ஒத்திணக்க முடுக்கி (மாறுகாந்தப்புல) 565
இழப்புக்குறைவாக இருக்கும் என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ள முடிகின்றது. இதன் காரணமாக 5-12 Bev ஆற்றலுடைய புரோட்டான்களைப் பெற முடிகிறது. மாறு மாறு சரிவுறு காந்தப் புல அமைப்பால் (alternat ing field gradient), உயர் ஆற்றல் புரோட்டான் களை மிக வலிமையாகச் சுற்றுப் பாதையில் ஒரு சேரக் குவிக்க முடிவதால் எதிர்காலத்தில் மேலும் கூடுதலான ஆற்றலுடைய புரோட்டான்களைப் பெறலாம் என்று கருதப்படுகிறது. இவை சரிவு ஒத்திணக்க முடுக்கிகள் என்று குறிப்பிடப் படுகின்றன. இதில் புதுமைகளைப் புகுத்திப் பல சிறப்புக் கூறுகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். சிறப் புக் கூறுகளுக்கு ஏற்ப, இவ்வுயர் ஆற்றல் முடுக்கி களைக் காஸ்மோட்ரான், பிவாட்ரான், ஒத்திணக்க அலைக்கட்ட முடுக்கி (synchrophasotron பல்வேறு பெயர்களால் குறிப்பிடலாம். என்று புரோட்டான் ஒத்திணக்க முடுக்கியின் தத்துவம் 1943இல் ஒலிபெண்ட் என்பாரால் தெரிவிக்கப் பட்டிருந்தாலும், அதன் வடிவமைப்பு 1953இல் தான் நடைமுறைக்கு வந்தது. கிரேன் என்பாரின் கருத்துப்படி, இயல்பான வட்டப்பாதை ஒரு குதிரைப் பந்தயத் தடம் போல இதில் மாற்றி அமைக்கப் பட்டுள்ளது. இது நான்கு நேர்கோட்டுப் பகுதிகளுடன் இணைக்கப்பட்ட நான்கு கால் வட்டப் பகுதிகளால் ஆன ஒரு தடமாகும் (படம்-3). துகளை வட்டப் பாதையில் எடுத்துச் செல்ல, காந்தப்புலம் வட்டப் பகுதிகளில் மட்டுமே செயல்படுத்தப்படுகின்றது. காந்தப் புலமற்ற நேர்கோட்டுப் பகுதிகளில் முடுக்கு மின்புலம் ஈடுபடுத்தப்படுகிறது. முடுக்கியின் கட்டமைப்பில் ஏற்படுத்தப்பட்ட மாற்றத்தால். ரேடியோ அதிர்வெண் உட்புழைகள் (r.f.cavities) எறிதுகள் உமிழ்வான் இலக்குப்போன்றவற்றை, நேர் கோட்டுப் பகுதிகளில் எவ்வித இடர்ப்பாடுகளுக்கும் காரணமின்றிப் பொருத்திக்கொள்ள முடிகிறது. இதில் செயல்படும் காந்தப் பாயத்தை ஒரு குறிப்பிட்ட வீதத்தில் தொடர்ந்து அதிகரிக்கச் செய்வதால், முடுக்கப்படும் புரோட்டான் தொடர்ந்து ஒரு நிலையான சுற்றுப் பாதையில் இயங்குகிறது இத்துடன் ரேடியோ அதிர்வெண் மின்புலத்தின் அதிர்வெண்ணையும், புரோட்டானின் சுற்று நிகழ் வெண்ணிற்கு ஏற்பத் தொடர்ந்து அதிகரித்து வந்தால்தான் ஒத்திணக்க முறையில் துகளை இறுதி வரை முடுக்க இயலும். ஒரு முழுமையான வட்டப் பாதையில் புரோட்டானின் சுற்று நிகழ்வெண்ணை (fo), fo = a 20 - c²eB 2r(T + m c2 எனப் பெறலாம். இதில் m. புரோட்டானின் ஓய்வு நிறையாகும்..ஆரமுடைய நான்கு கால் வட்டங் உட்புழை ஒத்திணக்க முடுக்கி (மாறுகாந்தப்புல) 565 கால்வட்டப்பகுதி . L. சர இலக்கு புரோட்டான் சுற்றுப்பாதை எறிதுகள் உட்செலுத்துவான் படம் 3. புரோட்டான் ஒத்திணக்க முடுக்கி களும், 1 நீளமுடைய நான்கு நேர் கோட்டுப் பகுதி களும் உடைய குதிரைப் பந்தயத் தடத்தில், அதன் சுற்று நிகழ்வெண், வட்டப்பாதைத் தடத்தின் நீளத் திற்கும், குதிரைப் பந்தயத் தடத்தின் நீளத்திற்கும் உள்ள தகவிற்கு ஏற்பக் குறைகின்றது. எனவே, குதிரைப் பந்தயத் தடத்தில் புரோட்டானின் சுற்று நிகழ்வெண் (fc) fe = c'eB 21 2r (T+m.c2) (2gr +4L என்றிருக்கிறது. முடுக்கப்படும் காலம் அதிகரிக்க fc இன் மதிப்பும் அதிகரிக்கிறது. இவ்வாறு மாறுபடும் ரேடியோ அதிர்வெண் மின்புலம் உட்புழைக்குக் கொடுக்கப்படவேண்டும். நேர் கோட்டுப் பகுதிகளில் ஏதாவது ஒன்றில் இந்த உட்புழை எடுத்துக் கொள்ளப் படுகிறது. பொதுவாக, இது ஃபெரைட் (ferrite) எனப்படும் உலோகமற்ற ஃபெரோ காந்தப்பொரு ளால் செய்யப்பட்டதாக இருக்கும். எலெக்ட்ரான் ஒத்திணக்க முடுக்கிக்கும், புரோட் டான் ஒத்திணக்க முடுக்கிக்கும் உள்ள ஒரு வேறு பாடு அவற்றில் பயன்படுத்துகின்ற உட்புழைக்குக் கொடுக்க வேண்டிய ரேடியோ அதிர்வெண் மூல மாகும். எலெக்ட்ரான்கள் குறைந்த ஆற்றலைப் (2MeV) பெறும்போதே, ஒளியின் வேகத்தை எட்டிவிடு வதால், அவற்றின் சுற்று நிகழ்வெண் ( W = C ) ஏறக்குறைய மாறிலியாகி