உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/494

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

470 ஏற்பணு

470 ஏற்பணு ஏற்பணு விட ஒரு சிலிகான். படிகப் ஜெர்மேனியம் போன்ற பொருள்கள் பகுதிக் கடத்திகளாகச் (semi conductor) செயல்படுவதற்குக் காரணம் மிக நுண்ணிய அளவில் அவற்றில் சேர்க்கப்படும் வேற்றுப்பொருளே ஆகும். சேர்க்கப்படும் வேற்றுப் பொருளின் தன்மைக்கு ஏற்ப, எண்ணிக் படிகத்தில் கட்டற்ற எலெக்ட்ரான்களின் கையோ நேர்மின் துளைகளின் எண்ணிக்கையோ பெருக முடியும். எந்த வேற்றுப் பொருள், படிகத் திலிருந்து ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எலெக்ட்ரான்களை ஏற்றுக்கொண்டு எதிர் மின் னூட்டம் பெற்று விளங்குகின்றதோ, அவ்வேற்றுப் பொருள் ஏற்பணு எனப்படும். இவ்வேற்பணுக்கள், படிகத்தில் உள்ள இயல் அணுக்களை பிணை எலெக்ட்ரானைக் குறைவாகப் பெற்றிருக்கும். அலுமினியம், போன்ற இன்டியம் பொருள்கள் சிலிகான், ஜெர்மேனியம் போன்ற பொருள்களில் ஏற்பணுக்களாகவும், ஆன்ட்டிமனி. பிஸ்மத் போன்ற பொருள்கள் டெல்லூரியம் போன்ற படிகப் பொருள்களில் ஏற் பணுக்களாகவும் விளங்குகின்றன. இவற்றின் சேர்க்கையால், குறை கட த்திகளில் நேர்மின் துளைகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. படிகத் தின் இணைதிறன் கடத்தல் பட்டையிலிருந்து(valence band) எலெக்ட்ரான் ஏற்பணுவால் ஏற்றுக்கொள்ளப் படுவதால் விளையும் ஆற்றல் மிகைப்பு, அவ்வணு வின் அயனியாக்க ஆற்றலே ஆகும். படிகப் ஏற்பு காலியம், மெ.மெய்யப்பன் ஒரு மின் சுற்றுவழியின் மின்விடுப்பு (Y), கலப்பு எண்ணால் குறிக்கப்படும்போது அமையும் அதன் கற்பனைப் பகுதி ஏற்பு (susceptance) எனப்படும். Y: Y = G+ jB என்னும் சமன்பாட்டில், G என்பது கடத்தத்தையும், B என்பது ஏற்பினையும் (susceptance) குறிக்கும். மேலும், Y = Z = 1 R + j X இந்தச் சமன்பாட்டில் R என்பது மின்தடை மற்றும் x X = (XL - Xc) என்பது தொகு தூண்ட எதிர் வினைப்பு. ஆகையால், R R2+ X X j R* + X* மற்றும் B X R2X2 மேற்கூறிய ஏற்பின் பொதுவான சமன் பாட்டி லிருந்து, அது மின்தடை மற்றும் தூண்ட எதிர் வினைப்பு (inductive reactance) இரண்டையும் சார்ந் தது என்பது தெளிவாகும். மின்தடை மிகவும் குறை வாக இருந்தால், அதனைத் தள்ளுபடி செய்து B I எனலாம். அதாவது ஏற்புத் தூண்ட எதிர்வினைப்பின் தலைகீழ் என்று கூறலாம். மின் தடை இல்லாத சுற்றுவழியில் தூண்ட ஏற்பு BL=. 1 = —jB, சீமன்ஸ் JXL I கொண்ம ஏற்பு Bc =jBc சீமன்ஸ் -j X. இந்தச் சமன்பாடுகள் மாறுமின்னோட்டம் பாயும் இணைச் சுற்றுக்களைப் பற்றிய கணிப்புகளுக்கு மிகவும் பயன் வாய்ந்தவை. ஏற்பு, காந்த சு. சண்முகசுந்தரம் இது காந்தப் புலத்தில் உள்ள ஓர் அலகுப் பொருளில் ஏற்படும் காந்த ஏற்றம் ஆகும். ஒரு காந்தப் புலத்தில் வைக்கப்படும் பொருளில் ஏற்படும் காந்த விளைவை இது குறிக்கின்றது. M என்பது காந்த ஏற்றமும் H என்பது ஊட்டிய காந்தப்புலமுமானால், காந்த ஏற்பு (magnetic susceptibility) என்பது கீழ்க்காணும் சமன்பாட்டின்படி அமையும். M X = H M என்பது Hக்கு இணையாக இல்லாதபோது, Xஒரு டென்சராக (tensor) இருக்கும். மற்ற சமயங்களில் சாதாரண எண்ணாக இருக்கும். படிகப் பொருள் களுக்கு, X ஆனது Hக்கும் படிகத்தின் அச்சுக்கும் உள்ள திசையினைப் பொறுத்து அமையும். காந்த ஏற்பைப் பல வகைகளில் குறிக்கலாம். அவை, அலகு எடைக்கான ஏற்பு, ஒரு அணுவிற்கான ஏற்பு, அலகு பருமனுக்கான ஏற்பு மற்றும் ஒரு மோலுக்கான (mole) ஏற்பு என்பன. நிலையியல் (static) ஏற்பு, நிலையான காந்தப் புலத்தில்