ஒரு மூலக்கூறு வினை 615
தென்னைக்குடும்பம், ஏரேசி, அர்டிகேசி கேன்னபை னேசி ஆகியவற்றில் காணக் கூடும். பூசணிக்குடும்பத்தில் ஒருபால்நிலை குக்கர்பிட்டா. பூக்கள் மஞ்சள் நிறமுடன் பெரியன வாக இருக்கும்; பூக்களில் தேன் சுரக்கிறது. பூக்கள் தனித்து இலையின் கோணங்களில் காணப்படும். அல்லி ஐந்து கூரிய மடல்களை உடையது. பெண் பூ, வளர்ச்சி பெறும் சூலகத்தின் மீது அமர்ந்து எளிதில் தெரியுமாறு அமைந்திருக்கும். சூலகத்தண்டு மூன்று சூல் மூடிகளைக் கொண்டது. சூலிலைகள் மூன்று ணைந்தவை. சூலகத் தண்ட டியைச் சுற்றிலும் வளையம் போன்ற பூந்தேன் சுரப்பி உள்ளது. மகரந்தத்தாள்கள் வளர்ச்சியற்ற அமைப்புகளாகத் தென்படலாம். ஆண் பூக்களில் ஐந்து மகரந்தத்தாள் கம்பிகளும் மகரந்தப் பைகளும் இணைந்து காணப்படும். பெண் பூக்களை விட ஆண்பூக்கள் மிகு எண்ணிக்கையுடன் காணப்படும். ஒரே பூவில் ஆணகமும் சூலகமும் காணப்படாமையாலும் மகரந்தத் தூள்கள் மிகப் பெரியவையாக, பிசுபிசுப்பாக உள்ளமையாலும் இம்மகரந்தத்தூள்களை எடுத்துச் செல்லப் பூச்சி களின் உதவி தேவைப்படும். ஆனால் காற்றுப் பயன் படாது. பயன் ஸ்குவாஷ் பூக்களில் கையால் மகரந்தச் சேர்க்கை hand pollination) நிகழ்த்துவது எந்த அளவிற்குப் பயனளிக்கிறதோ, அதே அளவிற்குத் தேனீக்களால் மகரந்தச் சேர்க்கை அடையும் இப்பூக்களும் அடைகின்றன. நீண்ட காம்புடைய ஆண் பூக்கள் இலைகளின் மட்டத்தில் இருக்கும். குட்டைக் காம் புடைய பெண் பூக்கள் இலைகளுக்கடியில் அமைந் திருக்கும். தேனீக்கள் தெளிவாகத் தெரியக்கூடிய ஆண் பூக்களையே முதலில் தேடிச் செல்ல விரும்பு கின்றன. அயல் மகரந்தச் சேர்க்கை நிகழப்பத்து ஹெக்டேர் நிலப்பரப்பில் வளர்ந்து வரும் குகர்பிட் கொடிகளின் பூக்களுக்கு ஒன்று அல்லது இரண்டு தேனீக் கூட்டம் தேவைப்படும். ஆமணக்குக் குடும்பம். யூஃபோர்பியா (Euphorbia Linn) பேரின மஞ்சரி ஒரு தனி மலர் போன்று காட்சி யளிக்கும். இதுசிறப்புவகை மஞ்சரியான சையாத்தியம் வகையாகும். ஆண் பூக்களும், இவற்றின் நடுவே ஒரு பெண் பூவும் காணப்படுகின்றன. ஒவ்வோர் ஆண் பூவும் ஒரே ஒரு மகரந்தத் த்தாளா ல் ஆனது. இந்தத் தாள் நேரடியாகப் பூக்காம்புடன் இணைந்திருக்கும். அனைத்துப் பூக்களைச் சுற்றியும் மஞ்சரி மடல் அல்லது இன்வலூகர் காணப்படும். இவ்வுறை 4-5 மடல்களைக் கொண்டது. இதற்கு வெளியில் காணப் படும் சுரப்பிகள் பூந்தேனைச் சுரக்கின்றன. இத்தேன் முழுதும் வெளிப்படையாகத் தெரியுமாறு இருக்கும். ஒரு மூலக்கூறு வினை 615 மஞ்சரியில் பெண் பூவின் சூலகம்தான் முதலில் பக்குவமடையும். இரண்டு அல்லது மூன்று மடல் களைக் கொண்ட சூலகமூடிகள் முதலில் மஞ்சரி றையிலிருந்து வெளிவரும். சூலகமுடிகள் வெளியே நீட்டிக் கொண்டிருக்கும்போது அயல் மகரந்தச் சேர்க்கை பூச்சிகளின் மூலம் நடைபெறுகின்றது. இம்முறை ரெசினஸ் ஃபில்லாந்தஸ் ஆகிய இனங்களி லும் நடைபெறுகின்றது. தென்னைக் குடும்பம் தென்னம்பூக்களில் கூட்டு மடல் மஞ்சரி (spadix ) எனப்படும். மடல் மஞ்சரியில் எண்ணற்ற ஆண் பூக் களும் பொதுவாகச் சில பெண் பூக்கள் அவற்றின் அடிப்பகுதியிலும் சில சமயங்களில் ஒரு பெண் பூ மட்டுமே இருக்கும். பெண் பூவின் எண்ணிக்கை தட்பவெப்பம் சூழ்நிலை ஆகியவற்றைப் பொறுத் தமையும் தென்னம்பூக்களில் நிகழும் மகரந்தச் சேர்க்கையைக் கோப்லேண்டு, மேனன், பண்டாலை ஒயிட்ஹெட் ஆகியோரின் ஆய்வுரைகளிலிருந்து அறியலாம். தென்னையில் ஒரு சமயத்தில் ஒரே ஒரு மஞ்சரி தான் மலரும். உயர்ந்து வளரும் மரங்களில் பெண் பூக்கள் மலர்வதற்கு முன்னரே ஆண் பூக்கள் மலரத் தொடங்குகின்றன. மஞ்சரித்தண்டு நுனியில் ஆண் பூக்கள் முதலில் மலரத்தொடங்கும். இப்பூ, பெண் பூக்களோ ஆண் பூக்களோ மலர்ந்து 3-6 நாள் சென்ற பின்னரே, மலர்வதால் ஒரு மஞ்சரியில் ஒரு உள்ள இரண்டு ஒருபால் பூக்களிடையே மகரந்தச் சர்க்கை நடைபெறாது. பொதுவாக தென்னையின் பூக்களில் மற்றொரு தென்னையின் பூக்களால் அயல் மகரந்தச் சேர்க்கை நிகழ்வதற்கு ஏற்ப அடுத்தடுத்த இம்மரங்களில் மஞ்சரிகள் தோன்றுகின்றன. இவ்வகைப் பூக்கள் ஒருபால் நிலையான அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெற ஏற்றவையாக அமைகின்றன. ஒரு மூலக்கூறு வினை 100 பா. அண்ணாதுரை ஒரு வினை நிகழத் தேவைப்படும் மிகக் குறைந்த மூலக்கூறுகள் அல்லது அணுக்களின் எண்ணிக்கையே அவ்வினையின் மூலக்கூறு எண் எனப்படும். ஒரு வினையின் மூலக்கூறு எண் ஒன்றாக இருப்பின் அது ஒற்றை மூலக்கூறு வினையாகும். எடுத்துக்காட்டாக, B + C ஒற்றை மூலக்கூறு வினையில் ஒரே ஒரு மூலக் கூறு மட்டும் வினை நிகழ்ச்சியில் பங்கேற்கிறது.