உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/682

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

658 ஒலியெல்லைத்‌ தடை

658 ஒலியெல்லைத் தடை கம்பிச்சுருள் இரு நிலையான காந்தப்புலங்களுக்குக் கிடையேயும் இருக்குமாறு அமைக்கப்படுகிறது. இடைத்திரை ஒலி அலைகளால் அதிரும்போது கம்பிச்சுருள் காந்தப்புலத்தில் அசைந்து மாறு மின்னோட்டத்தைப் பெறுகிறது. ஒலிக்கேற்ற இந்த மாறுமின்னோட்டத்தைப் பண்பு குறையாமல் பெருக்கிப் பயன்படுத்தலாம். சிறந்த உணர்வு நுட்பமும், வலிவான அமைப்பும், கேள் அதிர்வெண் எல்லைமுழுதும் சீரான ஏற்புப் பண்பும் பெற்றிருப்ப தால் இவ்வொலி வாங்கி மிகவும் வழக்கத்தில் உள்ளது. நாடா ஒலிவாங்கி. அசையும் சுருளுக்குப் பதிலாக மெல்லிய அலுமினியத்தாலான நாடா காந்த முனைகளுக்கிடையே தொங்கவிடப்படுகிறது. நாடா தன் நீளவாட்டிற்கு நேர் செங்குத்துத் திசையில் மடிக்கப்பட்டிருப்பதால், முன்னோக்கியும், பின் னோக்கியும் தன்னிச்சையாக அசைய முடிகிறது. காந்த முனைத்திசையில் எவ்வித அசைவும் இருக்காது.நாடா ஒலிவாங்கி இவ்வமைப்பைத் தவிர, செயல்திறனில் அசையும் சுருள் மின்னியக்க ஒலி வாங்கியை ஒத்தது. தூண்டப்படும் மின்னோட்டம் இங்குக் குறைவாக இருப்பினும், திசைப்பண்பு சிறப்பாக உள்ளது. வானொலி நிலையங்களில் ஒலி எல்லையைக் காணவும் இது பயன்படுகிறது. ஒலிப்பான். இது ஒலிவாங்கியின் திறனுக்கு நேர் எதிராகச் செயல்படுகிறது. அதாவது ஒலிவாங்கியில் ஏற்படும் மாறு மின்னோட்டத்தை ஒலி அலைகளாக மாற்றி ஒலிபரப்பப் பயன்படுகிறது. கேள் அதிர்வெண் அலைகள் உற்பத்தி செய்யும் மின்னோட்ட மாறு பாடுகள் மிகக்குறைவாக இருக்குமாதலால், ஒலிப் பான்களுக்கு அம்மின்னோட்டத்தைக் கொடுக்கும் முன்னர், பண்பு குறையாமல் பெருக்க வேண்டும். எனவே, ஒரு சிறந்த ஒலிப்பான் தன்னிடம் கொடுக்கப் பட்ட மின்னலைகளுக்கு ஒப்ப ஒலி அலைகளைச் சீராக மாற்றித்தர வேண்டும். மேலும் அதிர்வெண் எல்லை முழுதும் சீரான செயல்திறன் கொண்டதாகவும் இருக்கவேண்டும். ஒலிப்பான்கள் அசையும் காந்த வகை என்றும், அசையும் சுருள் வகை என்றும் வகைப்படும். முதல் வகையின் செயற்பாடு தொலை பேசி ஏற்பியையும், இரண்டாம் வகையின் செயற்பாடு அசையும் சுருள் ஒலிவாங்கியையும் ஒத்தது. சீ. இராஜன் நுலோதி: 1. L, P, Sharma. H.C. Saxena, 'A text book of sound, S. Chand & Co., Delhi, 1968. ஒலியெல்லைத் தடை இது இரண்டாம் உலகப்போரின்போது வானூர்தி யியலில் வழக்கிற்கு வந்த கலைச்சொல் ஆகும். ஒலியின் வேகத்தினும் தாழ்ந்த