308 எருத்துவாலன் (கொண்டைக் கரிச்சான்)
308 எருத்துவாலன் (கொண்டைக் கரிச்சான்) கரிச்சான் குடும்பத்தைச் சேர்ந்த சின்னக் கரும் பச்சைக் கரிச்சான் (Bronzed drongo) காணப் படும் பகுதியெங்கும் இதுவும் காணப்படுவதாகக் கொள்ளலாம். பளபளப்பான கருநீல வண்ண உடலோடு கூடிய து 31 செ.மீ. நீளமுள்ளதாக, மைனாவின் உருவ அளவினை ஒத்ததாக இருக்கும். நெற்றியிலிருந்து மயிர்போன்ற மெல்லிய இறகுகள் பின் தலைவரை நீண்டு வளர்ந்திருப்பதால் இது கொண்டைக் கரிச் சான் எனப்படுகிறது. மிக அருகிலிருந்து பார்க்கும் பொழுதுதான் இக்கொண்டை புலனாகும். வாலின் து ஓர இறகுகள் இரண்டும் மேல் வளைந்து திருகி விட்டதுபோலக் காணப்படுவதால் இது எருத்து வாலன் எனப் பெயர் பெற்றுள்ளது. நீண்டு கூர்மையாக உள்ள அலகு சற்றே கீழ்நோக்கி வளைந்திருக்கும். கண்கள் செம்பழுப்பு நிறத்தன. அலகு, கால், கால்விரல்கள் கரு நிறத்தன. குழுவாகக் கூடி மலர்களிடையே தேன் குடிப் பதைக் காணலாம். அப்போது இவை தேன் குடிக்க வரும் பிற பறவைகளை அந்த மரங்களை நெருங்கவிடாது விரட்டுகின்றன. பூச்சி புழுக்களைத் தின்றும், மலர்களில் தேன் குடித்தும் அயல் மகரந்தச் சேர்க்கை புரிந்தும் கரிச்சானைப் போலவே எருத்து வாலனும் உழவருக்கு உதவும் தோழனாய் விளங்கு கிறது. . மார்ச், ஏப்ரல், மாதங்களில் இது இனப்பெருக்கம் செய்கின்றது. மரப்பட்டை, புல், வேர் முதலிய வற்றைக் கூடு கட்டப் பயன்படுத்துகின்றது. மரங் களில் புறத்தே நீட்டிக் கொண்டிருக்கும் கவையாகப் பிரியும் சிறு கிளைகளுக்கிடையே தரையிலிருந்து 5 முதல் 10 மீ. உயரத்தில் திறந்த கூடுகட்டி, 3 முதல் 4 முட்டைகள் இடும். முட்டை இளஞ்சிவப்பு வண்ணத்தில், ஊதாசிவப்புப் புள்ளிகளைக் கொண்டி ருக்கும், தென்னை மரங்களில் உயரமான மட்டை 160 70 80 90 100 30 20 பசுஞ்சோலைகளிலும் காடுகளிலும் இது தரைக்கு வராது. மரக் கிளைகளிடையே தாவிப் பறந்து இரை தேடும். இது இலைகளிடையே உறையும் பூச்சி புழுக் களை உண்பதுடன், வளைந்து கூரிய அலகினை மலர்களுக்குள்ளே செலுத்தித் தேனினையும் உணவாகக் கொள்கிற றது. காடுகளில் குழுவாகச் சேர்ந்து பூச்சி புழுக்களைத் தேடி உண்ணும் பறவைகளின் குழுவிலும் இது இடம் பெற்றிருக்கக் காணலாம். முள் முருங்கை. இலவம் போன்ற மரங்கள் பூக்கும் பருவத்தில் வை 20 வரை இந்தியாவில் எருத்துவாலன் காணப்படும் பகுதிகள் களிடையேயும் கூடுகட்டுகிறது. கூடுகட்டுவதிலும் அடைகாப்பதிலும் குஞ்சுகளைப் பேணுவதிலும் ஆணும் பெண்ணும் பங்கு கொள்கின்றன. இனப் பெருக்கக் காலத்தில் தெளிவான சீழ்க்கை ஒலியினை உரத்த குரலில் எழுப்பும். இது பிற பறவைகளின் குரலைப் போலப் போலியாகக் குரல் கொடுப்பதும் உண்டு. க. இரத்தினம் நூலோதி. Saiim Ali and Dillon S. Handbook of the Birds of India and Ripley. Pakistan.