உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/582

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

558 ஒத்திசைவு

558 ஒத்திசைவு கடலியலில் கடல் நீர்ச் சுற்றோட்டங்களை ஆராய உதவுகிற தடம் காட்டியாக ஆர்கான் - 37 பயன்படுகிறது. இயல்பான சுற்றுச்சூழலில் கிரிப்டான் 81 இன் அளவைக் கண்டுபிடிப்பதன் மூலம் துருவப் பகுதியின் பனிமூடிகள், தரையடித் தண்ணீர்த் தேக்கங்கள் ஆகியவற்றின் வயதைக் கண்டுபிடிக்க முடியும். ஒத்திசைவு 110 கே.என். இராமச்சந்திரன் ஒவ்வோர் இயக்கமும் தானாகவே இயற்கையாக அலையும் அலைவெண்ணைக் கொண்ட து. எந்திர வியல் இயக்கங்களும், மின் சுற்றுகளும் இயற்கையான அலைவெண்ணைக் கொண்டுள்ளன. எந்த ஓர் இயக் கமும் வெளி ஆற்றல்கள களால் அலையும் தன்மை கொண்டது. வெளி ஆற்றல்களும் அலையும் தன்மை யைக் கொண்டிருந்தால் ஒவ்வோர் இயக்கமும் ஒரு குறிப்பிட்ட அலைவெண்ணில் அதாவது ஆற்றலின் அலைவெண் இயக்கத்தின் இயற்கையான அலை வெண்ணுடன் ஒத்துப்போகும்போது ஒத்திசைவு (resonance) ஏற்படுகிறது. ஒத்திசைவில் ஏற்படும் மாற்றங்கள். ஓர் இயக்கம் வெளி ஆற்றல்களால் அலைக்கப்பட்டு ஒத்திசைவு ஏற்படும்போது இயக்க அலைவெண் உயரம் (ampli- tude) மிகு உயரத்தை அடைகின்றது. ஒத்திசைவை விட்டு நீங்கும்போது அலைவின் உயரம் மிக விரை வில் குறைகின்றது. படம் 1 இல் காட்டப்பட்டது போல் அலைவின் உயரம் மாறுபாடடைகிறது. ஒத்திசைவு எந்திரவியலிலும், மின்னியலிலும், ஒலியியலிலும் ஏற்படும். ஒவ்வோர் இயக்கத்திலும் அளவுகளே மாறுபடும். ஒத்திசைவு ஏற்படும் அலை வெண்ணில் ஒவ்வோர் இயக்கமும் மிகை ஆற்றலைச் செலவழிக்கின்றது. ஓர் இயக்கத்தில் ஒத்திசைவை ஒத்திசைவுக்குக்கீழ் 1.0 ஒத்திசைவுக்குமேல் ஏற்படுத்த, இயங்கவைக்கும் வெளி ஆற்றலை இயக் கத்தின் இயற்கையான அலைவெண்ணுக்குச் சரியான கொண்டதாகக் கவனமாகத் அலைவெண்ணைக் தூண்ட வேண்டும். மாறு மின் ஓட்ட மின் சுற்றுகளில் ஒத்திசைவு. மாறு மின்னோட்டம் கொண்ட மின்னியக்கத்தில் ஒத்திசைவு ஏற்படும். மின் சுற்றுகளிலுள்ள கொண்மி கள் (capacitors), தடைகள் (resistances) தூண்டங் கள் (inductance) ஆகியவற்றின் அளவை மாற்றி னால் ஒத்திசைவு ஏற்படும். வெளிப்படையாகக் கொடுத்த மின் ஆற்றலின் அலைவுக்குத் தக்கவாறு மின்சுற்றின் இயற்கை அலைவெண்ணை மாற்றும் போது ஒத்திசைவு ஏற்படுகிறது. மூன்று வகையான ஒத்திசைவுகள் ஏற்படுத்த முடியும். ஒரு வகையான தறுவாய் ஒத்திசைவு (phase resonance), மின்னோட் டத்திற்கும் மின்னழுத்தத்திற்கும் உள்ள தறுவாய்க் கோணத்தின் (phase angle) அளவைப் பூஜ்யமாக மாற்றும். ஒரு மின் சுற்றில் ஒத்திசைவு ஏற்படக் கொண்மிகள், தடைகள், தூண்டங்கள் ஆகியவற்றைத் தொடராகவும் (series), இணையாகவும் (parallel), தொடர்-இணையாகவும் (series parallel) இணைக் கலாம். இவ்வாறு இணைக்கப்படும்போது தொடர் ஒத்திசைவும் (series resonance) இணை ஒத்திசைவும் parallel resonance)ஏற்படுகின்றன. இணைஒத்திசைவு குறைந்த அளவு மின் தடையை ஒத்திசைவின் போது கொடுக்கும். ஒத்திசைவின் பயன்கள். தொடர்பியலில் ஒத்தி சைவு பெரிதும் பயன்படுகிறது.ஒரு குறிப்பிட்ட அலை வெண்ணைத் தேர்ந்தெடுத்து அனுப்ப ஒத்திசைவுச் சுற்றுகள் பயன்படும். ஆகவே ஒரே தொடர் பியல் வழி மூலம் மிகுதியான செய்திகளைப் பல்வேறு அலைவெண்களில் குறிப்பேற்றி (modulation) அனுப் பலாம். செய்திகளைப் பிரித்து வாங்குவதும் எளிதா கின்றது. ஒத்திசைவு வடிகட்டிகளைக் (resonant filters) கொண்டு ஒரு குறிப்பிட்ட அலைவெண்ணை எளிதாகப் பிரித்தெடுக்கலாம். ஒத்திசைவு பலவகை யான இயக்கங்களிலும் ஏற்படும். மின்சுற்றுகளில் ஏற்படும் ஒத்திசைவைத் தொடர்பியலில் பயன்படுத் தலாம். க.அர. பழனிச்சாமி ஒத்த அலை உயரம் -0.5+ -2 அலைவெண் படம் 1. ஒத்திசைவு 2 ஒத்திசைவு (ஒலியியல், எந்திரவியல்) ஓர் எந்திரவியல் அல்லது ஒலியியல் அமைப்பின் மீது சீரிசை இயக்கப் புறவிசை (periodic external force) ஒன்றைச் செலுத்தும்போது, அமைப்பின் அதிர் வெண்ணும் புறவிசையின் அதிர்வெண்ணும் சமமாக இருப்பின் அமைப்பின் வீச்சு பெருமமாகி ஒத்திசைவு (resonance) உண்டாகிறது.