உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358 எலெக்ட்ரான்‌ இணைகாந்த ஒத்திசைவு

358 எலெக்ட்ரான் இணைகாந்த ஒத்திசைவு முறுக்கு விசை காரணமாகக் கோண உந்தத்தில் ஏற்படும் காலச் சார்புடைய மாற்றங்கள் வாய்பாடு ல் விளக்கப்பட்டுள்ளன. dJ dм = M × H அல்லது 1 -- rM X H 2 dt dt உட் புல பெறலாம். இணைகாந்தப் பொருளினூடே கவரப்பட்ட ஆற்றல் அளவுக்கும் காந்தப் வலிமைக்குமுள்ள தொடர்பைக் காட்டும் வரைபடம் (படம்- 3) ஒத்திசைவு நிறமாலை எனப்படும். அவை நுண்காந்தத்தை ஒரு குறிப்பிட்ட கோண அதிர்வெண்ணோடு (rH) காந்தப் புலத்திசையில் சுழன் றாடச் செய்கின்றன. இந்த அதிர்வு நுண்காந்தத் தின் இயல் அதிர்வு என்றும், லார்மர் அதிர்வு என்றும் குறிப்பிடப்படுகிறது. காந்தப்புலத்தில் சுழன்று வளையவரும் நுண் காந்தத்தின் இயல் அதிர்வு (ar) காந்தப்புல வலி மையோடு (H) நேர்விகிதப் பொருத்தம் கொண்டி ருக்கிறது (வாய்பாடு 3). WL IH இந்நிலையில் காந்தப்புலத்திற்குச் (H) செங் குத்துத் திசையில் நுண்காந்தத்தின் இயல் அதிர் வுக்குச் சமமான அதிர்வெண் கொண்ட நுண்ணலை களை அதாவது மாறுதிசைக் காந்தப்புலத்தைத் [Hlcos @t ] திணிக்க ஆற்றல் உட்கவரப்பட்டு இணை காந்தம் வேறு ஆற்றல் மட்டங்களுக்குச் செல்கிறது. இந்நிகழ்வு இணைகாந்த ஒத்திசைவு எனச் சுட்டப் படுகிறது. நுண்ணலையின் அதிர்வெண்ணுக்கும் (f) நிலைக் காந்தப் புலத்திற்குமுள்ள தொடர்பை வாய்பாடு ல் காணலாம். f (கிகா சைக்கிள்) = 2.8H (கிலோ காஸ்) இணைகாந்தப் பொருளினூடே ஆய்வு முறையில் அளந்தறியப்படும் ஆற்றல் உட்கவர்வு நுண்ணலை அதிர்வெண்ணின் இருமருங்கிலுள்ள குறுகிய எல்லையில் நிகழ்கிறது (படம் 3). குவாண்டம் கொள்கையின் அடிப்படையில் இணைகாந்த ஒத்திசைவை ஒரு நிறப்பிரிகை நிகழ்ச்சி என்றும் கூறலாம். இணைகாந்தப்பொருளின் நுண்காந்தங்கள் நிலைகாந்தப் புலத்தின் வலிமையைப் (H) பொறுத்துச் சில வரையறுக்கப்பட்ட எண்ணிக்கை யிலான ஆற்றல் மட்டங்களில் முனைகின்றன. இம்முனைவுகளுக்கு இடைப்பட்ட ஆற்றல் வேறுபாடு, காந்தப் புல் வலிமையைக் கூடுதலாக்குகிறது. இந்நிலையில் முனைவுகளுக்குள்ள ஆற்றல் வேறுபாடு, நுண்ணலைக் குவாண்டம் ஆற்றலுக்குச் (hf) சமமாகும்போது நுண்காந்தம் ஒரு முனைவி லிருந்து அடுத்த நிலைக்குத் தாவுகிறது. (இங்கு h பிளாங்க் மாறி). நுண்ணலைகளின் அதிர் வெண்ணையோ (f) காந்தப்புல வலிமையையோ மாற்றி இணைகாந்தப் பொருளின் பல்வேறு ஆற்றல் மட்டங்களில் ஒத்திசைவு உண்டாக்கி நிறமாலை ஆற்றல் உட்கவர்வு (சார்வு) 60 50 40 30 20 20 10 0 400 800 1200 1600 காந்தப்புலம் (H) (காஸ்) படம் 3. மாங்கனீஸ் சல்ஃபேட்டில் ஜாவோய்ஸ்கி நீகழ்த்திய முதல் ணைகாந்த ஒத்திசைவு ஆய்வு, நுண்ணலை அதிர்வெண் 2.75 இகா சைக்கிள் ஆய்வுப்பொருள் வெப்பநிலை 298K பயன்கள். இணைகாந்தப் பொருள்களை அடையாளம் காணவும், மூலக்கூறு அமைப்புகளி லுள்ள வேதிப் பிணைப்புக் கூறுகளை ஆராயவும் எலெக்ட்ரான் இணைகாந்த ஒத்திசைவு பயன்படு கிறது. உயிரியல் மற்றும் மருத்துவ அறிவியல் துறை யில் ஓர் ஆய்வு முறையாக இணைகாந்த ஒத்திசைவு பயன்படுகிறது. இடப்பெயர்வுத் தனிமங்கள், அதாவது அணு வின் உள்ளடுக்கில் முழுதும் நிரம்பாத எலெக்ட்ரான் களைக் கொண்ட தனிமங்கள், தனித்த நிலையி லுள்ள அணுக்கூறு அமைப்புகள், உலோகங்கள், இணைகாந்தப் பண்புகொண்ட பழுதுகள் மற்றும் மாசு மையங்கள் அடங்கிய பொருள்களில் இணை காந்த ஒத்திசைவு நிகழ்வு பரவலாகக் காணப்படு கிறது. எஸ்.சீனிவாசன்