உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எருமை 309

Vol 5.. Bombay Natural History Society, Bombay, 1972.2. Badshah, M.A., Check list of Birds of Tamil Nadu. The Forest Department, Govt. of Tamil Nadu, 1968. எருமை இதன் விலங்கினப் பெயர் புபாபஸ் புபாலிஸ் Bibabus bubalis). இது மாட்டினங்களிலிருந்து முழுதும் மாறுபட்டதாகும். இவ்விலங்கினம் ஈரப் பசையுடன் கூடிய வெப்ப நாடுகள், மத்தியத்தரைக் கடல் நாடுகள் ஆகியவற்றில் காணப்படுகின்றன. எருமைகளுக்கு 48 உள்ளன. குரோமோசம்கள் ஆனால் மாட்டினத்திற்கு 60 குரோமோசம்கள் உள்ளன. ஒரு நாட்டின் பொருளாதார உயர்வுக்கு பயன் படும் கால்நடைகளில் இன்றியமையாத விலங்கினம் எருமை ஆகும். தொடக்க காலத்தில் பசுவினத்தி லிருந்துதான் பால் பெறப்பட்டது. கடினமான வேலைகளுக்கே எருமைகள் பயன்பட்டன. பண்டைக் காலத்தில் எருமைப்பால் பயிர்களுக்கு உரமாகப் பயன்பட்டது. தற்போது இறைச்சிக்காகவும் வேலை செய்யவும் எருமைகள் பயன்படுகின்றன. எருமைகள் ஏறத்தாழ கி.மு. 2500 ஆண்டுக்கு முன் இத்தாலி யிலும், ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின் சீனாவிலும் வேலைக்காகப் பழக்கப்படுத்தப்பட்டன என அறியப் பட்டுள்ளது. உலகில் உள்ள எருமையினங்களில் இந்திய இனம்தான் அமைதியான பண்புடையது. சீனா, பர்மா, லாவோஸ், வியட்நாம், தாய்லாந்து மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் இருப்பவை முரட்டுத் தன்மையுடையவை. மலேசியா மேற்குப்பகுதிச் சதுப்பு நிலங்களில் காணப்படும் எருமைகளைச் சதுப்புநில எருமை எனவும், இந்தியாவில் ஆற்றுப் பள்ளத்தாக்கு அருகில் வாழும் மூர்ரா போன்ற எருமைகளை நீர் எருமை என்றும் குறிப்பிடுவர். தென்னிந்தியாவில் இவ்விருவகையும் உள்ளன. நிறம். எருமைகள் அவற்றின் இனத்திற் கேற்ப கருவெண்மை நிறத்திலிருந்து கறுப்பு நிறம் வரை பல நிறங்களில் உள்ளன. வயதிற்கேற்ப கருமை நிறம் செறிவடையும். சீனா, தாய்லாந்து, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் உள்ள சில இனங்களில் தோல் நிறமற்றுக் காணப்படும். ஆனால் இந்தியாவில் உள்ளவை பெரும்பாலும் கரு நிறத்தவையே. பசுவினத்தைவிட எருமையினத் தோலில் மயிர் குறைவாக இருக்கும். மேலும் பருவத் எருமை 309 திற்கேற்றவாறு கோடையில் மிகக் குறைவாகவும் குளிர் காலத்தில் சற்று மிகுந்தும் இருக்கும். எருமைத் தோல் தடிப்பாக (6.5 மி.மீ.) இருப்பதால் சுற்றுப் புற வெப்பநிலையால் தாக்கமுறாமல் உடலை ஒரே சீராக வைத்துக்கொள்ள முடிகிறது. தரம் குறைந்த தீவனங்களை எருமைகள் உண்பதால் தீவனச் செல வும் குறைகிறது. பசுக்களுக்குப்போடும் புல், பசுந் தழை இவற்றில் கழிக்கப்பட்டவற்றையும் எருமைகள் தின்று விடுகின்றன. சினைப் பருவகாலம். இந்தியாவின் பெரும்பா லான் கால்நடைப் பண்ணைகளில் எருமைகள், முதல் கன்று ஈனும் வயது சராசரி நாற்பது மாதமாகும். எருமை ஆண்டு முழுதும் சினைக்கு வந்தாலும் பொது வாக ஜுலை-பிப்ரவரி மாதமே சினைக்கால அறி குறியை ய வெளிப்படுத்தும். மார்ச்-ஜுன் வரை நான்கு மாதத்தில் சினைக் கால அறிகுறிகள் குறிப்பிடும் அளவில் தெரிவதில்லை. மழைக்காலங்களிலும் சினைக் கால அறிகுறிகள் தோன்றக் கூடும். சராசரி சினைப் பருவ காலம் 21 நாளாகும். அதில் சினைநேரம் 24 மணியேயாகும். இந்தச் சமயத்தில்தான் எருமையைப் பொலி கிடாவின் மூலமோ செயற்கையாகவோ கருவூட்ட வேண்டும். எருமைகள் பொரும்பாலும் மாலை 6 மணியிலிருந்து காலை 6 மணி வரை சினைக்கு வருகின்றன. சினைக்கால பசுக்களிடம் காணப்படுவதுபோல் எருமைகளில் தெளிவாகத் தெரியாமையால் சில சமயம் அறிகுறி கள் இல்லாமலே சினைக்கு வரக்கூடும். பருவத்தி லுள்ள சிை ண எருமைகளைக் கண்டுபிடிப்பது கடின மாக இருப்பதால் கருத்தோன்றல் விகிதம் சற்றுக் குறைவாகவே உள்ளது. அறிகுறிகள் எருமைகளில் கருவூட்டல் எண்ணிக்கை கோடை யில் மிகுந்தும் வசந்தத்தில் குறைந்தும் அமையும். எருமைக் கிடேரிகள், முதல் சினையடைவதற்கு வயதான அல்லது முதல் கன்று ஈன்ற எருமைகளை விட பொலிவு மிகுதியும் தேவை. பசுக்களைப் போலவே எருமைகளிலும் கன்று ஈன்ற 60-90 நாள்களில் முதல் பொலி செய்யலாம். பொதுவாக எருமைகளின் சினைக் காலம் 305-312 நாளாகும். நாட்டு இனங்களில் கன்றுகளின் பிறப்பு எடை 15-22 கி.கி. இருக்கும். ஆனால் முர்ரா போன்ற சிறப்பினங்களில் 23-37 கி.கி, உள்ளது. இரண்டு வயதில் பருவமடைந்தாலும் 3-3-5 ஆண்டில்தான் சினை பிடிக்கும். வயது ஆனால் வயது வேலைக்குப் பயன்படும் எருமைகள் நீண்டநாள் உழைப்பதுடன் ஏறத்தாழ 25 வரை உழைக்கும் திறன் கொண்டவை. பால் எருமைகளுக்குச் சராசரி உற்பத்தி வயது ஈற்று எனவும் மொத்த உற்பத்தி 7-11 வயது எனவும்