580 ஒத்தியங்கு திசைமாற்றி
580 ஒத்தியங்கு திசைமாற்றி மின்னோட்டத்தை நேர்மின்னோட்டமாக மாற்ற வேண்டியுள்ளது. இதற்கு ஒத்தியங்கு திசை மாற்றிகள் (synchronous converter) பயன்பட்டன. தற்காலத்தில் மின் திருத்திகள் (rectifiers) பெரிதும் பயன்படுவதால் ஒத்தியங்கு அலை மாற்றிகளின் பயன் குறைந்தது எனலாம். கட்டமைப்பு (construction) ஒத்தியங்கு அலை மாற்றியின் கட்டமைப்பு, படம் 1 இல் காட்டப் பட்டுள்ளது. நேர்திசை மின்னாக்கியில் (D. C. genera tor) உள்ளது போல, சுழலாத காந்த முனைகளுக் கிடையே, ஒரு மின்னகம் (armature) சுழலும்படி அமைக்கப்பட்டுள்ளது. சுழலியின் (rotor) அச்சின்மீது ஒரு பக்கத்தில் நழுவு வளையங்களும் (slip rings) இன்னொரு பக்கத்தில் திரட்டியும் (commutator) அமைக்கப்பட்டுள்ளன. மின்னகச் சுருள்களிலிருந்து நழுவு வளையங்களுக்கும், திரட்டியின் துண்டு களுக்குத் தக்கவாறு மின்னிணைப்புகள் கொடுக்கப் பட்டுள்ளன. ஒன்று, மூன்று, ஆறுஅல்லது பன்னிரண்டு தறுவாய (phase) மாறுதிசை மின்னோட்ட மின்சுற் றில் இயங்கும் வண்ணம் மின்னகத்திலிருந்து முறையே 180°, 120° 60º, அல்லது 30° மின்கோண இடைவெளியில் நழுவு வளையங்களுக்கு மின்னி ணைப்புகள் இரண்டு மூன்று ஆறு அல்லது பன்னிரண்டு நழுவு வளையங்கள் அமைக்கப்பட்டிருக்கும். நழுவு வளையங்கள் மீதும் திரட்டியின் மீதும், மின்தொட்டி கள் (brushes) தொட்டுக் கொண்டு இருக்கும். நிலை யகம் (stator) உள்ள காந்த முனைகள் மீது புலச் சுருணைகள் (field windings) சுற்றப்பட்டிருக்கும். செயல்படும் முறை (principle of operation ). புலச் சுருணைகளுக்கு நேர்மின்னோட்டம் அளிக்கப்பட்டுக் காந்த முனைகள் கிளர்ச்சியூட்டப்படும் (excited). மின்னகம் காந்த முனைகளுக்கிடையே சுழலும் போது, மின்னகக் கம்பிகள் வட மற்றும் தென் காந்த முனைகளின் காந்தக் கோடுகளை வெட்டுவ தால் மின்னகக் சும்பிகளில் மின்னியக்கு விசை (e.m.f) தூண்டப்படும். மின்னகக் கம்பி, வட மற்றும் தென் காந்த முனைகளுக்கடியில் மாறி மாறிச் செல்வதால், மின்னகத்தில் தூண்டப்படும் மின்னியக்கு விசையின் திசையும் அதற்கேற்பமாறும். ஆனால் மின்னகச் சுருள்கள் திரட்டியின் துண்டு களுடன் இணைக்கப்பட்டுள்ளன. இத்துண்டுகள் மீது உராய்ந்தவாறு மின்தொடிகள் அமைக்கப்பட் டுள்ளன. மின்னகச் சுருள் ஒன்றின் ஒருபக்கக் கம்பிகள் வடகாந்த முனையின் கீழ் உள்ளபோது, ஒரு குறிப்பிட்ட மின்தொடியையும் அதே சும்பிகள் தென்காந்த முனையின் கீழ் உள்ள போது இன் னொரு மின்தொடியையும் தொடுவதால், ஒரு மின் தொடி எப்போதும் நேர்மறை மின்முனைப்பும், மற் றொரு மின்தொடி எப்போதும் எதிர்மறை மின் முனைப்பும் (positive and negative polarities) கொண் டிருக்கும். இதனால், மின்னகச் சுருள்களில் தூண்டப் படுவது மாறுதிசை மின்னியக்கு விசையானாலும், வடமுனை நழுவு வளையம் TH மின்னகம் தென்முனை படம் 1. புலச்சுருணை திரட்டி