ஏப்டெரிஜிஃபார்மிஸ் 423
அவ்விடங்களின் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு ஏணிக ளைக் கட்டமைக்கின்ற பொருள்களும் மாறுபடுகின் றன . ஏணிகள் மூங்கில், மரம், உலோகம், கயிறு ஆகிய பொருள்களைக் கொண்டு உருவாக்கப்படுகின்றன. இரு பெரிய கம்பங்கள் (தூண் போன்ற அமைப்புகள்) சிறிய இணையான கழிகளின் இரு முனைகளிலும் இணைக்கப்படுகின்றன. படை க தீயணைப்புப் வீரர்களுக்கு வெள்ளப் பெருக்கு, தீ, ஆகிய காலங்களில் மடக்கு ஏணிகள் மிக வும்பக்கபலமாகப் பயன்படுகின்றன. இவ்வேணிகள் எந்திரக் கட்டுப்பாட்டினால் உயரமான இடங்களுக்கு மிகஎளிதாகவும் பாதுகாப்பாகவும் ஏற்றப்பட்டு, உயிர் பாதுகாப்பில் முக்கிய இடம் பெறுகிறது. இவ்வேணி களைத் விரைவாகப் பல இடங்களுக்குக் கொண்டு செல்லத் தனியான ஊர்திகள் இருக்கின்றன. அடுக்கு ஏணி என்ற வகையில் இரண்டு ஏணிகள் ஒன்றன் மீது ஒன்றாக இணைக்கப்பட்டுச் செயல் படுகின்றன. இவ்வேணிகள் சற்று உயரமான இடங் களில் பயன்படுகின்றன. படிக்கட்டு ஏணிகள் குறுக்குக்கழிகளுக்கு மாறாகப் பலகைகள் கொண்டு சாய்வுநிலைப் பலகைகளில் ணைக்கப்பட்டு அமைக்கப்படுகின்றன. இச்சாய்வு நிலைப்பலகைகளின் மறுபுறம் இரண்டு செங்குத்தான நிலைப்பலகைகள் தாங்குகின்றன. இவற்றின் உச்சி யில் ஒரு நீளச் செவ்வகப் பலகை உறுதியாக ஏணியை யும் அதன் தாங்கியையும் இணைக்கிறது. இந்தப் ஏப்டெரிஜிஃபார்மிஸ் 423 படிக்கட்டு ஏணிகள், விமானத் தளங்களில் விமானங் களில் ஏற இறங்கப் பயன்படுத்தப்படுகின்றன. படிக்கட்டு ஏணி சக்கரங்கள் பொருத்தப்பட்டு, எல்லா இடங்களிலும் எளிதாகக் கொண்டு செல்ல ஏதுவாகிறது. கயிற்றேணிகளில் கழிகளின் இரு முனைகளும் கயிறுகளால் இணைக்கப்பட்டு அமைக்கப்படுகின்றன. இவ்வேணிகள் மலை ஏறுதல், சர்க்கஸ் கூடாரம், கட்டடத் துறை, கப்பல் இவற்றில் மிக உயரத்தில் ணைக்கப்பட்டுப் பயன்படுத்தப்படுகின்றன. தனை நூலேணி என்பர். ஏணிகள் மனிதவர்க்கத்தின் வளர்ச்சியிலும், பாதுகாப்பிலும் மிக முக்கிய பங்கு வகிப்பதால் இவற்றின் அமைப்பு முறையில் மிகு கவனம் தேவை. சுவர் ஏணி. கிணறு, நீர்த்தொட்டி கழிவறைக் குழாய் இவற்றைக் கட்டி அமைக்கும்போது இவ்வேணி யின் அமைப்புகளையும் சேர்த்து அமைக்கின்றனர். இவ்வகை ஏணிகள் அடிக்கடி பயன்படுவதால், நிலை யாகச் சுவர்களில் பதிக்கப்படுகின்றன. ஏப்டெரிஜிஃபர்மிஸ் காண்க: பறக்கவியலாப் பறவை க. ஜெகதீசன் ஏப்பையார்னித்தீடியா யானைப் பறவைகள் என்னும் பறக்க இயலாப் பறவைகள் ஏப்பையார்னித்திடியா (Aepyornithidea) என்னும் வரிசையைச் சேர்ந்தவை. இந்த வரிசை, பறவைகள் வகுப்பில், நியார்னித்திஸ் உள்வகுப்பில் பேலியோநேத்தே என்னும் மேல் வரிசையின் கீழ் வகைப் படுத்தப்பட்டுள்ளது. யானைப் பறவைகள் குவார்ட்டர்னரி காலத்தில் (quarternary period மடகாஸ்கரில் வாழ்ந்தன என அறியப்படுகிறது. முல்லெரார்னிஸ், ஏப்பையார்னிஸ் ஆகிய பறவை களின் புதைபடிவங்கள் சுமார் இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய படிவுப் பாறைகளில் கிடைக்கின்றன. இவை நெருப்புக் கோழியைப் போன்ற தோற்றம் பெற்றிருந்தன. சுமார் சுமார் ஏழு மீட்டர் உயரமும், நீண்ட வலுவான கால்களும் பெற்றிருந்தன. கால் ஒவ்வொன்றிலும் நான்கு விரல்கள் காணப்பட்டன. இப்பறவைகள் பறக்கும் திறனற்று மிகச்சிறிய சிறகுகள் மட்டுமே கொண் டிருந்தன. இவற்றின் தடித்த, முட்டை ஓடுகள்