ஏ ஏக்கம் து தவிப்பு ஓர் இயல்பான மன எழுச்சியாகப் பொது வாழ்வில் அடிக்கடி விளையும் உணர்வாகும். இவ் வுணர்ச்சி குறைந்த அளவில் இருக்கும் போது தாங்கிக் து கொள்ளக் கூடியதாக இருக்கிறது. ஒரு மரண வனுக்குத் தன்னைத் தேர்வுக்கு ஆயத்தம் செய்து கொள்ள இந்த உணர்வு உதவுகிறது. ஆனால் பெரிய அள வில் தாக்கும் போது ஒருவரைச் செய லற்றுப் போகச் செய்வதோடு பல கடும் விளைவு களையும் உண்டாக்குகிறது. இந்நிலை அந்த மாண வனுடைய கவனத்தைக் குறைப்பதுடன் நினைவாற் றலையும் இழக்கச் செய்கிறது. சில நேரங்களில் இ னால் பேசும் திறமையைக்கூட இழக்க நேரிடுகிறது. புறச் சூழ்நிலையில் ஏற்படும் இடர்ப்பாடுகளே முக்கியமாக இந்நிலையை ஏற்படுத்துகிறது என்பது மருத்துவர்களின் பொதுவான கருத்து. தவிப்பை மாற்றும். அல்லது எதிர்க்கும் தன்மை பெற்ற மருந்து களாக பென்சோடையாசிபைன் போன்ற தூக்க மருந்துகள் இந்நோயாளிகளுக்கு உதவுகின்றன. மேலும் மருத்துவர்களின் மேற்பார்வையும் அவர்கள் அளிக்கும் உறுதியும், தன்னம்பிக்கையும் இவர்கள் நலமடையப் பெரிதும் உதவுகின்றன. நாளடைவில் சிலருக்குத் தானாகவே இந்நோய் மறைந்து விடலாம். ஆனால் கடுமையான இடர்ப்பாடுகள் ஏற்படுமே யானால் அவர்கள் மீண்டும் கடுமையாகத் தாக்கம் அடைவார்கள். . மனநோய் மருத்துவ இயலில் தவிப்பு என்ற நிலை முக்கிமானது. இது விட்டு விட்டோ, தொடர்ந்தோ ஏற்படும். இத்துடன் அச்சம், எரிச்சல் ஆகியவையும். மூச்சு வாங்குதல், வியர்த்துக் கொட்டல், நடுக்கம், துாக்கமின்மை என்பவையும் ஏற்படலாம். இவ் வெளிப்பாடுகள் நோயாளியின் உடல் நிலைக்குத் தொடர்பற்றவையாகவும். தவிப்பின் அளவிற்கும் வெளிப்பாட்டின் முனைப்பிற்கும் பொருத்தமின்றியும் காணப்படும். இந்தத் தவிப்பு நிலைமையின் கீழ்ப் பல நோய் கள் அடங்கும். அவை, தவிப்பு நிலையில் தேவை யற்ற அச்சம் (panic disorder). பொதுவான தவிப்பு நிலை (generalised anxiety disorder), தவிர்க்க முடி யாத கட்டாயப்படுத்தப்படும் நிலை (obsessive com- pulsive disorder), காயத்தைத் தொடர்ந்து ஏற்படும் இக்கட்டான நிலை (post traumatic stress disorder) போன்றவை. வெறுப்பு நிலையில் பொது இட மருட்சி (agro- phobia), சமுதாய மருட்சி (socialphobia), எளிய மருட்சி (simple phobia) என்பன போன்ற நோய் களும் உண்டாகலாம். சுவயம் ஜோதி ஏடன் வளைகுடா இது அரபிக்கடல் செங்கடல் இவற்றிற்கு இடையி லும் தென் ஏடன், சோமாலி குடியரசு நாடு இவற் றிற்கு இடையிலும் அமைந்துள்ள ஆழமான பகுதி யாகும். இது பாப்- எல்- மாண்டெப் எனும் நீர்ச்சந்தி மூலம் செங்கடலுடன் இணைந்துள்ளது. ஏமன் நாட் டின் துறைமுகப்பட்டினமாக ஏடனின் பெயரை இவ் வளைகுடா தாங்கியுள்ளது. இவ்வளைகுடா தனது மேற்குப் பகுதியில் டாட்ஜோரா என்னும் சிறிய வளைகுடாவைக் கொண்டுள்ளது. சுமார் 5,30,000 சதுர கி.மீ. பரப்புடைய ஏடன் வளைகுடா வடகிழக் கிலிருந்து தென் மேற்கு வரை சுமார் 1, 472 கி.மீ. நீளமும், வடக்கு-தெற்காக 480 கி.மீ. பெரும அகல மும் உடையது. இந்தியப் பெருங்கடலின் கீழ் படிந் துள்ள மலைத்தொடரின் ஒரு பகுதியான ஷேபா மலைமுகடு இவ்வளைகுடாவின் நடுவில் காணப்படு கிறது. இவ்வளைகுடாவில் 5.360 மீ. ஆழமுள்ள அலுலா - ஃபார்ட்டக் அகழியும், டாட்ஜோரா அகழி யும் அமைந்துள்ளன. ஏடன் வளைகுடாவின்
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/445
Appearance