422 ஏடி கூட்டியம்
422 ஏடி கூட்டியம் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை 25° -31°C ஆழமான பகுதியின் வெப்பமும், உவர்ப்பியமும் மேற்பகுதி நீரின் அளவைவிடக் குறைவாக உள்ளன. இவ்வளை குடாவில் ஏற்படும் நீர் மேலெழுச்சியின் விளைவாக, கடல் உயிரிகள் பெருமளவு காணப்படுகின்றன. மத்தி, அயிரை டால்ஃபின், டூனா (அலகு மீன்). சுறா ஆகி யவை இங்கு மிகுதியாகக் காணப்படுகின்றன. இனப் பெருக்கக் காலத்தில் கடலாமைகளும் சிங்கிறால் களும் இவ்வளைகுடரவை வந்தடைகின்றன. ஏடி கூட்டியம் ம.அ.மோகன் இந்நோயில் ஒளி கண்ணில் விழும்போது கண் பாவை சுருங்குவதில்லை. மேலும் பாவை குவிந்து இணை வதும், தகவமைவதும் தாமதமாகின்றன. ஒரு முறை பாவை சுருங்கினால் மிகவும் மெதுவாகவே விரி வடைகிறது. ஆகவே இந்த நோய் அர்கைல்- ராபர்ட் சன் கூட்டியத்தை ஒத்திருக்கும். அர்கைல்-ராபர்ட்சன் கூட்டியத்தில் தகவமைவு காணப்படுகிறது. ஆனால் ஏடி (adie) கூட்டியத்தில் பாவை வடிவத்தில் மாறு பாடடைகிறது. ஒளிக்கேற்ப, உடனடியாக விரிவடைவதில்லை. இந்த இயல்பில்லா நிலை ஒரு பக்கம் மட்டுமே காணப்படுவதால் பாவைகள் ஒரே சீராக இரா. சில நேரம் எந்தப் பக்கப் பாவை தாக்க முற்றுள்ளதோ அந்தப் பக்கத்தில், தசை நாண் அனிச் பாவை சைகள் காணப்படுவதில்லை. இதை ஹோல்ம்ஸ் ஏடி கூட்டியம் (Holme's-Adie syndrome) என்பர். அவர் கைல் ராபர்ட்சன் பாவைக்கும், ஏடியின் பாவைக்கு முள்ள வேறுபாட்டைத் தெரிந்து கொள்ள வேண் டும். கண் இமை இணைச் சவ்வினுள் தூய 2% மெதா கோலினைச் செலுத்தினால் ஏடியின் பாவை சுருங்கு கிறது. ஆனால் ஆர்கைல் ராபர்ட்சன் பாவை சுருங்கு வதில்லை. இந்த மெதாகோலின் இயல்பான பாவை யைப் பாதிப்பதில்லை. ஏடியின் கொண்ட நோயாளிக்குப் பார்வை மங்கலாகத் தெரியும். இந் நோய் பொதுவாக 30-40 வயதுப் பெண்களையே தாக்குகிறது. தசை நாண் அனிச்சைகள் மறைவதால் இதை மேக நோய் தொடர்புடையதாகக் கருதலாம். சாரதா கதிரேசன் ஏணி - பாவை உயரமான இடங்களில் ஏற, இறங்க எளிய கருவியாக ஏணி பயன்படுகிறது. கட்டடங்கள் கட்டுவதற்கும் பழுதுபார்ப்பதற்கும், கட்டடத் துறையின் ஒவ்வொரு வளர்ச்சிக்கும் ஏணியின் பயன் எண்ணற்றது. தொழி லகம், மருத்துவமனை, நூலகம், தீயணைப்பு நிலை யம், விமான நிலையம், விண்வெளி ஆய்வு நிலையம் போன்ற துறைகளிலும் ஏணிகள் பெரிதும் பயன் படுகின்றன. பயன்படுகின்ற பல இடங்களின் செயல்பாட்டிற் கேற்ப ஏணிகள் செய்யப்படுகின்றன. மேலும்