ஒட்டுண்ணித் தாவரம் 521
தூய்மையையும், அவை எவ்வளவு தொலைவு அணுகிப் பிணைந்துள்ளன என்பதையும் பரப்புகளுக் கிடையேயுள்ள அமுக்கத்தையும் பொறுத்திருக்கும். கண் ஒரு நீர்மத்தை ஒரு திண்மத்தின் மீது பட்டுக் கொண்டிருக்குமாறு வைத்தால் இவ்விரு பொருள் களுக்கும் இடையே ஏற்படும் ஒட்டியல்பு வினை களால் அவை ஒட்டியிருக்கும். காட்டாக, ணாடித் தகடு ஒன்றை ஒரு நீர்ப்பரப்பின் மீது வைக்கலாம். இப்போது. கண்ணாடித் தகட்டை நீர்ப்பரப்பிலிருந்து பிரித்தெடுக்க முயன்றால் அது சற்றுக் கடினமாக இருக்கும். இது, கண்ணாடிக்கும் நீருக்கும் இடையேயுள்ள ஒட்டியல்பு, விசை அளவால் பெரிது என்பதை உணர்த்துகின்றது. நீர்ப் பரப்பிலிருந்து பிரித்தெடுத்த கண்ணாடித் தகட்டில் நீர் ஒட்டியிருக்கக் காணலாம். இதி 'லிருந்து நீர் மூலக்கூறுகளுக்கிடையேயுள்ள பிணைவு விசையைவிடக் கண்ணாடி-நீர் ஒட்டியல்பு விசை உயர்ந்தது என அறியலாம். இதேபோன்று பாத ரசத்துக்கும் கண்ணாடிக்கும் உள்ள ஒட்டியல்பு விசை உயர்வாக இருந்தாலும் பாதரசத் துகள்களுக் கிடையேயுள்ள பிணைவு விசை அதனினும் மிகை யானது. எனவேதான் பாதரசம் கண்ணாடியில் ஒட்டுவதில்லை. பரப்பு விசை (surface tension), நுண்புழைத் தன்மை (capillarity) போன்ற பண்புகள் வளிமம் திண்மம் நீர்மங்களின் மேற்பரப்பில் உறிஞ்சப்படுதல் (adsorption) போன்ற நிகழ்ச்சிகள் ஒட்டியல்பால் பெரிதும் தாக்கமடையும். ஒட்டுண்ணித் தாவரம் ச.சம்பத் உயிருள்ள தாவரங்களிலோ, விலங்குகளிலோ ஒட்டுண்ணிகள் ஒட்டிக் கொண்டு அவற்றிலிருந்து உணவை உறிஞ்சி வாழ்கின்றன. அவற்றிற்கு உணவை வழங்குபவை ஒம்புயிரிகள் (hosts) எனப்படும். ஒட்டுண்ணிகள் பெரும்பாலும் பூஞ்சை களிலும், பாக்டீரியா வகைகளிலும் காணப்படும். ஒரு சில பூஞ்சைகள் நொதிகளைத் தோற்றுவித்து ஒம்புயிரிகளின் செல் சுவரை அரித்து இழைகளை (hyphae) உட்செலுத்துகின்றன. பூஞ்சைகளின் இழைகள் ஒம்புயிரிகளின் திசுக்களில் பரவி வளர்ந்து உறிஞ்சு உறுப்பு (haustoria) மூலம் உணவை உறிஞ்சு கின்றன. எ.கா. ரஸ்ட், (rust) ஸ்மட் (smut) நோய்கள்; இவ்வாறே, பாக்டீரியாக்கள் பல நோய்களைத் தோற்றுவிக்கின்றன. . தாவர ஆப்பிள் பேரிக்காய் நெருப்பு அழுகல் நோய் என்பது பேசில்லஸ் ஆமைலோவோரஸ் என்னும் . ஒட்டுண்ணித் தாவரம் 521 பாக்டீரியாவால் ஏற்படுகிறது. கிரவுன் கால் (gall) என்பது தக்காளிச் செடியில் பாக்டீரியம் ட்யூமி பேசியன்ஸால் ஏற்படுகின்றது. எலுமிச்சை அழுகல் (citrus