உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எருமைப்புல்‌ 317

கொண்டே செல்வது எளிதாக இருந்தது. ஆனால் பிற்காலத்தில் நாளுக்கு நாள் நிலத்தின் தேவை பெருகியதால், குறிப்பிட்ட நிலத்தையே மீண்டும் மீண்டும் சாகுபடி செய்யவேண்டிய நிலைமை உரு வாகியது. தொடர்ந்து சாகுபடி செய்ததால், இழந்த மண்வளத்தைச் சீர்செய்யக் காடுகளிலிருந்து இலை தழைகளைக் கொண்டு வந்து நிலத்தில் இட, இந்தப் பழக்கம் நல்ல பயனைத் தந்தது. எனவே. பசுந்தாள் தரும் செடிகளைப்பயிர் செய்யத் தொடங் கினர். பிறகு விலங்கு மனிதரின் கழிவை மட்க வைத்து, நிலத்தில் இட்டதாலும் நல்ல பயன் கிடைத்தது. இதுபோன்ற பொருள்களைச் சேர்ப் பதும். அவற்றை மட்கவைத்து நிலத்திற்கு இடுவதும் பின்னர் நடைமுறைப் பழக்கங்களாக மாறிவிட்டன. இயற்கை உரங்களைக் கொண்டு எருவிடுவதால் விளைச்சல் பெருகுகிறது. இயற்கை உரங்கள் மிகுதி யான பயன்களைக் கொண்டவை. அவை தழை, மணி, சாம்பல் சத்துக்களுடன் சிறிதளவு நுண்ணூட் டச் சத்துக்களையும் (micronutrients) அளிக்கின்றன; மண்ணின் இயல்பு பண்பும் உயர்த்துகின்றன. களி மண் சார்ந்த நிலங்களில் காற்றோட்டத்தையும் நீர் ஊடுருவும் தன்மையையும் உயர்த்துகின்றன. மணற் பாங்கான நிலங்களில், மணல் துகள்களை ஒட்டிக் கொள்ளச் செய்து, சிறு கட்டிகளாக்கி நிலத்தில் நீரைத் தக்க வைத்துக் கொள்ளும் தன்மையை உண்டாக்குகின்றன. நன்றாக மட்கிய இயற்கை உரத்தின் நேர்மின் அயனிப்பரிமாற்றுத்திறன் மிகுதி யாக உள்ளது. ஆகவே, அவை மண்ணின் நேர்மின் அயனிப் பரிமாற்றுத்திறனை உயர்த்தி, பயிர்ச் சத்து களை மண்ணிலேயே தங்க வைக்கின்றன. இவற் றால் சத்துகள் நீரால் அடித்துச் செல்லப்படுவதும் மண்ணிலேயே தாவரங்களுக்குக் கிடைக்காவண்ணம் நிலைப்படுத்தப்படுவதும் தடுக்கப்படும். எருமட்கும் பொழுது கரிம சேர்மங்கள் உண்டாகின்றன. அவை நுண்ணூட்டச்சத்துகளுடன் வினைபுரிந்து பயிர்கள் உள்ளேற்குமாறு செய்கின்றன. இல்லையேல் இந்த நுண்ணூட்டச் சத்துகள் நீரால் அடித்துச் செல்லப் படும் அல்லது மண்ணில் பயிருக்குக் கிடைக்காமல் நிலைப்படுத்தப்படும். எருக்கள் மண்ணிலுள்ள நுண் ணுயிர்களுக்கு ஆற்றல் தரும் உணவுப் பொருள் களாகின்றன. இவ்வாறு வளர்க்கப்படும் நுண்ணு யிர்கள் தழைச்சத்தைப் பயிர்களுக்குக் கிடைக்கு மாறு மாற்றுகின்றன; மணிச்சத்தையும் நுண்ணூட் சத்துகளையும் கரைக்கின்றன. எனவே மண் ணின் ஊட்டம் உயர்கிறது. எருவிடுதலால் பெகுகும் நுண்ணுயிர்கள் மண்ணில் நோயுண்டாக்கும். நுண் ணுயிர்களின் பெருக்கத்தைக் குறைத்துப் பயிர்களுக்கு நோய்கள் உண்டாக்கும் வாய்ப்பைக் குறைக்கின்றன. டச் இத்தகைய நன்மைகளைக் கருதி எருவிடுதலை வேளாண்மையில் தவறாது