உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 எரிமலை

294 எரிமலை சமநிலையில் (thermo dynamic equilibrium) உள்ளன. இச்சமன்பாடு புவியின் ஆக்கத்தின் போதே ஏற் பட்டதாகும். ஏதாவது ஒரு பகுதியில் இச்சமன் பாட்டில் மாற்றம் (அழுத்தத்தில் குறைவோ வெப்பத்தில் ஏற்றமோ) ஏற்பட்டால் பாதிக்கப்படும் இடத்தில் உள்ள புவிப்பொருள் திண்ம நிலை யிலிருந்து நீர்ம நிலையைப் பெறும். இந்த மாற்றம் ஏற்படும்போது மாபெரும் அளவுப் பெருக்கம் ஏற் படுவதால் செவ்வெப்பத்தில் (redhot) உள்ள சிலி கேட் பாறைக் குழம்பு மேலே உள்ள குறைவான வலிமையுடைய புவி மேல்தோட்டினுள் நுழைகிறது. சில சமயம் புலியின் மேற்பரப்பிற்கும் வந்துவிடுகிறது. எரிமலைக் குழம்பு 1200° - 1500°C வெப்பநிலை கொண்ட அறுபது கி.மீ. ஆழத்திற்கும் கீழ் உண்டா கிறது. இந்த வெப்ப அளவு பாறையின் உருகு நிலைக்கு மேல் மிகும்போது எரிமலைக் குழம்பின் நிலை நீரியக்கவியல் அழுத்தத்தால் மேலே உந்தப் படுகிறது. அழுத்தம் குறைவதால் எரிமலைக் குழம் பில் இருந்த வளிமங்கள் விடுபடுகின்றன. இவை தொடர்ந்தாற்போல் வெடித்துக் கொண்டே வெளி வருவதால் விரைவாக நடைபெறும் தணலியற் சயல்கள் தோன்றுகின்றன. எரிமலைக் குழம்பு உறைவதால் அனற்பாறைகள் உண்டாகின்றன. எரிமலைத் துளை. பாறைக்குழம்பு வெளிவரும் துளைகள் பொதுவாக பிளவு, குழாய் அமைப்பு என்று வகைப்படுத்தப்படுகின்றன. நிலமட்டத்திற்கு அடியிலுள்ள பிளவுகளிலும் குழாய் அமைப்புகளிலும் உறையும் பாறைக்குழம்பு பல வகை அனற்பாறை களை உண்டாக்குகின்றது. நிலமட்டத்திற்கு மேல் வெளிப்படும் பாறைக்குழம்பு, குழாய் போன்ற துளை களையும், பிளவுகளையும் ஏற்படுத்துகிறது. மூன்று மீட்டர் அகலத்திற்கும் குறைவான பல பிளவுகள் எரிமலையின் உச்சியிலும், அடிப்பகுதியிலும், பக்கங் களிலும் ஏற்படலாம். எரிமலையின் உச்சிப்பகுதி வரை, குழாய்த்துளைகள் ஏற்படுகின்றன. சில எரி மலைகளிலோ, எரிமலைப் பகுதிகளிலோ வெடிப்புத் துளைகள் திரளாக நெருக்கமாக இருந்தால் அவை வெடிப்பு அல்லது பிளவுப் பகுதி (rift zone) எனப் படும். கண்ணாடி எரிமலைப் பொருள். நிலமட்டத்திற்கு வெளிப் படுத்தப்படும் பாறைக் குழம்பு (magma) எரிமலைக் குழம்பு (lava) எனப்படும். இது உடனடியாக உறைந்து திண்மமானால் எரிமலைக் உண்டாகிறது. மெதுவாக உறைந்தால் முழுதுமாக திண்மமாவதற்கு முன்னர் படிகமாகும் மிகு தன்மையைப் பெறுகிறது. எரிமலைக் குழம்பு துளை யின் வாயிலிலேயே கெட்டியாகிப் (accretion) பல சிறு அமைப்புகளை உருவாக்குகிறது. அல்லது வெளியே பாய்ந்து பல கி.