உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 எப்பித்திலியோமா

260 எப்பித்திலியோமா 10 mm

  • 10 mm

மைப்பும் ஒரே ஒரு முனையில் முறிவு பெற்று ஊசி அமைப்புடன் காணப்படுகிறது. (100), (001) 'பட்டகப் பகுதிகளில் அதிகமாக வரியமைப்புகள் (striation) உள்ளன. இணையாகவும், வெவ்வேறு திசையில் பிரிந்தும், நாரிழையாகவும் காணப்படு கிறது. சிறு மணி போன்ற அமைப்பும், பலவிதமான அளவும், நுண்ணிய துகள் அமைப்பும் காணப்படும். பிளவு (001) தளத்தில் சீராகவும், (100) தளத்தில் சீரற்றும் காணப்படுகிறது. முறிவு ஒழுங்கற்றது, நொறுங்குத் தன்மையுடையது. கண்ணாடி போன்ற பளபளப்புடையது. கடினத்தன்மை எண் 6-7 ஆகும். அடர்த்தி எண் 3.25-3.5 வரை மாறுபடுகிறது. மஞ்சள் கலந்த பச்சை, பழுப்பு நிறப்பச்சை, பச்சை கலந்த கறுப்பு, கறுப்பு ஆகிய நிறங்களில் கிடைக் கிறது. சில சமயங்களில் சிவப்பு, மஞ்சள், சாம்பல் நிறம், சாம்பல் கலந்த வெள்ளை ஆகிய நிறங் களிலும், அரிதாக நிறமற்றும் காணப்படும். வரிகள் சாம்பல் நிறத்திலும், நிறமற்றும் காணப்படுகின்றன. ஒளி ஊடுருவும். தன்மைகளையும் ஊடுருவாத் பெற்று உள்ளது. . பொதுவாக தூய்மையற்ற கல்கேரியப் படிவுப் பாறைகள், அனற்பாறைகள் முதலியவற்றின் உரு மாற்றத்தால் எப்பிடோட் (epidote) உண்டாகிறது. நைஸ் அடுக்குப்பாறை, அபிரகச் சிஸ்ட், ஆம்பிபோல் சிஸ்ட் செர்பென்ட்டீன் முதலிய பாறைகளில் அதிகமாகக் காணப்படும். குவார்ட்சைட், மணற் பாறை, சுண்ணப்பாறை முதலியவற்றிலும் காணப் படுகிறது. எப்பிடோட், மாக்னடைட், ஹேமடைட் படிவுகளிலும் காணப்படுகிறது. குவார்ட்ஸ், ஃபெல்ஸ்பார், ஆக்டினோலைட், ஆக்சினைட், குளோ ரைட் முதலியவற்றுடன் இணைந்து காணப்படுகிறது. ஆஸ்திரியாவில் காப்பன்வண்ட்டிலும், இத்தாலியில் பீட்மோண்ட்டிலும், சுவிட்சர்லாந்திலுள்ள செயிண்ட் காட்ஹார்டு, டிக்கினோ மாவட்டங்களிலும், நார்வே யில் அரென்டாவிலும், அமெரிக்காவில் நியு ஹாம் ஹையரிலும், யூரல் மலை, அலாஸ்கா முதலிய இடங்களிலும் இது காணப்படுகிறது. இரா. சரசவாணி எப்பித்திலியோமா வளரக் தோல்புற்றில் (epithelioma) முனைப்பாக கூடிய இந்நோய் மிகுதியாகக் காணப்படுவதில்லை. முகத்திலும் பாதங்களிலும் தானாகத் தோன்றும் இந்நோய் வயதானோரிடம் அதிகம் காணப்படும். பொதுவாகப் புற்று தோன்றும் நிலையான போவன் நோய் (bowen's disease), வாயில் தோன்றும் வெண் தோல் மாற்றம் (leukoplakia), முலைக்காம்பில் உண்டாகும் பேஜட் நோய் (pagets disease of nipple) எக்ஸ்கதிரால் வரும் தோல் அழற்சி, நாட்பட்ட தீ வடுவால் உண்டாகும் மார்ஜோலியன் புண் (mar- jolin's ulcer) முதலியவற்றாலேயே எபித்திலியோமா அதிகம் உண்டாகிறது. இவை தவிர சிரையில் உண் டாகும் நாட்பட்ட புண், தோல் காச நேயால் ஏற் படும் புண் (chronic lupus vulgaris lesion). சாயங் கள், தார், மற்றும் புகை முதலியவை தோலை அரித்துப் புற்றை உண்டாக்கும். எபித்தீலியோமா புண்களின் ஓரம் ஒழுங்கற்று உயர்ந்து, வெளிப்புறம் உருண்டு காணப்படும். அடிப்பகுதி தடித்தும், நாட்பட்ட நிலையில் அடியில் உள்ள திசுவில் பரவியும் காணப்படும். இரத்தம் கலந்த நீர் வரும். இரண்டாம் நிலைத் தொற்றினால் இது மிகுவதோடு நிணநீர்க் கணுக்கள் வீர்த்து மியூக்காய்டு நலிவுடன் காணப்படும். அரிதாகத் தொற்றினால் நிணநீர்க் கணு வீர்க்கலாம். மருத்துவம். திசு ஆய்வு உறுதியானவுடன் சுற்றி உள்ள நல்ல திசுவுடன் சேர்த்து இப்புற்றை வெட்டிக் களைய வேண்டும். பின் ஒட்டுறுப்பு அறுவை மூலம் தோல் எடுத்து ஒட்ட வைக்கலாம். கட்டியின் அளவு, நோயாளியின் தன்மைகளைப் பொறுத்து எக்ஸ் கதிர் மருத்துவம் கொடுக்கப் புற்று மாறும். பாதிக்கப்பட்ட நிணநீர்க்கணுக்களை நுண் ணுயிர் எதிர் மருந்துகள் அளித்தும் குறையாவிட்டால் பாதிக்கப்பட்டவைகளை மொத்தமாக வெட்டிக் களைய வேண்டும். அசையாக் கணுக்களை, அதாவது