உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எர்காட்‌ நச்சு 265

எர்காட் நச்சு 265 நாளடைவில் பூசண இழைகள் ஒன்று சேர்ந்து கரும்பழுப்புநிற இழை முடிச்சுகள் ஏற்படுகின்றன. இந்த இழை முடிச்சை எர்காட் என்று குறிப்பிடு கின்றனர். இவை நேராகவோ வளைந்தோ கடின மான அமைப்பைப் பெற்றிருக்கின்றன. இழை முடிச்சு முளைத்து வெளிவரும் வித்துக் குடுவையில் (perithe cia) நீண்ட நிறமற்ற உள்வித்துக் கூடுகள் (asci) உண் டாகின்றன. உள்வித்துக்கூடு ஒவ்வொன்றிலும் எட்டுக்குடுவை உள்வித்துகள் (ascospores) உண்டா கின்றன. இவ்வித்துகள் காற்றின் மூலம் பரவிப் பூக்களி லுள்ள சூல்பையைப் பாதிக்கின்றன. நாளடைவில் பாதிக்கப்பட்ட கதிர்களிலிருந்து பழுப்பு நிறத்தில் இனிப்பான தேன் போன்ற நீர்மம் சொட்டுச் சொட் டாக வடிந்து கொண்டிருப்பதைக் காணலாம். இதற்குத் தேன் பனி நிலை என்று பெயர். பின்பு பூஞ்சையின் இழைகள் கெட்டியாகி அடர் பழுப்பு நிறத்தில் காய்ந்து விடுகின்றன. நாளடைவில் தானியத்திற்கு மாற்றாகக் கரும்பச்சைநிற எர்காட் என்னும் இழை முடிச்சுகள் தோன்றுகின்றன. இவை தானியத்தை விடப் பெரியவையாகவும் காணப்படும். நீண்டும் முதலில் மண்ணில் விழுந்துள்ள எர்காட் முளைத்து வெளிப்படுத்தும் குடுவை உள்வித்துக்கள் பூக்களின் சூல்பையில் நுழைந்து அறிகுறியைத் தோற்றுவிக்கின்றன. ஒரு செடியிலிருந்து பிற செடி களுக்குத் தூள்வித்துகள் பரவி அறிகுறியைத் தோற்றுவிக்கின்றன. பூச்சிகள் மூலமும் மழைத்துளி கள் விழுந்து சிதறும் பொழுதும் தூள்வித்துக்கள் பரவுகின்றன. . எர்காட்களில், எர்கோட்டாக்சின், எர்கோட்டா மின், எர்கோமைட்ரின் போன்ற அல்கலாய்டுகள் அடங்கியுள்ளன. எனவே தானியங்களுடன் எர்காட் கள் கலந்திருந்தால் அவற்றைக் கவனியாமல் மிகுதி யாக உட்கொள்ளும்போது கேடு விளைகிறது. உடம்பின் உட்சென்ற எர்காட்டால் உடல்நிலை பாதிக்கப்பட்டுத் தாகம், வயிற்றுவலி, வாந்தி, வயிற்றுப் போக்கு, மூளைக்குழப்பம் ஆகிய அறிகுறி களும் சில சமயங்களில் ஏற்படலாம். குறிப்பாக இது கண்பார்வையைப் பாதிக்கும். எர்காட் அல்கலாய்டு கள் மருத்துவப் பண்புகளைப் பெற்றுள்ளன. பேறு காலத்தின்போது இரத்தப் போக்கைத் தடுப்பதற் கும், கருப்பை சுருங்குவதற்கும் கருச்சிதைவின்போதும் எர்காட் பயன்படுகின்றது. எர்காட்டிலிருந்து பிரித் தெடுத்த எர்கோட்டாமின் என்ற ஆல்கலாய்டு ஒற் றைத் தலைவலியை நலப்படுத்தப் பயன்படுகின்றது. ரை பயிர் மலர்ந்திருக்கும்போது கிளாவிசெப்ஸ் பர்பூரியா பூசணவித்துகளை நீரில் கலந்து