420 எஸ் யூ (3), உயர் நிலைச் சமச்சீர்மை
420 எஸ் யூ (3) உயர் நிலைச் சமச்சீர்மை தன்மை என்றகருத்து, நியூக்ளியான்கள் Aஹைபாரன் கள் ஆகியவற்றுக்கு இடையிலான இடைவிசை களுக்கும் பொருந்தும் வகையில் பொதுவாக்கப்பட் டது. இவ்வாறு ஓரிடத்தனிம SU (2) சமச் சீர்மைக் கருத்தை விரிவுபடுத்தி SU (3) என்ற உயர்நிலைச் சமச்சீர்மை கருத குழுவாகக் வழியேற்பட்டது. இவற்றைப் பின்பற்றியே ஜெல் மான் என்பார் தனது எட்டு வழித் தத்துவத்தையும் (eight fold way) குவார் க்குகள் பற்றிய கருத்துகளையும் உருவாக்கினார். அண்மையில் ஹேட்ரான்கள் மூன்று அல்லது நான்கு அடிப்படைத் துகள்கள் அடங்கியவையாயிருக்கலாம் என்ற கருத்து உருவாயிருக்கிறது. ஆனால் அவை இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. அவை கண் ணில் படாத குவார்க்குகளாகக் கூடஇருக்கலாம். SU (3) என்பது ஒருமைத்தன்மையான (unitary) ஒற்றை மதிப்புள்ள (unimodular) 3×3 அணிகளின் (matrix) குழுவாகும். அதன் வரையறுப்பி முன் வைப்பு முப்பரிமாணமுள்ளது. ஜெல் மானின் எட்டு வழித் தத்துவம் சரியானதாக இருக்குமானால் எல்லா ஹேட்ரான்களும் SU (3) மிகுபன்மையுறுப்பி களாக அமைய வேண்டும். பரிசோதனைகள் அவ்வாறு இருப்பதாகத் தோன்றுவதாகவே காட்டு கின்றன. குறிப்பிட்ட தற்சுழற்சியும் சமானமும் (parity) உள்ள மெசான்கள் எப்போதும் ஒற்றையுறுப் பிகளாகவோ, எட்டுறுப்பிகளாகவோ (octet) வருகின்றன. அவ்வாறே தற்சுழற்சி - 2 மெசான்களில் ஒற்றையுறுப்பியும், எட்டுறுப்பியும் கொண்ட ஒரு கலப்பு உள்ளது. இது வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள எல்லா மெசான்களையும் SU (3) களாகவும் ஒற்றையுறுப்பிகளாகவும் சேர்த்துக் கொள்ள முடியும். எட்டுறுப்பு கணக்கில் பார்யான்களில் இதைவிட அதிகமான வகைகள் தென்படுகின்றன. தற்சுழற்சி - பார்யான்களைப் போன்ற பல எட்டுறுப்பிகளும், ஒற்றைப் படையான சமானமுள்ள தற்சுழற்சி - 1 \ போன்ற பல ஒற்றை யுறுப்பிகளும் உள்ளன. ஆனால் இரட்டைப்படை யான சமானமுள்ள, தற்சுழற்சி 3/2 பார்யான்கள் முற்றிலும் வேறுபட்ட தன்மையுடையவை. அவை SU (3)-இன் பத்துப்பரிமாணமுள்ள முன்வைப்பின் படி உருமாற்றமடைகின்றன. இந்தப் பத்துப் பரி மானங்களில் ஒன்றாகக் கருதி உரைக்கப்பட்டிருந்த - பார்யான் கண்டுபிடிக்கப்பட்ட பிறகே ஜெல் - மாலின் எட்டு வழித் தத்துவம் அறிவியலார்க்கு நம்பிக்கைக்குரியதாக ஆயிற்று. துவரை காணப்படும் எல்லாப் பார்யான்களும் SU (3)-இன் முன் வைப்புகளான ஒற்றையுறுப்பிகள். எட்டுறுப்பிகள், பத்துறுப்பிகள் ஆகியவற்றில் ஏதா வது ஒன்றைச் சேர்ந்தவையாகவே உள்ளன. அடிப் படைக் குவார்க்குகள் ஒரு SU (3) மூவுறுப்பியைப் போல உருமாற்றமடைகின்றன. ஒரு குவார்க்கும். ஓர் எதிர்க் குவார்க்கும் இணைந்து தோன்றியவை மெசான்கள் ஆகும். அவை ஒற்றையுறுப்பிகளாகவோ எட்டுறுப்பிகளாகவோதான் தோன்ற முடியும், பார்யான்கள் மூன்று குவார்க்குகளால் ஆனவை. எனவே அவை ஒற்றை உறுப்பிகளாகவோ எட்டுறுப்பிகளாகவோ, பத்துறுப்பிகளாகவோதான் (decimets) தோன்ற முடியும். துகள்களின் நிறைகள், மின்காந்தப் பண்புகள் போன்றவற்றை SU (3) தத்துவங்களின் அடிப்படையில் கணக்கிட்டுப்பார்க்கும் போது அவை ஆய்வு முடிவுகளுடன் ஒத்து வரு கின்றன. எட்டு வழித் தத்துவம் 1961-ஆம் ஆண்டில் முதன் முதலாக வெளியிடப்பட்டபோது அது நம்ப முடியாத அளவுக்கு கருது கோளை வெளியிடுவதாக அறிவியலார் கருதினார்கள். ஆனால் இன்று அது ஹேட்ரான் அமைப்பியலை (systematics) பற்றித் தோராயமான ஆனால் ஏற்கத்தக்க விளக்கங்களைத் தருவதாக அனைவரும் ஒப்புக் கொள்கின்றனர். மேலும் தோராயமான SU (3) மாறாமைத் தத்துவம், தோராயமான தற்சுழற்சி சாராத விசைகள் தத்து வத்துடன் இணைந்து சார்பியலற்ற SU (6) மாதிரி என்னும் கருத்தை உருவாக்க வழிகோலியிருக்கிறது. இக் கருத்தின்படி வெவ்வேறு தற்சுழற்சிகளுள்ள பல SU (3) மிகுபன்மையுறுப்பிகள் ஒன்றாய்ச் சேர்க் கப்பட்டு அவற்றை விடப் பெரிய SU (6) பன்மை யுறுப்பிகள் உருவாக்கப்படுகின்றன. இவ்வாறு இரட்டைப்படையான சமானமுள்ள தற்சுழற்சி - எட்டுறுப்பியும், தற்சுழற்சி 3/2 பத்துறுப்பியும் ஒரே அலகாக அமைகின்றன. இத் திட்டம் மிகவும் வெற்றிகரமாக ஹோட்ரான்களை விளக்குகிறது. அடிப்படையான குவார்க்குகளுக்கிடையிலான விசை தோராயமாகக் குவார்க்குத் தற்சுழற்சியையும், குவார்க்குப் பண்பொற்றுமையையும் (identity) சார்ந்திருக்கவில்லை என்ற கருத்துடன் உருவாக்கப் பட்ட ஒரு குவார்க்கு மாதிரியில் அத்திட்டத்தின் வெற்றி விளங்க தொடங்குகிறது. இவற்றின் அடிப் படையில் குலாண்டம் நிறவியக்கவியல் (quantum chromodynamics) என்ற புதிய இயல் மலர்ந்து கொண்டிருக்கிறது. -கே.என். இராமச்சந்திரன்