உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 எருவிடுதல்‌

316 எருவிடுதல் படுகிறது. ஈரப்பாங்கான மண்ணில் வளரும் இப்புல் குளம், ஏரிக்கரைகளில் செழிப்பாக வளரும் தன்மை பெற்றது. எவ்வகை மண்ணிலும் வளர்வதுதான் இப்புல்லின் சிறப்புப் பண்பாகும். இது தோற்றத்தில் கரடு முரடாகக் காணப்படும் பல்பருவச்செடி. தண்டுகள் மூலம்' மிகவும் விரைவில் பரவக்கூடியது. வேர்கள் கொத்தாகக் கணுக்களில் அமைந்திருக்கும். கணுக்களின் மேல் நோக்கிச் செங் குத்தாக ஏறக்குறைய -2-2.5 மீ வரை வளரக்கூடிய தண்டுகள் காணப்படுகின்றன. இலை: மாற்றிலையடுக்கமைப்பு. இருவரிசை களில் காணப்படும். இவைப் பட்டைத் தண்டை அணைந்திருக்கும். விகூல் (ligule) நுண்ணிய தூவிகளா லானது. இலைப்பரப்பு குறுகலாகத் தட்டையாக நீண்டு காணப்படும். மஞ்சரி. சிறு ஸ்பைக்குகள் பரவலான ரெசீமில் அமைந்துள்ளன. ரெசீம் முப்பட்டையாயிருக்கும். சிறு ஸ்பைக்குகள் நீள் வட்ட அல்லது நீள் சதுர வடிவ மாகவும் பின்புறம் அமுங்கியும் இருக்கும். தனித் திருக்கும் 2.5-3 மி.மீ. நீளம் இருக்கும் மஞ்சரியில் சிறு ஸ்பைக்குகள் இரு வரிசையாக அமைந்திருக்கும். அவை குட்டைக்காம்பு கொண்டவை, உதிரக் கூடியவை. ஒவ்வொரு சிறு-ஸ்பைக்கும் 2 மலர்கள் கொண்ட து. உ மி 12ம் உமி 22ம் உருவத்தில் சவ்வு போன்றவை; சமமற்றவை. லெம்மா 1[ lemma 1 ) ஆண்மலர் கொண்டது அல்லது மலடாயிருக்கும். லெம்மா 2 - வழவழப்பானது, ஆனால் கனி நிலையில் கடினமாக மாறிவிடும். அது இருபால் மலர் கொண்டது. பேலியா (palea) சவ்வு போன்றது. லாடிகூல்கள் 2 (lodicules) மிகச் சிறியவை. மகரந்தத்தாள்கள் 3. சூலகம் ஓரறை கொண்ட து, மேல்மட்டம் சூல் ஒன்று உள்ளது; அது அடியொட்டு முறையில் அமைந்தது. சூல்தண்டு 2 உண்டு. சூல்முடி இறகு போன்றது. கனி கேரியாப்சிஸ் (caryopsis ) எனப்படும் தானியவகையில் அகன்று நீள்சதுரமானது; ஏறக்குறைய தட்டையாக இருக்கும்; ஒரு விதை கொண்டது. புனே அரசு ஆய்வுப் பண்ணையில் 1894 இல் முதன் முதலில் பயிரிடப்பட்டு ஏக்கருக்கு 13-5 டன் பசுந்தீவனம் கொடுக்கக்கூடியது என்று கண்டுபிடிக்கப் பட்டது. கோயம்புத்தூர், கோவில்பட்டி வேளாண் மைப் பண்ணை இறைவைப் புன்செய்களில் பயிர் செய்து பார்த்ததில் தென்னிந்தியச் சமவெளிகளிலும் நன்கு வளரக்கூடியது. என்று அறியப்பட்டது. மேலும் சேலம் சேர்வராயன் மலையிலும், திருநெல் வேலி முண்டன்துறையிலும், குற்றாலத்திலும் தன்னிச்சையாகக் காணப்படுகிறது. இதை ஆண்டுக்கு 8 - 10 முறை அறுவடை செய்ய லாம். இந்திய மண்ணில் ஹெக்டேருக்கு 4-6 டன் பசு விளைந்தாலும், மலேயாவில் ஹெக்டேருக்கு 14 டன், பிரிட்டிஷ் கயானாவில் ஹெக்டேருக்கு 16 டன் விளைச்சல் கிடைக்கிறது. இந்த மேய்ச்சல் புல் மையாக இருக்கும்போதே தீவனமாகப் பயன்படுத்த வேண்டும். காலை நேரங்களில் எருமைப்புல்லின் மேலிருக்கும் பனித்துளிகள் காய்ந்த பிறகே மாடுகள் இவற்றைத் தின்னும். புல் பயன். கால்நடைகள் இப்புல்லை விரும்பி உட் கொள்கின்றன. வெப்ப நாடுகளிலுள்ள சத்து நிறைந்த புற்களில் இதுவும் ஒன்றாகும். இதில் புரதச் சத்து மிகுதியாக உள்ளது. கினி புல், நேப்பியர் போல் மாடுகள் இப்புல்லின் தண்டுகளைக் கழிப்ப தில்லை. இதற்குக் காரணம் இப்புற்களின் தண்டுப் பகுதியில் நார்த்தொகுதி குறைவாகவும், இலைப் பகுதி மிகுதியாகவும் இருத்தலேயாகும். மேலும் புற் களில் கால்நடைகளுக்குத் தேவையான அனைத்துச் சத்துப் பொருள்களும் காணப்படுகின்றன. முக்கிய மான வைட்டமின்கள் அதிக அளவிலுள்ளன. ஆண்டின் சிறு பருவங்களில் புற்களில் சில கனிமப் பொருள்கள் குறையவும் செய்கின்றன. அப்போது வேறு தீவனங்களைச் சேர்த்து ஈடு செய்ய வேண்டும். அகில உலக அளவில் எருமைப்புல் என்ற பெயர் பக்லோ டேக்டிலியாய்டஸ் (buchloe dactyloides) என்ற புல்லினத்தைக் குறிக்கும். இது தென் அமெரிக் காலிலும், ஆப்பிரிக்காவிலும் தன்னிச்சையாக வளர் கிறது. இப்புல் அமெரிக்காவில் புல்வெளிகளையும், மேய்ச்சல் நிலங்களையும் மிகுதியாகத் தோற்றுவித் துளளதால் முதலில் குடியேறிய ஐரோப்பியர்கள் இப் புல்லை வீடு அமைத்துக் கொள்வதற்கும், கால் நடைத் தீவனத்திற்கும் பயன்படுத்தினர். தி. கணேசன் எருவிடுதல் வேளாண்மையில் எருவிடும் வழக்கம் தொன்று தொட்டே இருந்து வருகின்றது. முன்காலத்தில் நிலத்தில் வளர்ந்திருந்த புதர்களை அழித்தும், எரித் தும் சாகுபடி செய்தனர். ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நிலத்தில் விளைச்சல் குறையவே, வேறு இடங்களுக்குச் சென்று புதிய நிலங்களில் புதர்களை அழித்து எரித்து மீண்டும் சாகுபடி செய்தனர். இவ் வாறே சாகுபடி நிலத்தைச் சில ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றும் பழக்கம் இன்னமும் ஆப்பிரிக்கா, டங்களில் அஸ்ஸாம் போன்ற காணப்படுகிறது. இதற்கு ஜும் (zoom) சாகுபடி என்று பெயர். மக்கள் தொகை குறைவாக இருந்த காரணத் தாலும், நிலம் தேவையான அளவிற்கு மேல் மிகுதி யாகவே இருந்ததாலும், சாகுபடி நிலத்தை மாற்றிக்