canker) சூடோமோனாஸ் சிட்ரி என்னும் நோய். கத்தரிக் குடும்பத்தில் சூடோமோனாஸ், சோலானேசியாரம் என்னும் பாக்டீரியத்தால் ஏற்படு கின்றது. மேலும் விலங்குகளிலும், மனித இனத் திலும் உண்டாகும் பல்வேறு நோய்களில் டைபாய்டு, காலரா, எலும்புருக்கி முதலியனவும் பாக்டீரியா வால் ஏற்படுகின் ன்றன. பூக்கும் தாவரங்களிலும் ஒட்டுண்ணிகள் உண்டு. அவற்றுள் கஸ்குட்டா, விஸ்கம் லோராந்தஸ் ஆகியன குறிப்பிடத்தக்கவை. கஸ்குட்டா என்பது முழு ஒட்டுண்ணியாகும். இது சிறு செடிகள், குறுஞ்செடிகள் மரங்கள் ஆகியவற்றைத் தாக்கி வாழும். குறிப்பாக இது இலந்தை மரங் களைத் தாக்கும். இவ்வொட்டுண்ணிகள் வெளிர் மஞ்சள் தண்டு, சிறுசெதில் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். உணவை வழங்கும் ஒம்புயிர்த் தாவரத்தைச் சுற்றி வளரும் இடைவெளிகளில் இவை உறிஞ்சு வேர்களைத் தோற்றுவித்து ஒம்புயிர்த் தாவரத்தின் திசுக்களைத் துளைத்து உணவை உறிஞ்சும். ஒட்டுண்ணித் தாவரத்தின் உறிஞ்சு வேரில் உள்ள ஸைலம் ஒம்புயிர்த் தாவரத்தின் ஸைலம் திசுக்களுடன் சேர்ந்து, நீரையும், ஒட்டுயிர் ப்ளோயம் ஓம்புயிர்த் தாவரத்தின் ப்ளோயத்துடன் கூடி உணவையும், உறிஞ்சி வாழ்கின்றன. கஸ்குட்டா வின் பழம், விதை இவை மண்ணில் வளர்ந்து வித்திலைகளைத் தாராமல் ஒரு முனை மண்ணிலும், மறுமுனை நீண்டு உயர்ந்து பற்றுக் கம்பியால் பக்கத்தில் உள்ள தாவரத்தைச் சுற்றியும் உறிஞ்சு வேர்களைத் தோற்றுவிக்கும். கஸ்குட்டா வளர்ந்ததும் பக்கத்தில் எந்த ஒம்புயிரியும் இல்லாதபோது இறந்து விடும். கேசித்தா பிலிபார்மிஸ் என்ற லாரேசி குடும்பத்தாவரம், இவ்வகை ஒட்டுண்ணியே ஆகும். இது கடற்கரை ஓரத்தில் வளரக்கூடியது. இதன் வளரியல்பும் உணவை எடுத்துக் கொள்ளும் முறை யும், கஸ்குட்டாவை ஒத்திருக்கும். மேல் வேறுசில தாவரங்கள், பிற தாவர வேர்களின் ஒட்டுண்ணிகளாக வளரும். இவற்றை வேர் ஒட்டுண்ணி என்பர். எ.கா. ஒரோபங்கி (Orobanche) பலனாஃபேரா (Balanophora) ஸ்டிரைகா (Striga) ஒரோபங்கி செர்நுய் (Orobanche cernui) என்ற ஒட்டுண்ணி, கத்தரி, புகையிலை, டர்னிப் (Turnip) வேர்களில் முதலியவற்றின் காணப்படுகிறது. சிஸ்டான்சி (Cistanche) என்ற ஒட்டுண்ணி இலை யற்ற தண்டுடன் கூடிய சிறிய தாவரமான எருக்கஞ் செடியின் வேர்களிலும் ஸ்டிரைகா என்னும் ஒட் டுண்ணி, கரும்புச் செடியின் வேர்களிலும் காணப் படும். பேலனோபோரா என்ற வேர் ஓட்டுண்ணி வெப்ப மண்டலக் காடுகள் மிகுந்துள்ள அஸ்ஸாம்.