உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/683

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒலியெல்லைத்‌ தடை 659

விடுபட முடியாமல் அகப்பட்டுக்கொள்கின்றது. அத னால் காற்று அடுக்குகளில் குழப்பம் ஏற்பட்டுவிடு கின்ற றது. அதாவது காற்றுப் பரப்பு இப்போது ஊர்தி யின் உருவத்தின்மீது ஒழுங்காக வழிந்து ஓடுவதில்லை. அது தடுமாறி ஊர்தியின் வழியிலிருந்து விலகி ஓட் முயல்கிறது. அது ஊர்தியைப் பிடித்து இழுத்து உலுக்கி முறுக்கிச் சுழற்றி ஊர்தியின் கட்டமைப்பைக் குலைத்து, ஊர்தியைத் தன் வயப்படுத்தி ஓட்டுபவரு டன் போராடத் தொடங்கிவிடுகிறது. இவ்வதிர்ச்சி அலைகளே (shock waves) ஊர்தியின் எந்திரங்களைத் தூளாக்கி மனிதனை மரணமடையச் செய்கின்றன. ஒலியின் வேகத்திலேயே ஊர்தி செல்லும்போது ஒலி யலைகள் ஒன்றுடன் ஒன்று நெருங்கிப் படிந்து கண் ணுக்குத் தோன்றாத ஆனால் அகற்ற முடியாத சுவ ராக மாறி விடுவதால் ஊர்தி அதில் சென்று முட்டிக் கொள்கிறது. ஒலியின் வேகத்தினும் விரைந்து செல்லும் ஊர் தியோ. அந்த ஒலி எல்லைத்தடைச் சுவரைத் துளைத்துக் கொண்டு செல்வதுடன் தன் அலை களினின்றும் தப்பித்துச் சென்று விடுகிறது. அது அவ்வலைகளை முந்திக் கொண்டு சென்று விடுவ தால் அவற்றால் ஒன்றும் செய்ய முடிவதில்லை. இந்நாளில் ஒலியெல்லைச் சுவரைக் கடந்து செல்லும் ஊர்தி வலவர்கள் ஒலியெல்லையைத் தாண்டுவது, கொந்தளிக்கும் அலைகடலைக் கடந்து அமைதியான உப்பங்கழிக்கு வருவதையொத்தது என்று கருதப்படு கிறது. எத்தகைய முரட்டுத் தாக்குதலும் ஊர்திக்கு நிகழாமலும், கட்டுப்பாடு குலையாமலும், எளிதாக மிதந்து செல்லும் ஓர் உணர்வு அப்போது வலவர் களுக்கு ஏற்படுகிறது. ஒலியினும் மிகுந்த வேகம் ஊர்தி ஆற்றலோடு புவி நோக்கித் தாழும் காலங்களில் வழக்கமாக ஏற் படுகிறது. அதாவது ஒலியை ஒத்த வேகத்தில் செல் லத்தக்க ஆற்றல் மிக்க ஊர்தியின் முகத்தைத் தாழ்த் திப் புவியின் சுவர்ச்சியையும் துணையாகக் கொண்டு புவி நோக்கித் தாழ்ந்து வீழச்செய்தால் இது நேரிடும். ஆனால் இவ்வாறு தாழாமல் ஒரே மட்டத் தில் ஒலியினும் உயர்ந்த வேகத்தில் தொடர்ந்து பறக்க வேண்டுமானால் அதற்கும் பொறியின் ஆற்றலைப் பெருக்குவதோடு ஊர்தியின் அடிப் படையிலும் மாற்றங்கள் செய்தாக வேண்டும். எடுத்துக்காட்டாகக் காற்றைப் பின் ஒதுக்கும் சிறகு களும், முக்கோண டெல்டா (A Delta) உருவமும் ஒலியை ஒத்த வேகத்திற்கு உதவி செய்வனவே தவிர ஒலியினும் மிகுந்த வேகத்தில் செல்ல அவை துணை செய்யா. அம்புத் தலை அல்லது முக்கோண உருவம் அதிர்ச்சி அலைகள் மோதுவதால் ஏற்படும் விளை வைக் குறைக்கும் என்றாலும் காற்றைப் பின்தள்ளி ஒதுக்கும் சிறகுகள் மணிக்கு 1500 கி. மீ. வேகம் அ.