மீ தொலைவிற்குச் சிறு ஓடையாகப் பரவுகிறது. பாறைக்குழம்பு தீவிரமாக வெளிப்படும்போது சிறு சிறு துணுக்குகளாகவும் துண்டுகளாகவும் பிரிக்கப்பட்டு, காற்றில் எறியப் படுகிறது. இத்துண்டுகள் வெப்பத்தால் உடைக்கப் பட்ட பொருள்கள் (pyroclastic materials) எனப் படும். காண்க, எரிமலைக் கண்ணாடி. எரிமலைக் குழம்பின் பாகுநிலையைப் பொறுத்தே அதன் பண்பு அமையும். பொதுவாகக் கருநிறமுள்ள பாறைக்குழம்பு (mafic lava சிலிசிக் பாறைக் குழம்பைவிடக் குறைந்த பாகு நிலை பெற்றுள்ளது. கருநிற எரிமலைக் குழம்பு வெடிக்கும் தன்மையற்று ஓடையாக ஓடும் தன்மை கொண்டது. சிலிசிக் எரி மலைக்குழம்பு வெடிக்கக்கூடிய தன்மை பெற்று வெப்பத்தினால் உடையும் பாறைத் துண்டுகளை உண்டாக்குகிறது. சில எரிமலைகள் வெப்பத்தினால் உடைந்த பாறைகளை மட்டும் உண்டாக்குகின்றன. எரிமலைக் குழம்பிலிருந்து வெளியேறும் பொருள்கள் திண்ம, நீர்ம, வளிம நிலைகளில் காணப்படுகின்றன. . திண்மப்பொருள். அனைத்து எரிமலைகளிலிருந்தும் திண்மப் பொருள்கள் வெளிப்படுகின்றன. இவற்றுள் குறிப்பிடத்தக்கவை நெருங்கு நொறுங்கு (breccia ) கற்களாகும். இவை எரிமலைக் குழாயை அடை த்துக் கொண்டிருந்த கற்குழம்பு உடைத்தெறியப்படும் போது வெளிப்படும் சிதறிய கற்களாகும். அனற் குழம்பு வெளிப்படும்போது அதில் உள்ள வளிமங்கள் விரிவடைவதால் குழம்பு நுரையுடன் பொங்குகிறது. பின்பு அது குளிரும்போது ஃபியூமிஸ் என்ற நுரைக் கல்லாக மாறுகிறது. ஃபியூமிஸில் குறைசெறிவான வளிமங்கள் வெளியேறுவதற்கு நிறைய துளைகள் (குழிகள்) இருக்கின்றன. இதைப்போலவே ஸ்கோரியா (scoria) என்ற நுரைக் கல்லும் தோன்றுகிறது. எரி மலை வெடிக்கும்போது லாபில்லி என்ற சிறு உருண்டைக் கற்களும் வீசியெறியப்படுகின்றன. அவற்றுடன் அனற்குழம்பு ஆகாயத்தில் தூக்கி யெறியப்பட்டுக் காற்றில் உறைந்து திண்மப் பொருளாக நிலத்தில் விழுகின்றது. இது எரிமலைக் குண்டு அல்லது லாவா குண்டு (volcanic bomb) எனப்படுகின்றது. மேற்கூறிய பொருள்களைத் தவிர டஃப் (tuff) என்ற தூசிப் பொருளும் அனற்குழம் பிலிருந்து வெளிப்படுகின்றது. . நீர்மப் பொருள். புவியின் மேல்பரப்பை வந்தடை யும் அனற்குழம்பின் வெப்பம் 900௦-1200°C வரை இருக்கும். அனற்குழம்பு கடந்து வரும் வேகம் அதன் நீர்மத் தன்மையைப் பொறுத்துள்ளது. நீர்மத் தன்மை அதில் உள்ள சிலிகாவைப் பொறுத் துள்ளது. சிலிகா மிகுதியாக இருந்தால் நீர்மத் தன்மை குறைகிறது. எனவே, சிலிகா மிகுந்திருப்ப தை அமில எரிமலைக்குழம்பு (acidic lava) என்றும் சிலிகா குறைந்திருப்பதைக் கார எரிமலைக்குழம்பு