உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எலெக்ட்ரான்‌ இணைகாந்த ஒத்திசைவு 357

புலத்தைத் திணிக்க ஆற்றல் உட்கவர்வு ஏற்படுகிறது. இந்நிகழ்வு எலெக்ட்ரான் தற்சுழற்சி ஒத்திசைவு என்றும் எலெக்ட்ரான் ணைகாந்த ஒத்திசைவு electron paramagnetic resonance) என்றும் குறிப்பிட படுகிறது. எலெக்ட்ரான் இணைகாந்த ஒத்திசைவு ஆய்வுகளை முதன்முறையாக (1945-ஆம் ஆண்டு) திண்மப் பொருள்களில் ஆய்ந்து வெளியிட்டோர் சோவியத் ஒன்றிய அறிவியலாரே ஆவர். நேர்திசை மின்னோட்டத்தினால் உருவாகும் காந்த முனைகளுக்கிடையில் ஆய்வுப்பொருள் வைக் கப்படுகிறது. ஆய்வுப்பொருளைச் சுற்றியமைந்த கம்பிச்சுருள், நுண்ணலை அதிர்வுக் காந்தப் புலத்தை உருவாக்குகிறது. நிலைகாந்தப் புல வலிமையைச் சிறிது மாற்றியமைத்து ஆய்வுப்பொருளில் ஒத்திசைவு உண்டாக்க வீச்சலை பிறப்பி துணை செய்கிறது. காந்த ஒத்திசைவின்போது ஏற்படும் ஆற்றல் உட் கவர்வைப் பதிவுக்கருவி உயர்ச்சிகளாக வெளிக்காட்டு கிறது (படம் 1). ஓர் அணுக்கருவைச் சுற்றி வலம் வரும் எலெக்ட் ரான் ஒவ்வொன்றுக்கும் அதனையொத்த எதிர்த் தற்சுழற்சி கொண்ட எலெக்ட்ரான் இருப்பதுண்டு. இவை இணைபொருந்திய எலெக்ட்ரான்கள் எனப் படும். சில அணுவமைப்புகளின் கூடுகளில் இடம்பெறும் எலெக்ட்ரான்கள் இணைப்பொருத்தமில்லாமல் அமை வதும் உண்டு. இவை அணுவமைப்பில் நிகர காந்தத் திருப்பு திறனை உண்டாக்கி அணுவை ஒரு நுண் காந்தம் போலச் செயல்படச் செய்கின்றன. இவ் வகைக்காந்தப் பண்பு கொண்ட அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் ஆகியவற்றைப் பொதுவாக இணை காந்தப் பொருள் என்பர். ஓர் இணைகாந்தப் பொருளை வலிமையான நிலைகாந்தப் புலத்தில் வைக்கும்போது அதிலுள்ள நுண்காந்தங்கள் புலத்திசையில் அணிசேர முயலு கின்றன. காந்தப் புலத்தில் அணிசேரும் இந்த நுண் காந்தங்களின் தற்சுழலச்சு புலத்திசையை ஓர் அச் சாசுக் கொண்டு சுழன்று வரும். (படம் 2 இ காண்க). இந்நிகழ்வைப் புவி ஈர்ப்புப் புலத்தில் தலையசைந்தாடும் பம்பரத்தின் நிலைக்கு இணை யாகக் கூறலாம். மாறுதிசைகொண்ட நுண்ணலை காந்தப்புலத் தில் (HL) அதிர்வெண் (ய) லார்மர் அதிர்வெண் ணுக்குச் (Q) சமமாகும்போது காந்த ஒத்திசைவு ஏற்படுகிறது. அணுவமைப்பு ஒன்றில் காந்த ஒத்திசைவு உண் டாக்க, காந்தத் திருப்புதிறனும், கோண உந்தமும் தேவையான காரணிகளாக அமைகின்றன. அணு அல்லது அணுக்கரு, தற்சுழற்சியாலோ. அணுக் கருவை மையமாகக் கொண்டு இயங்கும் எலெக்ட் . H எலெக்ட்ரான் இணைகாந்த ஒத்திசைவு 357 WL H 7/0 H H' படம் 2, நிலைகாந்தப் புலத்தில் (H) சுழன்று வளையவரும் காந்தத் திருப்புதிறனின் (நுண்காந்தத்தின்) நிலை. ரான்களாலோ, மூலக்கூறுகளின் சுழலியக்கத்தால் ஏற்படும் அணுக்கரு மின்னோட்டத்தாலோ காந்தத் திருப்புத் திறனும் (M) அதன் தொடர்புடைய கோண உந்தமும் (J) உருவாகின்றன. (வாய்பாடு 1) M = J (1) ஒரு காந்தச் சுழலாழி விகிதத்தைக் குறிக்கும் r மாறிலியாகும். புறத்தே செயல்படும் காந்தப்புலத் தாலோ அருகில் செயல்படும் அணுக்கரு, அணு அல் லது மூலக்கூறுகளால் விளையும் காந்த இருமுனைப் புலத்தாலோ ஓர் அணுவமைப்பில் முறுக்குவிசையை உண்டாக்கலாம். எலெக்ட்ரான் இணைகாந்த ஒத் திசைவில், முறுக்கு விசையை உண்டாக்க, புறத்தே செயல்படும் நிலைகாந்தப் புலம் (H) உதவுகிறது.