18 எஃகு வலிவூட்டிகளின் வடிவமைப்பு
18 எஃகு வலிவூட்டிகளின் வடிவமைப்பு லும் பயன்படுத்தும்போது கம்பிகளிடையே நெருக் கத்தைத் தவிர்த்திட அவற்றை மின்சாரப் பற்ற வைப்பால் இணைத்திடலாம். எங்கே அல்லது விட்டங்களிலும், உத்திரங்களிலும் வளைவுத்திருப்புமை (bending moment) தகைவு (stress) மிகக் குறைவாக உள்ளதோ அவ் விடங்களில் இருக்கும் வலிவூட்டிகளின் நீளம் குறை வாக இருப்பின் மற்றொரு வலிவூட்டியை நுழைத் துச் சேர்த்து இணைத்து எடுத்துச் செல்லலாம். எனினும் சாய்வளை கம்பிகளில் (bent up bars) இவ்வாறு ஒட்டுக் கம்பி இணைப்பதைத் தவிர்க்க வேண்டும். இத்தகைய இணைப்பை இடம் மாறி மாறி 50%க்கு மேற்படாத வலிவூட்டிகளில் மட்டுமே செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும்போது செந் தர அளவுக்கு வடிவமைப்பு நீளம் (development length) இருக்குமாறு மாற்றுக் கம்பியை கம்பிக்கு இணையாக வைத்து எடுத்துச்செல்லலாம் அல்லது வேண்டிய நீளத்திற்குப் பற்றவைக்கலாம். மாற்றுக் கம்பிகளை இணையாக எடுத்துச் செல் வதை 36 மி.மீ. விட்ட அளவுக்கு மேலுள்ள களையும் இழு விசை (tension) வலிவூட்டிகளாக உள்ள முறுக்குக் கம்பிகளையும் தவிர்த்து இவற்றில் பற்ற வைத்து ணைக்க வேண்டும். முதல் கம்பி அடிமான மேல்மட்டத்திற்கு மேல் 1.80 மீட்டர் உயரத்திற்குக் குறைவாகத் தூண்களுக்குரிய வலி வூட்டிகள் இருந்தால் அவை அவற்றின் அடித்தளத் திற்குள் எடுத்துச்செல்லப்பட்டு இறுக்கி வைக்கப் பட்டிருக்க வேண்டும், இவ்விடங்களில் இணைப்பு நீட்டுங் கம்பிகளைப்பயன்படுத்தக்கூடாது. ணைப்பு நீட்டுங் கம்பிகள் பயன்படுத்துமிடங்களில் அவற்றின் பரப்பளவு மேலுள்ள கம்பிகளின் பரப்பளவிற்குக் குறையாமல் இருக்கவேண்டும்; அவை மேலும் கீழும் இணைப்புக் கம்பிகள் எடுத்துச் செல்லப்பட வேண் டிய வடிவமைப்பு நீளத்திற்குக் குறையாமல் இருக்கு மாறு பார்த்துக் கொள்ள வேண்டும். கொக்கிகளின் இறுக்கு நீளத்தையும் சேர்த்து வடிவமைப்பு நீளம் கீழ்க்காணும் அளவிற்கு இருக்க வேண்டும். வளைவு இழுவிசையுள்ள கட்டுறுப்புப் பகுதிகளில் L (அ) 30 p நேர் இழுவிசையுள்ள கட்டுறுப்புப் பகுதிகளில் நேர் கம்பிகளில் இணைப்பு நீளம் அமுக்க விசையுள்ள கட்டுறுப்புப் பகுதிகளில் Li - வடிவமைப்பு நீளம் 2L (அ) 30 p 15 (அ) 20செ.மீ. Li (அ) 24 9 φας 4Tbd வலிவூட்டு கம்பியின் விட்ட அளவு கம்பியில் அப்பகுதியில் கருதும் வடிவமைப்பு -புத்தகைவு Tbd - வடிவமைப்புப் பிணைப்புத்தகைவு களை (bond stress) இருவேறு விட்ட அளவுடைய வலிவூட்டுங் கம்பி இணைக்க வேண்டியிருந்தால் குறைவான விட்ட அளவுடைய கம்பிக்குத் தேவையான தகை வேற்ற நீள அளவுக்கு மாற்றுக்கம்பி இணைந்து செல்லவேண்டும். இழுவிசையில், மென் எஃகிலான உருட்டுக் கம்பி களின் முனையில் கொக்கிகள் வளைக்கப்பட வேண் டும். ஆனால் தகைவேற்ற நீளமுடைய முறுக்குக் கம்பிகளுக்கு முடிவில் கொக்கிகள் தேவையில்லை. அமுக்க விசையில், சமதளக் கம்பிகளுக்குத் தகை வேற்ற நீளமே முடிவில் இறுக்கி வைக்கத் தேவை யான நீளமாகும். கொக்கிகளின் நீளம், வளைவு. வளைவைத் தாண்டியுள்ள கம்பி நீளம் முதலிய வற்றை அமுக்கத் தகைவிற்குத் தேவையான தகை வேற்ற நீளத்திற்குக் கணக்கில் எடுத்துக் கொள்ள லாம். இழுவிசையில் இறுதி இறுக்குநீளம் அல்லது பிடிப்பு நீளம் (anchorage length) கீழ்க்காணும் நீளங் களுக்குக் குறையாமல் இருக்க வேண்டும். நேர்கம்பி - 160 80 90. வளைகம்பி 45" வளைகம்பி 42 கம்பியின் விட்ட அளவு U - வடிவக் கொக்கிகளும் 16 – நீள அளவுக்குக் குறையாமல் இருக்கவேண்டும். வளையும் கட்டுறுப்புகளில் இழுவிசைவலிவூட்டிகளைக் குறைவெட்டல். இழுவிசை வலிவூட்டிகளைக் குறை வெட்டலுக்குட்படுத்தும்போது வளைவு உந்தத்தை எதிர்க்க எந்த இடத்திற்குமேல் இனி வலிவூட்டிகள் தேவையில்லையோ அவ்விடத்திலிருந்து அக்கட்டுறுப் பின் தொகு உயரம் (effective depth) அல்லது 129 (டி-கம்பியின் விட்டஅளவு) என்பனவற்றில் எது பெரிதோ அந்த நீளம் வரை கம்பிகள் எடுத்துச் செல்லப்பட்டுப் பின்பு குறைவெட்டப்படவேண்டும். ஆனால் எளிய தாக்கு அமைப்பிற்கோ தொங்கு கட்டுறுப்பின் முடிவிற்கோ இது பொருந்தாது. பின்வரும் நிபந்தனைகளுள் ஏதாவது ஒன்று பொருந்தினாலன்றிக் கட்டுறுப்பின் இழுவிசைப் பகுதியில் வளைவுத்திருப்புமை வலிவூட்டிகளைக் குறை வெட்டலுக்கு உட்படுத்தக்கூடாது; குறை வெட்டல் இடத்திலுள்ள துணிப்புத் தகைவு (shear stress) அனுமதிக்கப்படக்கூடிய அளவில் 2/3 மடங் கிற்கு மேலிருக்கக் கூடாது.