உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 எரிபொருள்‌ எக்கி

288 எரிபொருள் எக்கி (அ) (ஆ) படம் 2. (அ ) (ஆ) எந்திரவியல் எக்கி. கீழ்நோக்கித் தள்ளப்படுகிறது. இந்த நெம்புகோல் இயக்கப் புயத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால் இடைத்திரை மேல்நோக்கி நகர்வதை அதன் சுருள் கட்டுப்படுத்துகிறது. இடைத்திரை கீழ்நோக்கி இழுக்கப்படும்போது அதன் மேற்பகுதியில் உள்ள கலத்தில் அழுத்தம் குறைந்து ஏற்றுப்பொறியின் உள்வழி அடைப்பிதழ் வழியே எரிபொருள் தேக்கப் பட்டுள்ள இடத்திலிருந்து உள்ளிழுக்கப்படுகிறது. மீண்டும். இடைத்திரை மேல் எழும்போது உள்வழி அடைப்பிதழ் அடைக்கப்பட்டு வெளிவழி இதழ் திறக்கப்பட்டு, அழுத்தத்திற்குள்ளான எரிபொருள் எரிகலப்பியை நோக்கி வெளியேற்றப்படுகிறது. எரி பொருளின் அழுத்தம் இடைத்திரைச் சுருள் கட்டுப் படுத்தும் அழுத்தத்தைவிடக் குறைவாக இருக்கும் போது எரிபொருள் வெளியேற்றப்படுகிறது. இந் நிலையில் எரிகலப்பியின் மிதவையில் அண்மை அடைப்பிதழ் திறந்திருக்கும். 0° படம் 3. மின்முறை எக்கி.