எஃகு வலிவூட்டிகளின் வடிவமைப்பு 17
வாகவும் சிக்கனமாகவும் சிறப்பாகவும் கட்ட இயலும் இத்தகைய கட்டடங்களின் உள்ளமைப்புகளில் தளங்களில் வேண்டிய அறை, இருப்பு மாற்றங்கள் ஆகியவற்றை எச்சமயத்திலும் எவ்விதத் தொல்லையு மின்றி, கட்டடக்காப்புக்கு எவ்விதச்சேதமும் நேரா வண்ணம் செய்திட முடியும். வகைகள் எஃகு வவூலிட்டிகளின் ஐந்து வகைகளாவன: 13: IS: IS: IS: 432-1966 (பகுதி) 1) செந்தர மென் எஃகு மற்றும் இடை எஃகு கம்பிகள். 1139-1966 செந்தரப்படி காய்ச்சி உருட்டிய முறுக்கு எஃகு கம்பிகள். 1786-1979 செந்தரப்படி முறுக்கப்பட்ட எஃகு கம்பிகள். குளிர்நிலையில் 1566-1967 செந்தரப்படி கடும் இழுவையால் உருவாக்கப்பட்ட எஃகு கம்பி வலைகள். IS: 226-1975 செந்தரப்படி கட்டக எஃகிலிருந்து உருவாக்கப்பட்ட உருட்டு எஃகு கம்பிகள். எஃகு கம்பிகளின் இழுப்புத் தகைவுத்திறன் [200 கி.நி/மி.மீ கட்டக வரைபடங்கள். பொறிஞரால் தயாரிக்கப் படும். கட்டக வரைபடங்கள் வலிவூட்டிகள், வலி வூட்டிக் கம்பிகளின் வடிவம், நீளம், எண்ணிக்கை, அமைவிடம் போன்ற விவரங்களைக் கொண்டிருக்க வேண்டும். மேல் சுமத்தப்படும் சுமைகள். கற்காரை வலிமை,பயன்படுத்தப்படும் எஃகு கம்பிகளின் தரம், வலிமை, பிற கம்பிகளோடு இணைப்புக் கம்பிகளாகப் பயன்படுத்தப்படுபவையின் எண்ணிக்கை, அவற்றின் நீளம், கற்காரை ஓரத்திண்ணம் (concrete cover), முட்டமைப்புகளின் (strut) விவரம், எஃகு. கம்பி களை அமைத்திடும் பாங்கு முதலிய தகவல்களைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். அல்லது போன்ற கம்பி வளைப் பட்டியல். அடித்தளம், சுவர்கள், தூண்கள், கூரைப்பலகம், விட்டம், கட்டுவிட்டம் துணைவிட்டம், மாடிக்கட்டு (staircase) பல்வகைக் கற்காரைக் கட்டுறுப்புக்கள் ஒவ்வொன்றிலும் பயன்படுத்தவேண்டிய கம்பிகளின் வகை, வலிமை விட்ட அளவு (diameter), எண்ணிக்கை, வடிவம்,நீளம்,கொக்கிகள் இருப்பின் அவற்றின் அளவுகள், புழக்க வரைபடங்கள் (working drawings), கம்பிவளைப்பட்டியல் முதலியன இவற்றில் நுட்பமாகக் குறிக்கப்படவேண்டும். இத்தகைய வரைபடங்களைப் (நீள்வெட்டுப்படம், குறுக்கு வெட்டுப்படம், தளவரைபடம், நிலைப்படம்) படிப்போர், கட்டுமான டங்களில் பயன்படுத்து அக. 6-2 எஃகு வலிவூட்டிகளின் வடிவமைப்பு 17 வோர், கம்பி வளைப்போர் முதலியோருக்கு எவ்வித ஐயமும் எழா வண்ணம் ஒவ்வொரு குறிப்பும் தெளி