எரிமலை 295
(basic lava) என்றும் அழைப்பர். எரிமலையில் இருந்து வெளிப்படும் கார லாவர் அதன் நீர்மத் தன்மை மிகுதியால் மிகுதொலைவுக்குச் சென்று உறைகிறது. இவ் வளிமம். எரிமலை நிகழ்வால் முக்கியமாக வெளிப்படுவது நீராவியாகும். இது 60 - 95% வரை காணப்படுகிறது. தனால் எரிமலை கக்கு தலின்போது முகில்கள் தோன்றுகின்றன. வை குளிர்ச்சியடைவதால் மழை ஏற்படும். இந்த மழை நீருடன் வெளித்தள்ளப்பட்ட தூசுகளும் கலந்து கேடுதரத்தக்க சேறு வழிதல் (mud flow) ஏற்படு கிறது. இதைத் தவிர கந்தகம்,ஹைட்ரஜன், ஃபுளோ ரின், கார்பன்டை ஆக்சைடு, குளோரின், போரான் போன்ற வளிமங்களும் வெளிப்படுகின்றன. வளிமங்கள் அனற்குழம்பின் உருகுநிலையைக் குறைக்கின்றன. ஆழத்தில் அழுத்தம் மிகுதியாக உள்ளதால் இவ்வளிமங்கள் நீர்மமாகித் தீக்குழம்பு டன் கலந்து விடுகின்றன. பாறைக் குழம்பு வெளி யேறும்போது அதில் கலந்திருக்கும் வளிமங்களும் வெளியேறுகின்றன. இவ்வளிமங்கள் பெரும்பாலும் வளிமண்டலத்திலேயே வீணாக்கப்படுகின்றன. வெப் பமான பாறைக் குழம்பின் இடையீட்டால் உயரச் செல்லும் லாவாவின் மிகு அளவு வெப்பம் குட்டை யின் (pool) மிகு அளவு வெப்பமாக இருக்கும். 1902 ஆம் ஆண்டில் பீல மலையில் எரிமலை கக்குதலின் போது மிகு வளிமங்களும், லாவாத் துண்டுகளும் மலைச் சரிவுகளில் வழிந்தோடப் பல உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டன. இவ்வாறே வட கலிபோர்னியாவில் லாஸ்ஸென் மலையில் 1915-ஆம் ஆண்டு ஏற்பட்ட வெப்பமான பெரிய வெடிப்பினால் காடுகளில் உள்ள மரங்கள் அழிக்கப்பட அது அழிக்கப்பட்டபகுதியென்று குறிப்பிடப்படுகிறது. எரிமலைக் குழம்பு வெடித்து வெளியேறும் தன்மையைப் பொறுத்து எரிமலைக் கூம்புதோன்றும் முறையை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். அவை செயல்படும் எரிமலை (active volcano), செயலிழந்த எரிமலை extinct volcano), உறங்கும் எரிமலை dormant volcano) எனப்படும் அனற்குழம்பு வெடித்து வெளியேறும்போது அதன் அழுத்தம், வளிம அளவு ஆகியவற்றைப் பொறுத்து எரிமலைகள் பல உருவங் களை அடைகின்றன. இவ்வடிப்படையில் மலைகளை ஹவாய் வகை, ஸ்டாம்போலிவியன் வகை, வல்கானி யின் வகை, வெசுவியஸ் வகை, கிராக்கடோவா. பெலிவிய வகை எனப் பிரிக்கலாம். இந்தியாவில் எரிமலைச் செய்கை, கிரேடஷியல் காலம் முதல் இயோசின் காலம் வரை மிகுதியாகக் காணப்பட்டது. அந்த இடங்களில் மிக முக்கிய மானவை வங்காள விரிகுடாவில் பேரன் தீவு, நார் கொண்டம் தீவு ஆகியவை. பேரன் தீவில் எரி எரிமலை 295 மலைக்கூம்பும் எரிமலைவளிமமும் காணப்படுகின்றன. எரிமலை குழம்பாக்கத்தின் அடிப்படையில் திண்மப் பொருள்கள் வெளிப்பட்டுக் கனிச் செல்வங் களை அளிப்பதோடு, அடிப்படையான மேற்காணும் வகைப் பாறைகளையும் தோற்றுவிக்கின்றன. எரிமலைக் குழம்பின் பாய்வு. மேற்பரப்பின் பண் பைப் பொறுத்து எரிமலைக் குழம்பின் பாய்வு பிரிக் கப்படுகிறது. வழவழப்பையும், மேடுபள்ளங்களையும், சுருக்கங்களுடன் கூடிய கயிறு போன்ற அமைப்பை யும், ஏற்படுத்தும் பாய்வு பகோஃகோ எனப்படும். கூர்மையான முள் போன்ற அமைப்புகளைக் கொண்ட சுரடுமுரடான சீரற்ற மேற்பரப்பை ஏற்படுத்தும் பாய்வு ஆ (aa) எனப்படும். பாய்வின் மேற்பகுதியைக் கொண்ட துண்டுகள் வழவழப்பான பக்கங்களையுடைய பலகோணங்களைக் கொண்டிருக் கும். இது கட்டி அல்லது பாள எரிமலைக் குழம்பு (block lava) எனப்படும். மிகுதியாகப் பாகுநிலை கொண்ட ஆண்டிசைட் எரிமலைக் குழம்பு, கட்டி எரிமலைக் குழம்புப் பாய்வை ஏற்படுத்துகிறது. நிலத்தின் மேற்பரப்பில் பாயும் எல்லா எரிமலைக் குழம்புப் பாய்வும் குழிகள் பெற்றுக் காணப்படும். சில சமயம் கனிப்பொருள் நிறைந்த ஆவிக் குமிழிடங் களும் காணப்படும். பகோஃகோ பாய்வு நீரில் பாயும்போது, தானியங்கள் கொண்ட பைகள் அல்லது தலையணைகள் போன்ற அமைப்பை வெட்டு முகத்தி லும், சீரற்ற நீள்பட்டக் குவியலையும் ஏற்படுத்து கிறது. இத்தகைய எரிமலைக் குழம்பு, மிகப் பெரிய அளவிலான கடலடித்தளத்தை ஏற்படுத்துகிறது. படம் 1 குழாய் போன்ற துனை வழியே எரிமலைக் குழம்பு வெளி பேறி எரிமலைக் குன்றை ஏற்படுத்துதல்