522 ஒட்டுண்ணித்துவம்
522 ஒட்டுண்ணித்துவம் பர்மா முதலிய இடங்களில் காணப்படுகிறது. ராப் லிஸியா என்ற தாவரக் குடும்பத்திலேயே இது அகல மான (1மீ) பூவைக் கொண்ட தாவரமாகும். இது பிற தாவரங்களின் வேர்களிலிருந்து வளரும். மேற் கூறிய தாவரங்கள் அனைத்திலும் பசுங்கனிகங்கள் இல்லாமையால் அவை முழு ஒட்டுண்ணிகளாகும். பிற ஒட்டுண்ணிகள் நீரையும், தாதுப் பொருள் களையும் மட்டும் ஒம்புயிரியிலிருந்து எடுத்துக் கொள் கின்றன. அவற்றிற்கு இலைகள் உள்ளமையால் சூரிய ஒளியின் உதவியால் தமக்கு வேண்டிய உணவைத் தாமே தயாரித்துக் கொள்கின்றன. அவற்றின் உறிஞ்சு வேர்கள் ஓம்புயிரியின் சைலம் திசுக்களுடன் மட்டுமே தொடர்பு கொள்கின்றன. எ.கா. விஸ்கம், லோராந்தஸ் இவ்விருவகை ஒட் டுண்ணித் தாவரங்களும் உட்கவர்தலிலும் விதை பரவுதலிலும் ஒத்துள்ளன. இவற்றின் பழத்தைப் பறவைகள் உண்டு எச்சமிடும்போது விதை மற்றொரு மரத்தின் மேல் விழுந்து ஒட்டிக்கொண்டு வளர்ந்து. உறிஞ்சு வேர்களைத் தோற்றுவித்து மரத்தின் பட்டையைத் துளைத்து நீரை உறிஞ்சி வளர்கிறது. ஓம்புயிர்த் தாவரத்தின், தண்டு மேலும் வளர்ந்து ஓம்புயிர்த் தாவரத்தில் பரவித் தக்க வைத்துக் கொள்கிறது. இது ஒம்புயிர்த் தாவரத்திற்கு எவ் விதக் கெடுதலையும் உண்டாக்குவதில்லை. விஸ்கம், வேராந்தாஸ் என்பவை பெரும்பாலும் ஒக், செந் நட்டு, வால்நட் மரங்களில் வளர்கின்றன. தென்னிந்தியாவில் மைசூர். குடகு, தமிழ்நாடு முதலான இடங்களில் பகுதி ஒட்டுண்ணி காணப்படு கிறது. இதுவே வேர் ஒட்டுண்ணி வகையான சந்தன மரம் ஆகும். இதன் வேர் பல உறிஞ்சுவேர்களைத் தோற்றுவித்து அருகில் வளரும் தாவரத்தின் வேர்க ளுடன் தொடர்பு கொண்டு வாழும். ஒரு சந்தன மேல் மரத்தின் கன்று ஓராண்டிற்கு வாழாது. அதற்கு மேல் தாவரங்களின் அது. அருகிலுள்ள வேர்களோடு தொடர்பு கொண்டால் தான் வாழ முடியும். உசிலை, உன்னி யூகாலிப்டஸ், பருத்தி, மஞ்சனத்தி, ஈட்டி பாலை முதலியன சந்தனமரத் தொடர்பு கொள்ளும் ஒம்புயிரிகளாக உள்ளன. பா. அண்ணாதுரை ஒட்டுண்ணித்துவம் அனைத்து உயிரிகளும் தனித்து வாழாமல் தங் களுக்குள் பல்வேறு உறவு முறைகளைக் கொண்டு வாழ்கின்றன. சில தாவரங்கள் பிற தாவரங்களைச் சார்ந்தும், சில விலங்குகள் தாவரங்களையோ பிற விலங்குகளையோ சார்ந்தும் வாழ்கின்றன. இவ்வுயிரி களின் உறவு முறையில் ஒட்டுண்ணித்துவமும் (para- sitism) ஒன்றாகும். இவ்வுறவு முறையில், இரண்டு உயிரிகளில் ஒன்று