உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எந்திரம்‌ பால்பண்ணை 239

சோளக் கதிர்களைத் தனியாக அறுவடை செய்கின் றன. தேவையற்ற உமி போன்ற பொருள்கள் தனி யாக நீக்கப்படுகின்றன. படம் 7. புகையிலை அறுவடை எந்திரம். படம் 8. செதுக்கும் கத்தியுடன் அமைந்த கால்நடைத் தீவன அறுவடை எந்திரம். பருத்தி,கரும்பு, புகையிலை, கால்நடைத்தீவனம் போன்றவற்றை அறுவடை செய்யும் எந்திரங்கள் படங்கள் 5,6,7,8 ஆகியவற்றில் காட்டப்பட்டுள்ளன. எந்திரம், பால்பண்ணை வா, அனுசுயா பால், பால் பொருள்கள் போன்றவற்றை உற்பத்தி செய்யவும். செயல்படுத்தவும் உதவும் கருவிகள் பால்பண்ணை எந்திரங்கள் எனப்படும். பால்கறக்கும் எந்திரம் பால்பண்ணை 239 எந்திரம், பாலேடு நீக்கி (cream separator), குளிர் விக்கும் கலம், பாலைச் சூடாக்கித் தூய்மை செய்யும் கருவி (pasteurizors), செயற்கைப் பால் உண்டாக்கும் கருவி (homogenizers), வெண்ணெய் தயாரிக்கும் கருவி, ஆவியாக்கும் கலம், உலர்விப்பான் போன்ற கருவிகள் பால் பண்ணை எந்திரங்களுள் அடங்கும். இக்கருவிகள் எளிமையாகத் தூய்மை செய்யவும். பால், பால் பொருள்கள் ஆகியவை தூசு, எண்ணெய், கரையக்கூடிய உலோகங்கள், பூச்சிகள், சில வெளிப் பொருள்கள் இவற்றால் மாசுபடுவதைத் தடுக்கவும் வடிவமைக்கப்படுகின்றன. . கட்டமைப்பும், வடிவமைப்பும். இக்கருவிகள் பெரும் பாலும் துருப்பிடிக்காத எஃகினால் செய்யப்படுகின் றன. இவ்வகை எஃகினாலான கருவியின் பகுதி பால், உணவுப் பொருள்களுடன் நேரடித்தொடர்பு கொள் ளும்போது எவ்விதத் தீங்கும் ஏற்படுவதில்லை. அப் பொருள்களின் மணமும் கெடுவதில்லை. ஆனால் நீண்ட நாள்களுக்கு உணவுப் பொருள்களுடன் தொடர்பு கொண்டிருந்தாலோ, அரிமானத்தைத் தடுக்கும் ஆக்சைடு படலம் நீக்கப்பட்டாலோ, இக்கரு விகள் அரிக்கப்படுகின்றன. குளோரினுடன் நீண்ட நாள் தொடர்பு கொண்டிருந்தால் ஆக்சைடு படலம் நீக்கப்படுகிறது. ஆகவே. துருப்பிடிக்காத எஃகு பகுதிகளை அழுக்கு நீக்கும் கரைசலைக் கொண்டு ஒழுங்காகத் தூய்மைப் படுத்த வேண்டும். மேலும் இக்கருவிகளைப் பயன்படுத்துவதற்கு முன்னர் தூய்மைப்படுத்தினால், குளோரினுடன் அதிகமாகத் தொடர்பு கொள்வது தவிர்க்கப்படுகிறது. பால் பண்ணைக் கருவிகளின் பரப்புகள், ஹைபோ கு ளோரைட் கரைசலினால், தூய்மைப்படுத்தப்படு கின்றன. நவீன பால்பண்ணைக் கருவிகளைத் தனித்தனி யாகப் பிரிக்காமல், இருக்கும் இடத்திலேயே தூய்மைப்படுத்தும் வகையில் இவை வடிவமைக்கப் பட்டுள்ளன. இம்முறையில் அழுக்கு நீக்கும். தூய்மைப்படுத்தும் கரைசல்கள், கருவி முழுதும் எக்கிகளால் (pumps) செலுத்தப்படும். கருவிகள் வழவழப்பான பரப்புகளைக் கொண்டவாறு வடிவ மைக்கப்படுவதால் உணவுப் பொருள்கள் அப் பரப்புகளில் படிவதில்லை. பால் பண்ணை, உணவுப் பொருள் கருவிகளின் வடிவமைப்பு, கட்டமைப்பு, செயல்முறை தூய்மைப் படுத்தல் ஆகியவை 3 -A என்ற செந்தரத்தின்படி (standard) அமைகின்றன. இந்த 3- A செந்தரம் பொருள்களின் கட்டுத்தன்மை, தடிமன், பரப்புச் சீர்மை, முனைகள் மற்றும் இணைப்புகளின் வடிவ மைப்பு, அளவு, ஆற்றல் தேவைகள், பயன்படுத்தும் முறை ஆகியவற்றைப் பற்றி அறிய உதவுகிறது. எக்கிகள், அசைக்கும் கருவிகள் (agitators), மைய விலக்குக்கருவிகள் (centrifuges), செயற்கைப் பால்