உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/493

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழிலைப்பாலை 469

எப்பொழுதும் பசுமையான இதன் அடிமரம் உருண்டையாகக் காணப்பட்டாலும் செங்குத்தான பலகை போன்ற நீட்சிகளைக் கொண்டது. மரப் பட்டை வெட்டப்பட்டால் பால் போன்ற நீர்மம் வெளிப்படும். மரப்பட்டையின் உட்புறம் மஞ்சளாக இருக்கும், கிளைகள் வட்ட அமைப்பு உடையவை. கணுவுக்கு 4-7 இலைகள் வரையுண்டு. தமிழ்ப்பெய ரான ஏழிலைப்பாலை இதன் அடிப்படையில் இடப் பட்டதாகும். இலைகள் நீண்டகாம்புடன் இலையடிச் செதில்கள் அற்று இருக்கும் இலைப் பரப்பு தலைகீழ் ஈட்டிமுனை (oblanceolate) வடிவம் கொண்டது; தோல் போன்றது. பக்க நரம்புகள்30-60 இணையாக அமைந்திருக்கும். இலைப் பரப்பின் கீழ்ப்புறம் வெண் மையாகக் காணப்படும். மஞ்சரி. குடை மஞ்சரி (umb:1) அடுக்கடுக்காக விளக்குப் போல் காணப்படும். மலர்கள் மிகச்சிறிய காம்பு கொண்டவை. மலர்கள் சிறியவை; வெளிர் பச்சை நிறமும், மசாலாமணமும் கொண்டவை: இரு பால். ஒழுங்கானவை, ஆரச்சமச்சீர் கொண்டவை. புல்லிவட்டம். இணைந்தது, கிண்ணம் போன்றது, மேற்பகுதி ஐந்து சமமற்ற மடல்களைக் கொண்டது. மென்தூவிகளால் சூழப்பட்டது. அல்லிவட்டம். இணைந்தது, தந்தநிறம்கொண்டது அல்லிக்குழல் 1 செ.மீ. நீளமிருக்கும். மகரந்தத்தாள் கள் கொண்ட நடுப்பகுதி மட்டும் சற்றுப் பருத் திருக்கும். வெளிநோக்கி நீண்டுள்ள மடல்கள் இடப் புறமாகத் திருகு அமைப்பிலிருக்கும். அல்லிக்குழலின் கழுத்துப் பகுதியின் உட்புறம் கீழ்நோக்கிய நீண்ட தூவிகள் காணப்படும். மகரந்தத்தான். அல்லி ஒட்டியவை; மகரந்தப் பைகள் இதய வடிவம் கொண்டவை. அல்லிக் குழல் உள்ளடங்கி அமைந்திருக்கும். சூலகம். சூல்பைகள் இரண்டு, தனித்தவை ; மேல் மட்டச் சூல்பை, சூல்கள் பல விளிம்பு ஒட்டிய முறை ஒரு சூல்தண்டு 5 மி.மீ. நீளம் சூல்முடி தலைகீழ் கூம்பு வடிவம் கொண்டது. கனி. சூல்பைகள் தனித்தவையாதலால் திரள் கனியாகும். ஒவ்வொரு சிறு கனியும் (mericarp) ஒரு புற வெடிகனி (follicle) ஆகும். இணையாகக் காணப் படும். கனி ஒவ்வொன்றும் ஏறத்தாழ 30-60 செ.