224 எந்திரத் திருகுமரை
15.0 12D 3-40 224 எந்திரத் திருகுமரை இருக்கும். அன்றியும் மரைகளின் ஊடே கசிவுகள் ஏற் படுவதும் நிறுத்தப்படும். வளை மூடித் திருகுமரை. இதன் அமைப்பு படம் 3இல் விளக்கப்பட்டுள்ளது. இதன் மூடி கோள வடிவில் இருக்கும். உருளை வடிவத் திருகு மரை. வட்டப் பட்டகை யாகவோ உருளை வடிவமாகவோ இதன் வடிவம் இருக்கும். இத்திருகுமரையை முடுக்குவதற்கோ கழற்றுவதற்கோ ஏற்ற வகையில் வளைப்பரப்பில் துளைகள் இடப்பட்டிருக்கும். இத்துளைகளைத் திருப்புளி கொண்டு முடுக்கலாம் (படம் 4 -அ). வளைய வடிவத் திருகுமரை. இது ஒரு வளையம் போன்ற அமைப்பினைப் பெற்றிருக்கும். இதனை இயக்குவதற்கு ஏற்ற வகையில் வளைப்பரப்பில் வரிப் பள்ளங்கள் துருவப்பட்டிருக்கும். இதற்கெனத் தனிப்பட்ட 'C' வடிவப் புரிமுடுக்கி பயன்படுத்தப் படும். பெரும்பாலும் இத்திருகுமரைகள் இரண்டா கவே பயன்படுத்தப்படும். ஒன்று மற்றொன்றிற்குப் பூட்டமைவாகச் (locknut) செயல்படும் (படம் 4-ஆ). 0.13 1.8D 1.50 0.5D T 0.2D ¡A D 0.6D. D C Ci படம் 4.இ 0.80 0.8D 0.2D படம் 4.ஆ. இறகுத் திருகு மரை. இதன் எளிய அமைப்பு படம் 4 இ-இல் விளக்கப்பட்டுள்ளது. இதனை இயக்குவதற்குக் கருவிகள் தேவையில்லை. கட்டை விரலையும் அடுத்த விரலையும் கொண்டு தேவைக் கேற்றவாறு முடுக்கலாம். இவை பெரும்பாலும் விளையாட்டுக் கருவிகளிலும் மர இணைப்புகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. படம் 5. பூட்டமைவுத் திருகுமரை பூட்டமைவுகள். எந்திரங்களின் இணைப்பில் இருக்கும் திருகு மரைகள் அதிர்வினால் கழன்று விடக்கூடும். இதனால் இணைப்புப் பகுதிகள் சிறிது சிறிதாக விடுபட்டு இயக்கத் தடைகளோ இணைப்பு முறிவோ ஏற்படக் கூடும். மரை ஆணி கழலாமல் இருக்கும் பொருட்டுத் தனிப்பட்ட சிலவகைத் திருகுமரை வழக்கில் உள்ளன. அவற்றுள் சில 0.2D