எரிமலை 297
எரிமலை 297 அடைகின்றன. அவை பாளங்கள் அல்லது கட்டிகள் எனப்படும். இவற்றின் திரள் எரிமலை நெருங்கு நொறுங்கு கற்படிவை (volcanic breccia) உண்டாக்கு கிறது. 4 மி.மீ. விட்டத்திற்கும் குறைவாக உள்ளது சாம்பல் என்றும், 0.25 மி.மீ. விட்டத் திற்கும் குறைவாக உள்ளது தூசி அல்லது அழுக்கு என்றும் குறிப்பிடப்படுகின்றன. கெட்டியாக்கப்பட்ட எரிமலைச் சாம்பல் அல்லது தூசி டஃப் எனப்படும். வெப்பத்தால் உடைக்கப்பட்ட எல்லாப் பொருள் களும் டெப்ரா என்று குறிக்கப்படும். எரிமலைத் தூசி. எரிமலை கடுமையாக வெடிக் கும்போது மீவளி மண்டலம் (Siratosphere) வரை எரிமலைத் தூசி வெளியேற்றப்படுகிறது. அவ்வாறு வெளியேறும் தூசி புவியின் மேற்பரப்பில் பலஆயிரம் , மேலும் கி.மீ. வரை செல்கின்றது. வெளியேற்றப்படும் பொருள்களில் எரிமலைத் துண்டுகள், எரிமலைக் கண்ணாடிகள், நீள்வட்ட வடிவக்கண்ணாடிகள் கந்தக அமிலத்துளிகள், சல்பேட்டுகள், குளோரைடு கள் போன்றவை மிகுதியாகக் காணப்படுகின்றன எரிமலை வெடித்தபின் காணப்படும் மேகக் கூட்டத் தில் உள்ள திண்மத் துகள்கள் சில நாள்களில் அல்லது சில வாரங்களில் கீழே தங்கிவிடுகின்றன. ஆனால் ஒரு சில நுட்பத் துகள்கள் ஓர் ஆண்டிற்கு மீவளி மண்டலத்தில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. பல மாதங்களுக்குப் புவி முழுதும் கண்கவரும் சாயுங் காலத்தை ஏற்படுத்துகின்றன. முக்கியமான எரிமலை களிலிருந்து வெளிப்படும் எரிமலைத் தூசி, சுந்தகத் தூசிப்படலங்கள் சூரியக்கதிர்களைத் தடை செய்து புவியின் மேற்பரப்பு வெப்பத்தைக் குறைக்கின்றன. இதனால் உலகத்தின் தட்பவெப்பநிலை தாக்கப்படு கிறது. பொதுவாக, எரிமலை வெளியீடுகளாலும், தொடர்ந்த அமில மழையாலும் பயிர்களும் தாக்கப் படும். எரிமலைச் சேற்றுப் பாய்வு. வெப்பத்தால் உடைந்த பொருள், குறைந்த கடினமான பொருள் ஆகியவை எங்கு அதிகமாகக் காணப்படுகின்றனவோ அங்கு எரி மலைச் சேற்றுப் பாய்வு அதிகமாகக் காணப்படும். வை அதிக ஆழமுடைய ஏரி நீரினால் உண்டாகி, பக்கங்களிலுள்ள சுவர்களை அரித்து, மலையின் சரிவு களில் வழிந்தோடி கூழ்போன்ற பொருளை உண்டாக் குகின்றன. ஓடைகளையோ, பனி ஓடைகளையோ நோக்கிச் செல்லும் வெப்பம் அல்லது குளிர்ச்சியான எரிமலைக் கழிவுப் பொருளான பனிக்கட்டியாலும் சேற்றுப்பாய்வு ஏற்படலாம். எரிமலையின் செங்குத் தான சரிவுகளில் உள்ள நிலையற்ற தளர்வான வெப்பத்தால் உடைந்த பொருள்கள், அதிக மழையி னால் நிறைவும் செறிவும் அடைகின்றன. அப்பொருள் கள் நீருடன் நகர்ந்து மணிக்கு 80-90 கி.