வாகக் குறிப்பிடப்படவேண்டும். நேராகச் செல்லும் கம்பிகள், வளைக்கப்படவேண்டியவை, குறை வெட்டப்படவேண்டியவை பொருத்தப்பட வேண்டிய இடம், ணைப்புக் கம்பிகள் பொருத்தப்பட வேண்டியவை ஆகிய தகவல்கள் வரைபடங்களிலும் கம்பி வளைப்பட்டியலிலும் மிகத் தெளிவாகக் காட்டப்பட வேண்டும். ய எஃகு வலிவூட்டிகளின் அமைவுபற்றிய பொதுக் குறிப்பு:- ஒரே வகையும் வலிமையும் கொண்ட எஃகுக் கம்பிகளையே ஒரு கட்டுறுப்பில் முதன்மை வலி வூட்டிகளாகப் பயன்படுத்தவேண்டும்; இருப்பினும் ஒரே சமயத்தில் ஒரு கட்டுறுப்பில் முதன்மை வலி வூட்டிகளுக்கு ஒரு வகையும், வலிமையும் கொண்ட எஃகு கம்பிகளையும், துணை (secondary} வலி வூட்டிகளுக்கு வேறுவகை வலிமையும் கொண்ட எஃகு கம்பிகளையும் பயன்படுத்தலாம். எஃகு கம்பிகளைத் தனிக்கம்பியாகவோ, ரு கம்பி களாகவோ, மூன்று - நான்கு கம்பிகளை இணைத்துக் கட்டியோ (bundled bar) அமைத்திடலாம். ஒன்றிற்கும் மேற்பட்ட கம்பிகளை ஒரே கட்டாகக் கட்டி இணைத்துப் பயன்படுத்தும்போது குத்துப் பிடிப்புக் கம்பிகளையும் (vertical stirrups) பயன் படுத்தவேண்டும். னவோ 4 36 மி.மீ. அளவுக்குமேல் கம்பி விட்டமுடைய வலிவூட்டிகளை ஒரே கட்டாகக் கட்டிப்பயன்படுத்தக் கூடாது. எனினும் தூண்களில் மட்டும் அவற்றை அவ்வாறு பயன்படுத்தலாம். எங்கெங்கு இரண்டு இரண்டிற்கும் மேற்பட்ட கட்டுறுப்புகள் சேர்கின்ற அங்கெல்லாம் எஃகு வலிவூட்டிகள் மிக நெருக்கமாக அமைய நேரிடும்; இத்தகைய நெருக்கத்தை இயன்ற வரையிலும் தவிர்ப்பது நல்லது. இவ்வலிவூட்டிகளை அவற்றிற்குறிய இடங் களிலும் வெளியிடங்களிலும் இருக்குமாறுஅமைத்திட வேண்டும். எடுத்துக்காட்டாக, சிறுவிட்டமும் பெரும் உத்திரமும் சேருமிடத்தில் விட்டத்தின் எஃகு வலி வூட்டிகளை உத்திரத்தின் உறுதியூட்டிகளின் மட்டத் திற்கு மேலாகவோ, கீழாகவோ செல்லுமாறு அமைத்து அவை ஒன்றோடொன்று உராயாமல் இருக்குமாறு செய்ய வேண்டும். இவ்வாறே விட்டம், உத்திரம், தூண்கள் சேருமிடத்தில் வலிவூட்டி களை ஒன்றோடொன்று இடித்துக்கொள்ளாமல் அமைத்திட வேண்டும். வளைவுக் கம்பிகளையும், கொக்கிகளையும் முறையாக முன்னரே வளைத்து வைத்திருக்க வேண்டும். இக்கம்பிகளுக்கும் கொக்கி கற்காரை களுக்கும் குறிப்பிடப்பட்டுள்ள திண்ணம் இருக்க வேண்டும். ஓரத் பேரளவு விட்டமுடைய வலிவூட்டிகளைத் (25 மி. மீட்டருக்கு மேல்) தூண்களிலும், உத்திரங்களி