398 எள்
398 என் ndicum) என்பதாகும். பொதுவாக முழுமை பல து 100 செ. மீ. - 140 செ.மீ. உயரம் வரை வளரும் இயல்பு 150 கலப்பினச் செடி செ. மீ. டையது. சில உயரத்திற்கு மேல் பருத்த தண்டுடன் இருக்கும். இலைகள் வளைந்தும் (dentate) அல்லது யாகவும் இருக்கின்றன. இலையச்சுகளில் பூக்கள் ஒவ்வொன்றாகவோ, இரண்டாகவோ, மூன்றாகவோ இருக்கும். எள்ளின் பூக்கள் ஏறத்தாழப் பிக்னோனி யேசி வரிசைத் தரவரங்களை ஒத்திருக்கும். பூக்கள் வெண்மையிலிருந்து கரு ஊதா நிறம் வரை நிறங்களுடனும் குழல் (corolla) வடிவ அல்லிவட்டத் துடனும் இருக்கும். நான்கு மகரந்தக் கேசரங்கள் உள்ளன. மட்டச் சூலகம் இரு இரு செல்களை உடையது. நான்கு பட்டைகளுடைய அறை கொண்ட வெடிகனி வகையைச் சார்ந்தது; 4-5 செ.மீ.நீளம், 1-2 செ.மீ. பருமன் உடையது. வெள்ளை நிற எள் காய்கள் பழுப்பு நிற எள் காய் களைவிடப் பருத்தும் பெரிதாகவும் இருக்கும். மிகச் சிறிய விதைகள் எண்ணிக்கையில் தட்டையான முட்டை வடிவத்தோடு உள்ளன. விதைகள் வெண்மையிலிருந்து கறுப்பு வரை பல நிறங்களில் காணப்படும். கனி. எள் மிகவும் தொன்மை வாய்ந்த எண்ணெய் வித்துப் பயிராகும். இது மனிதப் பயன்பாட்டிற்கு வந்த காலத்தை அறுதியிட்டுக் கூற இயலாது. எத்தியோப்பியா, பாரசீகம். ஆப்கானிஸ்தான் முதலிய நாடுகளிலிருந்தும் எள் தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. எத்தியோப்பிய தோற்று வா வாய்க்குப் பின்னர் அது இந்தியாவுக்கும், சீனா விற்கும் பரவியமைக்கான சான்றுகள் உண்டு. . சாகுபடி செய்யும் பரப்பளவில் இந்தியா முதலி டம் பெற்றாலும் உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்தே உள்ளது. உத்தரப்பிரதேசம், மத்தியபிரதேசம், இராஜஸ்தானம் ஆகிய மாநிலங்களிலும் எள் மிகுதி யாகப் பயிரிடப்படுகிறது. உலக உற்பத்தி சரியாகக் கணக்கிடப்படவில்லை. உழவர்கள் உற்பத்தியின் பெரும்பகுதியைத் தம் பயன்பாட்டிற்கும் விதைக்கும் இருப்பு வைத்துக்கொள்வதே இதற்குக் காரண மாகும். இதற்குச் . சிசாமம் ஓரியண்டேல் (Sesamum orientale), சி. ஒலிஃபிரம் (S.oleilerum) என்றும் பல பெயர்கள் உண்டு. எள்ளைத் தவிர சி. அங்கஸ்டி போலியம் (S. angustifolium) சி.