க. 6-42அ ஒலியெல்லைத் தடை 659 வரையில்தான் உதவும். அதற்கு மேல் மெல்லிய குறுகிய நேரான சிறகுகள்தாம் பயனுடையனவாக உள்ளன. ஊர்தியின் உருவ அமைப்பும் மெல்லியதாக இருத்தல் வேண்டும். ஒலியினும் மிகுந்த வேகத்தில் செல்லும்போது ஊர்தி முழுதும் வெப்பமேறி உருகும் நிலைக்கு வந்து விடுகிறது. ஊர்தி அமைப்பில் வெப் பத்தைக் தாங்கக் கூடிய டைட்டானியம், ஞெகிழிகள் (plastics) போன்ற பொருள்களையும் பயன்படுத்து வது ஏற்றதாகும். ஒலியினும் மிகுதியான வேகத்தில் இன்று ஊர்திகள் பறந்து கொண்டிருந்தாலும் பொறி யியலாரோ, அறிவியலாரோ கண்டுபிடிக்க முடியாத ஒரு சிக்கலும் இங்கு உருவாகிறது. அதுவே ஊர்தி ஒலித்தடையைக் கடக்கும்போதும், பின்னர் மீளும் போதும் ஏற்படும் தடதட ஓசைகள் (supersonic bangs) ஆகும். . ஊர்தி கீழ்நோக்கி விரைந்து தாழும்போது இரு முறை இத்தகைய ஒலிகள் எழுவதாகச் சொல்லப் படுகின்றது. ஊர்தியின் வேகம் ஒலியின் வேகத்தை எட்டி, ஒலியெல்லையைக் கடக்கும்போது ஒரு முறை யும், பின்னர் வேகம் குறைந்து ஒலி எல்லைக்கு இப்பால் ஊர்தி மீளும்போது ஒரு முறையும் இவ் வொலிகள் கேட்கின்றன. இவை அறையின் இருபுற மும் உள்ள கதவுகளைத் தடதட என்று தட்டுவது போலக் கேட்கின்றன. இவ்வொலி பெரிய வெடி யொலி போன்றும் கேட்கலாம். கீழ்நோக்கித் தாழும் ஊர்தியிலிருந்து இது எழுந்தால் நிலத்திலிருப்பவர் களுக்கும் தொல்லை தரும் அளவிற்கு அது உணரப் படும். ஏனெனில் இவ்வெடியொலிகள் தேடும் விளக் கின் (search light) ஒளிக்கற்றை போல ஒரு எல்லைக்குட்பட்ட இடத்திலேயே குவிந்து படுவதால் அவ்விடத்தில் ஒலி வன்மையாகக் கேட்கின்றது. ஆனால், ஊர்தி தாழாமல் நேர்மட்டத்தில் பறந்து செல்லும்போது இவ்வெடியொலி ஒரே இடத்தில் குவியாமல் எங்கும் பரவலாகப் போய்விடுகிறது. இத்தகைய அதிர்ச்சி அலைகள் நீரில் செல்லும் படகின் இரு மருங்கிலும் எழுந்து பரவிக் கரையைச் சென்று தொடும் பக்க அலைகள் போல ஊர்தி செல் லும் வழியின் கீழ் உள்ள நிலத்தைத் தொட்டபடி நகர்ந்து கொண்டிருக்கும். எந்த அளவிற்கு அவை நிலத்தைத் தாக்கும் என்பது ஊர்தி பறக்கும் உயரத் தைப் பொறுத்தது. சிறு அதிக எண்ணிக்கையில் ஒலியினும் மிகுந்த வேகத் தில் ஊர்திகள் பறந்து கொண்டிருக்கும் தற்காலத்தில் மண்ணில் வாழும் மனிதர்களுக்கு வானம் தொடர்ந்து துளைக்கப்பட்டு வருவது தொல்லையாகத்தான் இருக் கும். பொறியியலாராலும் இதை நீக்க வகை செய்ய முடிவதில்லை. ஏனெனில் ஜெட் ஊர்தி எழுப்பும் ஒலிபோன்று இது எந்திரத்தைப் பொறுத்து அமைவ தில்லை. இது முற்றிலும் ஊர்தி வளிமண்டலத்தில் மோதுவதாலேயே எழுவதாகும். ஒலியினும் மிகுதி யான வேகத்தில் பறப்பதைக் கடல்களைக் கடக்கும்