மற்றொன்றின் மூலமாக உணவை யும் உறைவிடத்தையும் பெற்று வாழும் உணவையும், ஓம்புயிரி உறைவிடத்தையும் கொடுக்கின்ற உயிரி (host) எனக் குறிப்பிடப்படுகிறது. உணவைப் பறித்து அவ்வுயிரியிடம் வாழும் உயிரிக்கு ஒட்டுண்ணி என்று பெயர். இதனை மள்ளை என்றும், புல்லுருவி என்றும் குறிப்பிடுவர். ஒட்டுண்ணி உயிரிகள், படிமலர்ச்சி முறைப்படி முதலில் தனித்து வாழும் திறன் பெற்றிருந்தன, பின் னர் தற்செயலாக அவை பிற உயிரிகளைச் சார்ந்து வாழும் ஒட்டுண்ணிகளாக மாறினவென்று கருதப் படுகின்றது. ஒட்டுண்ணிகள் அவை ஓம்புயிரிகளின் உடலில் தங்கும் காலம், இடம், வாழ்வு முறைகளை யொட்டிப் பல வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. பகுதி ஒட்டுண்ணிகள். இவ்வகை ஒட்டுண்ணிகள் தங்களுடைய வாழ்நாளில் ஒரு பகுதிக் காலத்தையே ஓம்புயிரியிடம் கழிக்கின்றன. எஞ்சிய பகுதிக் காலங் களில் அவை தனித்தே வாழ்கின்றன. முழுமையான அல்லது நிலைத்த ஒட்டுண்ணிகள். இவ்வகை ஒட்டுண்ணிகள் தங்களுடைய வாழ்நாள் முழுதும் பிற உயிரிகளைக் கட்டாயமாகச் சார்ந்து வாழ்கின்றன. இவை ஓம்புயிரியின் உடலின் வெளிப் புறத்தில் வாழுமேயானால் வெளி ஒட்டுண்ணிகள் (ectoparasites) என்றும், உடல் உட்பகுதிகளில் அதா வது ஓம்புயிரியின் திசுக்களிலும் உறுப்புகளிலும் வாழ்வதையொட்டி உள் ஒட்டுண்ணிகள் (endoparasi- tes) என்றும் பிரிக்கப்படுகின்றன. சில ஒட்டுண்ணிகள். தங்களின் வாழ்நாளில் முழுப்பகுதியையும் ஒம்புயிரியிடம் கழித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்திற்குட்பட்டவை. அவ் வாறு ஓம்புயிரிடம் வாழும் வசதி தடைப்படுமே யானால் இவ்வொட்டுண்ணிகள் இறக்க நேரிடும். இவ்வகை ஒட்டுண்ணிகள் கடப்பாட்டு ஒட்டுண்ணிகள் (obligatory parasites) எனப்படுகின்றன. தன்னிச்சையாக வாழும் ஒட்டுண்ணிகள். தங்கள் விருப்பத்திற்கேற்ப, ஒட்டுண்ணிகளாகவோ தனித்தோ வாழக் கூடியவை. ஒட்டுண்ணிகளிடமே வேறு சில உயிரிகள் சார்ந்து அவற்றின் ஒட்டுண்ணிக ளாக வாழ்கின்றன. அவை ஒட்டுண்ணியின் ஒட்டுண் ணிகள் (hyper parasites) எனப்படும். இவை தவிர டுண்ணிகளிடை டையே. ஆண் ஓட்டுண்ணி பெண் ணுயிரியையும், பெண் ஒட்டுண்ணி ஆணுயுயிரியையும் சார்ந்து வாழும். இவை பால் சார்ந்த ஒட்டுண்ணிகள் எனப்படும். மேலும் பலவித நன்மைகளுக்காகச் சில உயிரிகள் தம்மினம் சாரா - வேற்றின உயிரிகளைப் பயன்படுத்தி வாழ்கின்றன. இவை சமூக ஒட்டுண்ணி கள் எனப்படும்.