உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 எந்திரம்‌, அறுவடை

238 எந்திரம் அறுவடை கண்டுபிடிப்பால், அறுவடைக்குத் தொழிலாளர்களை நம்பி இருப்பது முற்றிலுமாகத் தவிர்க்கப்படக்கூடும். தற்போது தேவையான அளவில் மரங்களும் திராட்சைப்பழங்களும் எந்திரங்களால் அறுவடை செய்யப் படுகின்றன. இதில், மரங்களும், திராட்சைக் கொடிகளும் ஒரு கருவியால் நன்கு அசைக்கப்பட்டு அவற்றிலிருந்து விழும் பழங்கள், அதற்குரிய தட்டு பின் களில் திரட்டப்படுகின்றன. அவை பெரிய தொட்டிகளுக்கு மாற்றப்படுகின்றன. இம்முறை மொத்தமாக நீக்கும் முறை (mass removal method ) எனப்படும். பொதுவாக, அனைத்து அறுவடை எந்திரங்களும் அறுவடை செய்ய வேண்டிய பயிர்களை, முதிர்ந்தவை முதிராதவை என்று வேறுபடுத்திக் காட்டக்கூடியவை யாக அமைந்திருப்பதில்லை. அதனால், அனைத்துப் பயிர்களுமே ஒன்றாக அறுவடை செய்யப்படுகின்றன. ஆனால் கீரைச் செடிகளை அறுவடை செய்யும் எந்திரங்கள், மின்னணுவியல், முறையில் முதிர்ந்த கீரைத் தளையை (head of lettuce) அறுவடை செய்து, முதிராதவற்றைப் பின்னர் அறுவடை செய் வதற்காக விட்டு விடுகின்றன. இதைப்போலவே வெள்ளரிக்காய்களை அறுவடை செய்யும் எந்திரங் களும், பெரிய காய்களை மட்டும் அறுவடை செய் கின்றன. தக்காளியை அறுவடை செய்யும்போது, முழுச் செடியும் எந்திரங்களால் பிடுங்கப்பட்டுப் பின்னர், எந்திரங்களில் பழங்கள் நீக்கப்படுகின்றன. இவற்றில் கனிந்தவற்றையும் காய்களையும் தனித் தனியாகப் பிரிப்பதற்குத் தொழிலாளர்கள் தேவைப்படுகின்ற இதே முறையில் உருளைக் கிழங்குகளும் அறுவடை செய்யப்படுகின்றன. னர். மக்காச் சோளம் பறிக்கும் எந்திரத்தில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட உருளிகள் பயிரினூடே சென்று படம் 3. உருளைக்கிழங்கு அறுவடை செய்யும் எந்திரம் படம் 5. பருத்தியைப் பறித்தெடுக்கும் எந்திரம் படம் 4 மக்காச்சோளம் பறிக்கும் எந்திரம், படம் 6. கரும்பு - அறுவடை எந்திரம்