ஏடுயூல் (S. edule), சி. லுட்டியம் (S. luteum) என்னும் செடியைக் காய்கறிக்காகவும், மருத்துவத்திற்காகவும், ணெய்க்காகவும் பயிரிடுவதாகத் தெரிகிறது. எண் முப்பத்தாறு எள் இனத் தாவரங்கள் உள்ளன என்று அறியப்பட்டுள்ளது. இவற்றில் பாதிக்கு மேல் ஆப்பிரிக்கக் காடுகளில் வளர்கின்றன. இந்தியாவில் இருவகைச் செடிகள் உள்ளன. அவை சி. பிராஸ்ட்டி ரேடம் (S. prostratum) சி. வெசினியேட்டம் (S. laciniatum) எனப்படும். தமிழ்நாட்டில் நீண்டகால எள் (135 நாள்), குறுகிய கால எள் (80-90 நாள்) ஆகிய இருவகை எள் பயிரிடப்படுகிறது. நீர் வடிகால் வசதியுள்ள அனைத்து வகை நிலங்களிலும் எள் பயிரிடப்பட் டாலும், மணல் கலந்த செம்மன் அல்லது வண்டல் நிலங்களில் மிகவும் செழித்து வளரும். இப்பயிருக்கு நீர் தேங்கக் கூடாது. இது குறிப்பாக நிலக் கடலை, நெல், சோளம், கம்பு முதலிய பயிர்களுக்கு அடுத்த பயிராகவும், நிலக்கடலை சோளம், கம்பு பருப்பு வகைகளுடன் கலப்புப் பயிராகவும் பயிர் செய்யப்படுகிறது. ஹெக்டேருக்கு ஏறத்தாழ இரண்டு கிலோ விதை தேவையாகும். மணல் கலந்து விசிறுவது தமிழ் நாட்டில் வழக்கமாக உள்ளது. இந்த முறையில், இடைவெளி ஒரே சீராக இருக்காது. வரிக்கு வரி 45 செ. மீ. செடிக்குச் செடி 10 செ.மீ. இடை வெளி மானாவா பரிப் பயிருக்கும், செடிக்குச் செடி 20 செ.மீ. இடைவெளி இறைவைப் பயிருக்கும் ளிட வேண்டும். விதைத்த பதினைந்தாம் செடிகளைக் களை எடுத்து விட வேண்டும். மூன்று வாரத்திற்குப் பின்பு களை எடுப்பதும் மேலும் இரு வாரம் சென்ற பின்பு தேவையானால் இரண்டாம் களை எடுப்பதும் சிறந்தது. நாள் எள் பயிருக்கு உரமிடத் தேவையில்லை என்றா லும் ஹெக்டேருக்கு 10 வண்டி தொழு உரம், 20 கிலோ நைட்ரஜன், 10 கிலோ பாஸ்ஃபரஸ், 10 கிலோ பொட்டாஷ் உரம் இடுவது நல்லது. இறைவைப் பயிருக்கு 30,20,20 கிலோ விகிதத்தில் N, P, K உரம் தேவை. நீர்ப் பாய்ச்சுவது மண்ணின் தன்மையையும், பயிர்ச் சாகுபடியின்போது பெய்யும் மழை அளவை யும் பொறுத்தமையும். கோடையில் 7,8 முறை நீர் பாய்ச்ச வேண்டியிருக்கும். மானாவாரியில் ம ழை மிகுதியாக இருந்தால் நீர் வடிக்க வேண்டும். செடியில் தண்டும் காய்களும் பச்சை நிறத்திலிருந்து மஞ்சள் நிறத்திற்கு மாறிய உடனே செடிகளைப் பிடுங்கிக் குத்தாக வைக்க வேண்டும். நன்றாக முற்றிவிட்டால் காய்கள் வெடித்து விதைகள் சிதறி விடலாம். கறுப்பு முதல் வெள்ளை நிறம் வரை எள் பல நிறங்களில் உள்ளது. வட இந்தியாவில் வெள்ளை நிறவகையும் தமிழ்நாட்டில் கறுப்பு (சிவப்பு நிறவகை எள்ளும் மிகுதியாகச் சாகுபடி யாகின்றது. பயன். எள் விதை பலகாரங்கள், செய்யவும் தர்ப்பணத்திற்கும், மருத்துவத்திற்கும் பயன்படும். என் உடலுக்கு உறுதி தரும். எள் எண்ணெய் மிகவும்