கடைப்பிடிக்கவேண்டும். எருக்கள் பலவகைப்படும். அவை பசுந்தாள் உரங்கள், எருமைப்புல் 317 பண்ணைத் தொழு உரம், விலங்குக் கழிவு, கம் போஸ்ட் பயிர்களின் தாள்கள் மற்றும் வேர்கள் முதலியன ஆகும். பசுந்தாள் உரங்கள், நிலத்திலிடப்படும் புதிய மட்காத தாவரப் பகுதிகளாகும். அனைத்துத் தாவ ரங்களும், பயனளித்தாலும், பயறு இனத்தாவரங் களும், மரங்களும், அவற்றின் மிகுதியான தழைச் சத்திற்காகப் பயன்படுகின்றன. அவை மிகுதி யான தழைச்சத்துக் கொண்டிருப்பதால், எளிதில் மட்கிப் பயிருக்கு ஊட்டச்சத்துகளை அளிக்கின்றன. எவ்விதப் பசுந்தாள் உரம் அளித்தாலும். அவை மட்குவதற்கு 7-10 நாள் ஆகும். அதன் பிறகு தான் பயிர் செய்யவேண்டும். இந்தக் கருத்து நன்செய் நிலங்களைப் பொறுத்தவரையில் இன்றியமையாதது. பசுந்தாள்கள் மட்கும் காலத்தில் பயிருக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய கரிம அமிலங்கள் உற் பத்தியாகி, பின் அவை பல வினைமாற்றங்களடைந்து தீங்கற்ற வேறு பொருள்களாக மாறுகின்றன அல்லது நீரால் அடித்துச் செல்லப்படுகின்றன. ஆகவே, பசுந் தாளிட்ட 7-10 நாளுக்குப் பின் பயிருக்கு எவ்வித தத் தீங்கும் நேர்வதில்லை. பொதுவான உலர்ந்த பயறு இனத்தாவரங்கள் 2% தழைச்சத்தும், 0.5% மணிச் கத்தும், 2.% சாம்பல் சத்தும், சிறிதளவு நுண் ணூட்டச் சத்தும் கொண்டிருக்கின்றன. பண்ணைத் தொழு உரம் பெரும்பாலும் புண்ணையிலுள்ள ஆடு மாடுகளின் சாணி, சிறுநீர் ஆகிய கழிவுகளைக் கொண்டது. இவற்றுடன் வேறு பல பண்ணைக் குப்பைகளும். பயனில்லாத பயிரின் பகுதிகளும் சேர்க்கப்படுகின்றன. இவை ஒரு குழியில் மட்சு வைக்கப்பட்டுப் பிறகு நிலத்தில் படுகின்றன. நிலங்களில் ஆடு. வாத்து, கிடையிடுவதும், அவற்றால் கிடைக்கும் சாணம் போன்ற கழிவுப் பொருள்களை நிலத்தில் உழுது கலப்பதும் இன்றும் வழக்கத்திலுள்ளன. சேர்க்கப் மாட்டுக் சாண எரி வளிமம் சிற்றூர்களில் பெருகி வருவ தால் எரிவளிமம் உற்பத்தியான பின் தொட்டியி லுள்ள கழிவுப் பொருளும் எருவாகப் பயன்படுத்தப் படுகிறது. பண்ணைத் தொழு உரம் 1. 0% தழைச் சத்தும், 0.2 % மணிச்சத்தும் 0.5 % சாம்பல் சத்தும் கொண்டிருக்கிறது. சாண எரிவளிமக் கழி வுப் பொருளில் 1.03% தழைச்சத்தும், 0.30% மணிச்சத்தும். 0.53 % சாம்பல் சத்தும் உள்ளன. கம்போஸ்ட் என்பது மனித, விலங்கு, வீட்டுக் கழிவுப் பொருள்கள். பண்ணைக் கழிவுகள் ஆகிய வற்றை மட்க வைத்துத் தயாரிப்பது. தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும், மனிதக் கழிவைப் பெருமளவில் மட்சு வைத்து நிலத்திற்கு இடுவது சீனாவிலும் நடைபெறுகின்றன. ஆனால், இந்தியாவில் இது பெருமளவுக்கு நடைமுறையில் இல்லை. எனினும்