வேகத்தில் காற்றில் பறக்கும் வானவூர்திகள் தம் வேகத்தை மிகுத்து ஒலியின் வேக எல்லையைக் கடக்க முயலும் நேரத்தில் எதிர்ப்படும் தொழில் நுட்பலியல் சார்பான இடர்ப் பாடுகளை உருவகப்படுத்திக்காட்ட இச்சொல் பயன் பட்டது. ஒலியின் வேகத்தினும் குறைந்த வேகத்தில் பறப் பதற்கான வானூர்தி வடிவமைப்புகளைச் செய்து ஆய்வுக்குட்படுத்திய வானூர்தி எந்திரவியலார் வானூர்தியின் வேகம் படிப்படியாக மிகுந்து ஒலியின் வேகத்தை எட்டும்போது காற்றின் உராய்வு மிகுந்து அவை முன்னேற முடியாமல் தேக்க நிலைக்கு வரு வதையும், உயர்ந்தெழ முடியாததையும், ஓட்டுவோ ரால் அந்நிலையில் ஊர்தியைக் கட்டுப்படுத்திச் செலுத்த முடியாமல் போய் விடுவதையும் நேருக்கு நேராகக் கண்டனர். இத்தகைய பட்டறிவு ஒலியின் வேக எல்லையில் நுழையும் காலத்தில் வன்மைமிக்க தும், கட்டுப்படுத்த முடியாததுமான நிகழ்வுகள் ஏற் படுவதைத் தவிர்க்க முடியாது எனத் தெளிவுறுத்த தியது. தீங்குதரும் இவ்விளைவுகள் யாவும் மொத்தத்தில் பொதுவாக ஒலியெல்லைத்தடை (sonic barrier) எனக் குறிப்பிடப்பட்டன. ஆனால் பீரங்கிக் குண்டு களை ஒலியின் வேகத்தினும் உயர்ந்த வேகத்தில் வீசும் வல்லுநர்கள், இத்தகைய சிக்கல் எதுவும் பீரங்கி உமிழ்ந்து எறியும் குண்டுகளின் இயக்கத்திற்கு எதிராகச் செயல்படுவதில்லை என்னும் உண்மையை நீண்ட காலமாகவே அறிந்திருந்தனர். இதுபற்றி முன்னரும், பின்னரும் ரண்டாம் உலகப்போருக்கு மேற்கொண்ட ஆழ்ந்த ஆய்வுகளில் ஊர்தியைச் சுற்றிலும் அதிர்ச்சி அலைகள் தோன்றுகின்றன காற்று அடுக்கு என்றும் அவ்வலைகள் அடிப்படைக் களைக் குலைத்து காற்றியங்கு பரப்பிலிருந்து தனி யான ஓட்டத்தை உண்டாக்கி விடுகின்றன என்றும் தெரிவித்தன. நகர்ந்து செல்லும் பொருள் அது செல்லும் திசை யிலேயே ஒலி அலைகளை அனுப்பியவாறு செல்கின் றது. ஒரு பந்தை எறியும்போது அப்பந்து எழுப்பும் அலைகள் அது செல்ல இருக்கும் பாதையில் முன்ன தாவே செல்லத் தொடங்குகின்றன. அவ்வலைகள் வருகின்ற பந்திற்கு வழி விட வேண்டுமென்று காற் றுக்கு முன்னறிவிப்புச் செய்து கொண்டு செல்கின் றன. ஒரு வானூர்தி மணிக்கு 330 கி.மீ. வேகத்தில் செல்வதாகக் கொண்டால் அது முன்னதாக அனுப்பும் ஒலியலைகள் மணிக்கு 1270 கி.மீ. வேகத்தில் செல் வதால் ஊர்தியை முந்திக்கொண்டு 940 கி. மீ. தொலைவில் முன்னேறிக் காற்று மண்டலத்தில் குழாய் போன்றதொரு வழி அமைவதற்குப் போது மான எச்சரிக்கையைத் தந்தவாறுசெல்கிறது. ஆனால் ஒலியை ஒத்த வேகநிலைகளில் செல்லும்போதோ ஓர் ஊர்தி தான் எழுப்பிய ஒலியலை அதிர்வுகளிலேயே