உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/567

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒடுக்கல்‌ (மின்‌ பொறியியல்‌) 543

அதிர்வுகளின் ஒடுக்கம் (vibration damping). ஒரு பொருளின் அதிர்வு ஆற்றலை வெப்ப ஆற்றலாக மாற்றும் முறை அதிர்வு ஒடுக்கம் எனப்படுகிறது. சைவு (resonant) நிலைகளில் இந்த அதிர்வு ஒடுக்கம் பயனுள்ளதாக இருக்கிறது. இசைவுப் புள்ளியைத் தாண்டிய அதிர்வு எண்களை உடைய அமைப்பை ஒடுக்கம் செய்வது நல்லதன்று. உயர் அதிர்வெண்களில் இணைக்கப்பட்ட பொருளுக்கும் அதிர்வுதாங்கியின் (vibration isolator) அடிப்பகுதிக் கும் உள்ள இடைவெளி குறையும்போது அதிர்வு தாங்கி மிகத்திறமையுடன் செயல்படுகிறது. ஒடுக்கம் ஏற்படுத்தப்படும்போது மீள் ஆற்றல் உடைய பொருளால் செலுத்தப்படும் ஆற்றல் ஒடுக்கத்தின் ஆற்றலை மீற முடியாததாக இருக்கிறது. இது செலுத்தப்பண்பினை (transmissability அதிகரிக் கிறது. அனைத்துச் சுருள்வில்கள் (springs). கட்டகங் களின் உறுப்புக்கள் (structural members). தாங்கிகள் (earings) முதலியன ஒடுக்கும் திறனுடையவை. இருப்பினும் இவற்றின் ஒடுக்கல் பண்பு போதுமான தாக இல்லாதபோது சிறப்புப் பொறிகளின் உதவி யால் இவற்றின் திறனைப் பெருக்க வேண்டியுள்ளது. பாகு தன்மை ஒடுக்கல். (viscous damping). பல வகை ஒடுக்கல் கருவிகள் உருவாக்கப்பட்டுச் சிறப் பாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் எளிதான நன்கு அறியப்பட்டுள்ளவை உந்துகளில் பயன்படுத்தப் படுபவையாகும். இவை இவற்றுடன் இணைக்கப் பட்டுள்ள சுருள்வில்லின் எல்லைக்குள் செயல்படு கின்றன. சுருள்வில்லின் ஒடுக்கல் ஒரு மாறிலி எனப் படுகிறது. m நிறையுள்ள பொருள் b என்ற உந்துடன் இணைக்கப்பட்டு & என்ற உருளையில் உள்ள நீர்மத்தில் செங்குத்தாக நகரும்படி அமைக்கப்பட்டு அவ்வமைப்பு s என்ற தாங்கியில் வைக்கப்பட்டு உள்ளது. உந்து நகரும்போது உருளையில் உள்ள உந்தின் ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கத்திற்குச் செலுத்தப்படுவதற்குத் தேவைப்படும் ஆற்றல் உந்தின் நகரும் வேகத்திற்கு நேரிடையாக இருக் கிறது. நீர்மத்தின் பாகுநிலைத் தன்மைக்கு ஏற்ற வாறும், உந்தில் நீர்மம் நுழைவதற்காக உள்ள சிறு துளையின் அளவிற்கு ஏற்றவாறும் ஒடுக்க ஆற்றல் கட்டுப்படுத்தப்படுகிறது. இவ்வகை ஒடுக்கமே பாகுத் தன்மை ஒடுக்கம் எனப்படுகிறது. இவற்றில் பல குறைபாடுகள் உள்ளன. இவ்வகை ஒடுக்கம் ஒரு பக்கமாக மட்டுமே இயங்குவன. வெப்பநிலைகளின் மாறுதலால் ஒடுக்கல் திறனும் மாறுபடுகிறது. துளை அல்லது உந்திற்கும் உருளைக் கும் உள்ள இடை டவெளியில் நீர்மம் செலுத்தக் குறிப்பிட்ட காலம் தேவைப்படுகிறது. உந்து மிக விரைவாக நகர முயன்றால் உருளையின் அடிப்பகுதி யில் தட்டுகிறது. பேருந்துகளில் செல்கையில் தெரு வில் உள்ள பள்ளங்களில் அப்பேருந்துகள் விழும் தாங்கி(s) ஒடுக்கல் (மின் பொறியியல்) 543 நிறை (m) உருளை (c) படம் 1. உந்து (p) போது இத்தகைய பட்டறிவு கிடைக்கிறது. சுருள்வில் தரையில் தட்டியதுபோல் தோன்றும். உண்மையில் அது அதிர்ச்சி தாங்கி அல்லது ஒடுக்கல் அமைப் பின் காரணமே ஆகும். இதில் உள்ள குறைபாடுகளில் சிலவற்றைத் தவிர்க்க நீர்மத்திற்குப் பதில் காற்றை ஒடுக்கல் கருவி யில் பயன்படுத்தலாம். காற்று அமுக்கப்படும்திறன் உள்ளதால் உந்து அதிகமாக நகரும்போது, போதுமான மீள் ஆற்றல் திறனை உண்டாக்குகிறது. உருளைப் பகுதிக்குப் பதிலாகத் துருத்தி போன்ற அமைப்புக் காண்ட வளைவான உருவங்களைப் பயன்படுத்தி னால் ஒடுக்கும் திறன் செங்குத்துத் திசையில் மட்டு மன்றிப் பக்கவாட்டிலும் கிடைக்கிறது. இது போன்ற .028008000822 நிறை சிறு துவாரம் தாங்கி துருத்தி படம் 2.