உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 எந்திர வகைப்பாடு

256 எந்திர வகைப்பாடு மணல் என்றும், குறைந்த அளவுடையவை என்றும் குறிப்பிடப்படுகின்றன. சேறு என்ற இவ்வகைப்பாடு வேதி உட்கூறுகளினால் வேறுபடும் பொருள்கள் அவற்றின் ஒப்படர்த்தியின்படி எந்திரமுறையில் வகைப்படுத்தப்படுகின்றன. இது நீர்மப் பிரிப்பு முறை எனப்படும். ஒரே ஒப்படர்த்தியும் வேறுபட்ட அளவும், வடிவமும் கொண்ட பொருள்கள் வேறுபட்ட வேகங்களில் படிவுகளாகப் படிகின்றன கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்துள்ளது. பெரிய, கனமான உருண்டையான பொருள்கள் சிறிய, லேசான, ஊசிவடிவப் பொருள் களை விட விரைவாகப் படிகின்றன. இப்பொருள் களின் ஒப்படர்த்தி வேறுபடும்போது, படிவுகளாகப் படியும் வேகம் மேலும் மாறுபடக்கூடும். ஆகவே பொருள்கள் அவற்றின் அளவைப் பொறுத்து மட்டு மன்றி, அவற்றின் வகையைப் பொறுத்தும் பிரிக்கப் படுகின்றன. எந்திர முறை வகைப்படுத்தும் எந்திரங்கள் படிவு வேகங்களில் (settling velocity) உள்ள வேறு பாட்டைப் பயன்படுத்தி உட்செலுத்தும் கலவையைத் தொடர்ச்சியான ஓட்டமுடைய பாய்மத்துடன் தொடர்பு கொள்ளச் செய்கின்றன. பின் அப்பொருள் கள், அப்பாய்மத்திற்கு ஏற்ற படிவு வேகத்தை அடை கின்றன. பிறகு, பாய்மத்தின் ஓட்ட விகிதத்தைச் சரிசெய்வதன் மூலம், குறைந்த படிவு வேகத்தைக் கொண்ட சிறு பொருள்கள் நீக்கப்படுகின்றன. பெரிய அளவுடைய பொருள்கள், மிக விரைவாகப் படிகின் றன. அவை வகைப்படுத்தும் எந்திரத்தின் அடிப்பகுதி யில் மணல் வடிவில் தொகுக்கப்பட்டு, நீக்கப்படு கின்றன. வகைப்பாட்டு எந்திரத்தினுள் பொருள்கள் ஒன்றை யொன்று தொடாமல் விலகி இருந்தால், அவை எளிய முறையில் படிவுகளாகப் படிகின்றன. அப் பொருள்கள் மிகவும் நெருக்கமாகக் காணப் பட்டால் அவை, தடங்கல் முறைப்படிதல் (hindered settling) என்ற வகையில் படிகின்றன. இம்முறையில் படிவு வேகம் எளிய முறையின் வேகத்தைவிடக் குறைவாகவே உள்ளது. ஆனால் இதில் பயன்படும் எந்திரத்தின் கொள்ளளவு அதிகமாக உள்ளது. இம் முறையில், ஒப்படர்த்தியின் வேறுபாட்டைக் கொண்டு பொருள்கள் பிரிக்கப்படுகின்றன. 刷 வகைப்படுத்தும் எந்திரம், (wet classifier). கிடை வை கிடைமட்டப் பாய்வு செங்குத்தான பாய்வு என்ற வகைகளில் அமைக்கப்படுகின்றன. செங்குத்துப் பாய்வில் ஒப்படர்த்தியைப் பொறுத்தும். மட்டப் பாய்வில் பொருள்களின் அளவைப் பொறுத் தும் எந்திரங்கள் பிரிக்கப்படுகின்றன. டார் வகைப் படுத்தும் எந்திரம் கிடைமட்டப் பாய்வு வகைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். காற்று வகைப்படுத்தும் எந்திரம். இவை, காற்றுப் பாய்வைக் கொண்டு, பொருள்களின் அளவைப் பொறுத்துப் பிரிக்கின்றன. இவை ஈரமான வகைப் சேறு வழிந்தோடுதல் நீர்ம மட்டம் மின்னோடி மணல் வெளியேற்றம் உட்செலுத்தும் தொட்டி மேல்நோக்குச் சாய்வு படம். டார் வகைப்படுத்தும் எந்திரம் உட்செலுத்தம் சரிசெய்யக்கூடிய கட்டுப்பாட்டிதழ் காற்றுச் சுழற்சி திறப்புகள் நுண்ணியவை மின்னோடி விசிறி அலகு பிரிப்பான் அவகு பகிர்வுத்தட்டு உள்கூம்பு வெளிக் கூம்பு பெரிய அளவுடையவை படம் 2. இரட்டைக் கூம்பு காற்று வகைப் படுத்தும் எந்திரம் படுத்தும் எந்திரங்களை விட மிக நுட்பமாகப் பொருள்களைப் பிரிக்கின்றன. இரட்டைக் கூம்பு காற்று வகைப்படுத்தும் எந்திரம் (double cone air seperator) இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். இதில் பலவகைப்பட்ட அளவைக் கொண்ட பொருள்களின் கலவை. கிடைமட்டமாகச் சுற்றும் பகிர்வுத் தட்டின் மீது உட்செலுத்தப்படுகிறது. இப் பகிர்வுத் தட்டு (distributor plate) விசிறி அலகு களைக் (fan blades) கொண்ட செங்குத்தான அச்சுத்தண்டால் இயக்கப்படுகிறது. இத்தட்டு