தெளித்து எர்காட்களைத் தோற்றுவித்தல் பொதுவாகக் கையாளப்பட்டது. தமிழகத்தில் உதகமண்டலத் திலும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலும் இதற்கான திட்டங்கள் செயல்பட்டன. அண்மைக்காலத்தில் . வேதி முறையில் அல்கலாய்டு தயாரிப்பதால், பூசணத் தைப் பயன்படுத்தி அல்கலாய்டு அடங்கியுள்ள எர்காட் தயாரிப்பது கைவிடப்பட்டுள்ளது. கம்புப் பயிரில் தோன்றும் எர்காட்டால் பயிர் விளைச்சல் பாதிக்கப்படுகின்றது. குளிர் காலத்தில் கம்புப் பயிர் கதிர்விடும் போது எர்காட் மிகுதியாகத் தோன்றுகின்றது. எனவே குளிர்காலத்திலும் மழைக் காலத்திலும் கதிர் பறிக்கும் பருவத்தைத் தவிர்க்க விதைப்புக் காலத்தை மாற்றியமைக்கலாம். எர்காட் அறிகுறியான தேன்பனிநிலை உடனேயே அக்கதிர்களைப் பிடுங்கி வேண்டும். கதிர் பறிக்கும் சமயத்தில் டைத்தேன் எம் 45 என்ற பூசணக் கொல்லியை ஏக்கருக்கு 400 கிராம் வீதம் தெளிப்பதால், பயிரில் ஏர்காட், தோன்றுவதைக் கட்டுப்படுத்தலாம். எர்காட் நச்சு கதிரில் தென்பட்ட அழித்துவிட -கா.சிவப்பிரகாசம் கம்பு போன்ற கூல வகையைச் சார்ந்த கிளாவிசெப்ஸ் பர்பூரியா என்னும் காளானால் ஏற்படும் நச்சு எர்காட்டிசம் (ergotism) என்பர். வின ளைவுகளை இதில் இரண்டு வகைகள் உள்ளன. அவை அழுகிய நசிவு வகை (gangrene), தசை இறுக்கங்களும் வலிப்பு ம் கொண்ட நரம்பு வகை களும் என்பன. கிளாவிசெப்ஸ் பர்பூரியா கூல வகைக் கம்பால் செய்யப்பட்ட ரொட்டியைச் சாப்பிடுவதால் எர்காட் நச்சு உண்டாகிறது. எர்காட் என்ற மருந்து கருப்பை யின் மீது வினைபுரியும் ஒரு மருந்தாகும். கருச் சிதைவு உண்டாகக் கொடுக்கப்படும் எர்காட்டால் அழுகிய நசிவு நிலை உண்டாகிறது. ஒற்றைத் தலை வலிக்கு எர்காட் கொடுக்கப்படும் போதும் இந்த நச்சு விளைவு உண்டாகலாம். அப்போது கால்களில் வலி, மரத்துப் போகுந் தன்மை, கைகால் விரல்கள் வெளிறிக் குளிர்தல் ஆகிய நிலைகள் தோன்றலாம். பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்வீடன் போன்ற நாடுகளில் சிலசமயம் எர்காட் நச்சு கொள்ளை நோயாகத் தோன்றுகிறது. அழுகிய நசிவு வகை மேற்கு நாடு களில் ஏற்படுகிறது. நரம்பு வகை, ரைன் நதிக்குக் கிழக்கேயுள்ள நாடுகளில் தோன்றுகிறது. எர்கோடாக்சின் அல்லது எர்கோட்டமின் ஆகிய வற்றின் நச்சு விளைவால் அழுகிய நசிவு நிலை தோன்றினாலும், வலிப்புடன் கூடிய நரம்பு வகை, எர்காட் தவிர வேறு ஏதோ இனந்தெரியாத ஒரு பொருளால் உண்டாவதாகத் தெரிகிறது. இத்துடன் உணவில் வைட்டமின் A குறைபாடும் ஒரு மாகக் கருதப்படுகிறது. காரண