மீ. வேகத் துடன் சரிவுகளில் இறங்குகின்றன. அதிக வேகத் தோடு இறங்கும் பொருள்கள் மிகுந்த தீங்கு விளைவிப் பனவாகும். இவ்வாறு இறங்கும் பொருள்கள் வழி யிலுள்ள பொருள்கள் அனைத்தையும் எடுத்துச் செல் கின்றன. எரிமலைச் சேற்றுப்பாய்வு குளிர்ச்சியாகலோ வெப்பமாகவோ இருக்கலாம். பனிக்கட்டியாற்றின் கீழ் வெடிக்கும் எரிமலையினால் பனிக்கட்டி உருகி, சேற்றுப் பாய்வை ஒத்த நீர்ப்பாய்வு வெள்ளமாக ஓடும். ஆவி வெளிப்படும் பிளவும், வெப்ப ஊற்றுக் கண்ணும். பாறைக் குழம்பில்லாமல் எரிமலை வளிமம் மட்டும் வெளிப்படும் துளைகள் ஆவி வெளிப்படும் பிளவுகள் எனப்படும். எரிமலை வெடிக்கும்போதோ, வெடிப்பு களுக்கிடையிலோ ஆவிப்பிளவும், வெப்ப ஊற்றுக் கண்ணும் செயல்படும். எரிமலைகளில் காணப்படு கின்றன. உறங்குகின்ற எரிமலையில் எரிமலை பொது இவை செயலற்றுக் காணப்பட்டாலும் இவை காணப் படுகின்றன. இப்பிளவுகளில் வெளிப்படும் வளிமங் களில் நீராவி, சல்பர் வளிமம், ஹைட்ரோ குளோரிக் அமிலம், ஹைட்ரோ ஃபுளோரிக் அமிலம், கார்பன் டைஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு போன்றவை அதிக அளவிலும் மற்ற வளிமங்கள் குறைந்த அளவிலும் காணப்படுகின்றன. வாசுக் காணப்படும் பல உலோகங்களை சிறிதளவு கடத்திச் சென்று மேற்பரப்பில் படிவுகளை ஏற்படுத்துகின்றன. வெளிச்செல்லும் வளிமங்கள் 500° 800° C வரை வெப்பநிலையை அடையும். ஹாலோஜன் வளிமங்களும், உலோகங்களும் உயர் வெப்பநிலை ஆவி வெளிப்படும் பிளவுகளில் காணப் படுகின்றன. குறைந்த வெப்பநிலை ஆவி வெளிப் படும் பிளவுகளில் நீராவியுடன் கந்தக வளிமம் அதிகமாகக் காணப்படும். இன்னும் குளிர்ந்த நிலையிலுள்ள பிளவுகள் கார்பன் வளிமங்களை வெளியேற்றுகின்றன. இவை மொஃபெட்ஸ் எனக் குறிப்பிடப்படுகின்றன. மேலும் ஆவி வெளிப்படும் பிளவுகள் கடலுக்கடியில் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அவை உலோக சல்ஃபைடுகளை வெளி யேற்றுவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆவி வெளிப்படும் பிளவுகள் வெப்ப ஊற்றுக் கண்ணாகவும் (hot spring), வெந்நீரூற்றாகவும் மாறுகின்றன. வெப்ப ஊற்றுக் கண்ணிலுள்ள அதி களவு நீர் பாறைக் குழம்பிலிருந்து மட்டுமல்லாமல் காற்று மண்டலத்திலிருந்தும் கிடைக்கும். புவியில் அதிகமான ஆழங்களில் நீர் வெப்பமான பகுதி களுக்குச் செல்வதால் சில வெப்ப ஊற்றுக் கண்கள் ஏற்படுகின்றன. பல் வெப்ப ஊற்றுக் கண்களில் வெப்பம் எரிமலை நிகழ்வினால் கிடைக்கிறது. இதனால் அதிலுள்ள நீரில் எரிமலை வளிமங்கள் காணப்படலாம். மேலும் புவியில் செயல் படும் நிலையில் சுமார் 500 எரிமலைகள் உள்ளன. மு. இராமச