உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/568

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

544 ஒடுக்கல்‌ (மின்‌ பொறியியல்‌)

544 ஒடுக்கல் (மின் பொறியியல்) ஒடுக்கல் கருவிகள் அதிர்ச்சி தாங்கிகளில் சிறப்புப் அல்லது பெற்றவையாகக் கருதப்படுகின்றன. உயர் குறைந்த வெப்பநிலைகளில் ரப்பர் துருத்தியின் மீள் ஆற்றல் மாற்றம் பெரும் பயனாகக் கருதப்படுகிறது. உராய்வு ஒடுக்கம் (friction damping). ஓர் உலர்ந்த திண்மப் பொருள் மற்றோர் உலர்ந்த திண்மப் பொருளின் மேல் உராய்ந்து செல்லும்போது ஏற்படும் ஒடுக்க ஆற்றல் உராய்வு ஒடுக்கம் எனப்படுகின்றது. நிறை ஓடுக்கலான மீள்ஆற்றல் சுருள் பின்னப்பட்ட எவர்சில்வர் மெத்தை குழிசுமைதாங்கு மீள் ஆற்றல் வளைவு தாங்கி மாறிலி 1000000000000 உருளை படம் 3. ஆணி p என்ற ஆணிபோன்ற பகுதி C என்ற உருளையில் நுழைக்கப்பட்டு நிறையுள்ள பொருளில் இணைக்கப் பட்டுள்ளது. ஆணி போன்ற பகுதி தாங்கியின் மேல் இணைக்கப்பட்ட இரு மீள் ஆற்றல் வளையங்களின் நடுவே உரசிச் செல்வதாக அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஒடுக்கல் ஆற்றல் m என்ற நிறை நகரும் திசைக்கு எதிர்த் திசையில் ஆணிக்கும் செங்குத்தான மீள் ஆற்றல் வளைப்பகுதிக்கும் இடையில் ஏற்படும் உராய்வின் மாறிலியால் நகரும் திறனைப் பெருக்கக் கிடைக்கும் அளவிற்குச் சமமாக ஏற்படுகிறது. இந்த ஒடுக்கல் ஆற்றல் பொதுவாக மாறிலியாக இருக்கும். ஆணியின் வடிவம் சரிவுள்ளதாக இருந்தால் ஒடுக்கல் ஆற்றலும் மாற்றம் உடையதாக இருக்கும். இவ்வமைப்பு மிகவும் எளிமையானதாக இருப்பதால் அதிர்வு தாங்கிகளில் உராய்வு ஒடுக்கமே பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. தேவைப்பட்டால் செங்குத்து இயக்கமும் கிடைநிலை இயக்கமும் கட்டுப்படுத்தும் ஒரே அமைப்பை உருவாக்கலாம். ஒரு சில உராய்வு ஒடுக்கல் கருவிகள் செங்குத்தான கிடையான பக்கங் களிலும் திறமையாகச் செயல்படுகின்றன. குழி, குவி மீள் ஆற்றல் வளைவுகள் ஒன்றாக குவி சுமைதாங்கும் மீள் ஆற்றல் வளைவு படம் 4. இணைக்கப்பட்ட சுமையைத் தாங்குகின்றன. ஒடுக் கலுக்கான மீள் ஆற்றல் சுருளைகள் அவ்விரு உலோகத் தகடுகளையும் சுற்றி அமைக்கப்பட்டுள்ளன. செங்குத் தான அல்லது கிடையான எந்த அசைவும் சுமை தாங்கும் மீள் ஆற்றல் வளைவுகளைச் செங்குத்தா கவோ கிடையாகவோ நிமிரச் செய்யும். எந்தவோர் அசைவும் குவி மீள் ஆற்றல் வளைவின் மேல் திணிக் கப்படும்போது ஒடுக்கலுக்கான மீள்ஆற்றல் சுருளின் மேல்படும் பரப்பு அதிகரிக்க உராய்வு ஆற்றலும் அதிகரிக்கிறது. இதில் ஏற்படும் ஒடுக்கல் ஆற்றல் நேர் போக்கு உடையதாக இருக்கும். இயற்கை ஒடுக்கம் (inherent damping). இட வசதியின்மை காரணமாகத் தனி அதிர்வு ஒடுக்கல் கருவிகளைப் பயன்படுத்த இயலாத இடங்களிலும் பொருளாதாரச்சிக்கனத்திலும் தேவைப்படும் ஒடுக்கல் ஆற்றலின் குறை அளவிலும் முன்னர் விளக்கப் பட்ட ஒடுக்கல் முறைகளைப் பயன்படுத்த இயலுவ தில்லை. ஆகையால் ரப்பர், தக்கை, கம்பளி போன்ற பொருள்கள் அவற்றில் உள்ள இயற்கையாக அமையப் பெற்ற அல்லது உள்ளேயிருக்கும் தயக்க விளைவின் (hysterisis) காரணமாக ஒடுக்கல் பொருளாகப் பயன் படுகின்றன.மாறா விரைவுள்ள உந்துகள், காற்று அழுத்திகள், மின் ஆக்கிகள், அரைவை ஓடிகள் முதலியவற்றில் இயற்கையாக அமையபெற்ற ஒடுக்கம் பயன்படுகிறது. காந்த ஒடுக்கம். காந்தத் துருவங்களின் நடுவில் அல்லது காந்தப் புலங்களில் ஒரு கடத்தும் கம்பி அசையும்போது தூண்டப்பட்டு ஏற்படும் மின்னோட் டத்தின் பயனாக ஏற்படும் ஒடுக்கம் காந்த ஒடுக்கம் (nagnetic damping) எனப்படுகிறது. இம்முறையில்