மீ. நீளமிருக்கும். ஏழிலைப்பாலை மரம் பூக்கும் நிலை யிலும், கொத்துக் கொத்தாகத் தொங்கும் காய்க ளோடு கூடிய நிலையிலும் மிகவும் அழகாக இருக்கும். விதைகள் தட்டையாக இரு முனைகளிலும் கற்றை யான தூண்களைக் கொண்டிருக்கும். ம்மரத்தின் வணிகப் பெயர் சைத்தான் மரம் ஏழிலைப்பாலை 469 என்பதாகும். இது வட இந்தியப் பெயர்களிலிருந்து சூட்டப்பட்டதாகும். வடமொழியில் சப்தபர்ணம் என்பதும், தமிழில் ஏழிலைப்பாலை என்பதும், இலை களின் அமைப்பின் அடிப்படையில் சூட்டப் பட்டவை. பொருளாதாரச் சிறப்பு. அறுத்த மரக்கட்டைகள் வெள்ளையாக தொடக்கத்தில் இருந்து பின்னர் மஞ்சள் அல்லது பழுப்பு நிறத்திற்கு மாறிவிடும். கட்டை பளபளப்பாகவும், மிருதுவாகவும், இருக்கும் ரம்பத்தால் அறுப்பது எளிது. ஆனால் இம்மரம் நீடித்து இல்லாமல் பூச்சி அரிப்பு, பூஞ்சைத் தாக்கு தலுக்கு எளிதாக உட்படக்கூடியது. இம்மரத்தின் கட்டைகளைக் கொண்டு அக்காலத் தில் குழந்தைகளுக்கு எழுதுபலகை தயாரித்து வந்தனர். இதன் சிற்றினப்பெயரான ஸ்கொலாரிஸ் என்பது இதன் அடிப்படையாகக் கொண்டு சூட்டப் பட்டதாகும். மேலும் கட்டையைக் கொண்டு கரும் பலகை ஓட்டுப்பலகை, தீக்குச்சி, பென்சில், பெட்டி முதலியவை தயாரிக்கின்றனர். மரத்திலிருந்து வரும் பாலில், அழுத்தமில்லாத ரப்பரைச் சார்ந்த பொருள் கள் செய்யப்படுகின்றன. கேடச்சு என்பது ஏறத்தாழ 2-8% அளவு இதில் உள்ளது. கெட்டிப்படுத்தும்போது இதில் ரப்பர் போன்ற பொருள் 12-30% உம். ரோசனம் 70-78% உம் காணப்படும். கசப்புச் சுவை கொண்ட இது கட்டிகளுக்கும். காயங்களுக்கும் சிறந்த மருந்தாகும். இம்மரத்தின் காய்ந்த பட்டையை வணிகத்துறை யில் சேட்டிம் என்று குறிப்பிடுவர். இது மருந்தாகப் பயன்படுகிறது. தீவிர வயிற்றுப்போக்கு, ரத்தபேதி இவற்றிற்கு ஏற்ற மருந்தாகவும் வலிமைதரும் மருந்தாகவும் மலேரியா காய்ச்சலுக்கு சிறந்த மருந் தாகவும் இது பயன்படுகிறது. மரப்பட்டையிலுள்ள அல்கலாய்டான எகிடமைனே இதற்குக் காரணம் என்பர். இந்த அல்கலாய்டு, எகிடமைன் அமீபா போன்ற ஒரு செல் உயிரிகளைக் கொல்லக்கூடிய நச்சுத்தன்மை கொண்டதன்று. அதனால் மலேரியா நோய்க்குக் காரணமான கிருமியைக் கொல்லும் ஆற்றல் இதற்கில்லை என்றும் சிலர் கூறுவதுண்டு. தொடக்க நிலையில் இது இரத்த அழுத்தத்தைச் சற்றுக் குறைப்பதுண்டு என்றும் கூறப்படுகிறது. சில நூல்கள் சேட்டிம் மலேரியாவிற்குச் சிறந்த மருந்து எனக்குறிப்பிடுகின்றன. இம்மருந்தைப் பயன்படுத்தும் போது உடல் வெப்பம் மெதுவாகக் குறைவதோடு வியர்வை களைப்பு இவற்றையும் ஏற்படுத்து வதில்லை. ஆனால் பிற மலேரியா மருந்துகளில் இப் பக்க விளைவுகள் ஏற்படுவதுண்டு. சேடிபிள் இத்தகு மலேரியா நோய் நீக்கும் குணத்தைப் பொறுத்து வேறுபட்ட கருத்துக்களும் உள்ளன. தி. ஸ்ரீகணேசன்