிடைத்தூரம் வில்விட்டம் படம் 1. எழுவில் சுருள்வில் தால் மாறிவிடாது; அது மட்டுமன்று இத்தகைய சுருள்வில்லின் இயல்புகளை நுட்பமாகக் கணிக் கலாம்; இதன் அளவீடுகளைத் தகுந்தவாறு மாற்றி. வேண்டும் வில்விசைகளைப் பெறலாம். . தகட்டுச் சுருள் வில்லின் சிறப்பியல்புகள். இதன் அமைப்பு படம் 2-இல் விளக்கப்பட்டுள்ளது. தகட்டுச் சுருள்வில், மீள் திறனுள்ள உலோகத்தினால் ஆன தகடுகளை ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கி அமைக்கப் படுகின்றது. து மையத்தில் இணைப்பிற்குள்ளாக் கப்பட்டு ரு முனைகளிலும் சுமை அல்லது பளுவிற் குள்ளாக்கப்படுகின்றது. ஒரு தாங்கு நெம்புகோல் போன்று தகட்டுச் சுருள்வில் பயன்தருகிறது. இத்தகடுகள் யாவும் சீரான வளைவுகளைப் பெறுவதற்கு ஏற்றவாறு அடித்து வைத்துச் செய்யப்படுகின்றன. தகடுகளின் நீளம் வெவ்வேறானது. இவை எந்திர அமைப்பு களில் குறைந்த பரப்பினையே ஆக்கிரமிக்கின்றன. மேலும், இவை மிக அதிக அளவில் சுருள்வில் தன்மையும் (spring rate), அதிக அளவு சுமை தாங்கும்