674 ஒளி அளவியல்
674 ஒளி அளவியல் மேலும் தேவைப்படும் ஆற்றல் கொடுக்கப் பட்டால்தான் அது பரப்பில் உள்ள தடுப்பு விசையை மீறிப் பொருளின் பரப்பிலிருந்து வெளியேற முடியும். இவ்வாறு எலெக்ட்ரான்கள் மிகு ஆற்றல் ஃபோட்டான்களை உட்கவர்ந்து பொருளின் பரப் பிலிருந்து வெளிப்படுவதற்குப் புற ஒளி மின் விளைவு எனப் பெயர். அக ஒளி மின் விளைவில் ஒளிக்கற்றை படுவதால் பொருளில் மின் கடத்தல் உயரும். ஆனால் எலெக்ட்ரான்கள் வெளிப்படா. ஆனால் புற ஒளி மின் விளைவால் ஆற்றல் மிகு ஃபோட்டான்களை உட்கவர்ந்து எலெக்ட்ரான்கள் பொருளின் பரப் பிலிருந்து வெளிப்படுகின்றன. ஒளி பெருக்கி, ஒளி மின்கடத்து மின்கலம், மின் திருத்தி மின்கலம், உருவத் திருப்பி, சூரிய ஒளி மின் கலம் ஆகிய கருவிகளில் ஒளி மின் விளைவு பெரும் பாலும் ஒளியின் செறிவை நுட்பமாகக் கணக்கிடுவ தற்கும் ஒளி ஆற்றலை மின்னாற்றலாக வதற்கும் பயன்படுகிறது. மாற்று -அ.பாலசுப்பிரமணியன் விதிகள் லாம்பர்ட் எதிர்விகித இருமடி விதி. ஒரு புள்ளி வடிவ ஒளி மூலத்திலிருத்து கொடுக்கப்பட்ட தளத் தின்மேல் விழும் ஒளியின் அளவு அந்தத் தளத்திற்கும் ஒளிமூலத்திற்கும் இடையிலுள்ள தொலைவின் இரு மடிக்கு எதிர்விகிதத்தில் இருக்கும். S ள R2 R₁ ஒளி அளவியல் ஒளியின் அளவு, ஒளி அடர்த்தி, வண்ணம், உட்கவர்பு எண் போன்ற ஒளியின் இயல்புகளை, அளவிடும் பிரிவே ஒளி அளவியல் (photometry) ஆகும். ஒரு நொடியில் அனைத்துத் திசைகளிலும் வீசும் ஒளியாற்றல் அந்த ஒளிமூலத்தின் மொத்த ஒளிப் பாயம் (total luminous flux) ஆகும். இதை அளவிடச் செந்தர மெழுகு விளக்குத்திறன் (candle power) எனும் அளவீடு பயன்படுகிறது. 0. 0756 கி. கிராம் எடையுள்ள ஒரு மெழுகுவர்த்தியின் மெழுகு மணிக்கு 120 கிரயின் (grain) அளவு எரிய, அதனால் உண்டாகும் ஒளியாற்றல் ஒரு மெழுகு விளக்குத்திறன் எனப்படுகிறது. 1940 இல் ஒளியாற்றலை அளக்க அனைத்துலகச் செந்தர மெழுகு என்னும் அலகு உருவாக்கப்பட்டது. பிளாட்டின உருகு நிலையிலுள்ள 1 கரும்பொருளின் 1 ஒரு ச.செ.மீ. துளையின் வழியே வெளிவரும் ஒளியின் அளவில் 60 இல் ஒரு பகுதியே அனைத்துலகச் செந்தர மெழுகு விளக்கு அளவீடாகும். ஒரு புள்ளி வடிவ ஒளிமூலத்திலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் கூம்பு வடிவ அமைப்பைக் கொண்டிருக் கும். இவ்வொளி சீராக அனைத்துத் திசைகளிலும் பரவுவதால் ஒளியின் அளவு. அத்தளம் ஒளிர் பொருளுக்குக் கொண்டிருக்கும் திண்மைக் கோணத் தைச் சார்ந்துள்ளது. S இல் ஒரு புள்ளி வடிவ ஒளிமூலம் இருக்கலாம். R, R, ஆரங்களைக்கொண்ட இரு கோளங்களை வரையலாம். மூலத்திலிருந்து ஒரு நொடியில்,Q அலகு ஆற்றல் வெளியிடப்படுகிறது எனும் பரப்பு S, கொண்ட தளம் AB மற்றும் பரப்பு S கொண்ட தளம் CD யைக் கருத்தில் கொண்கால், ஒரு நொடியில் AB இன் குறுக்கே பாயும் ஆற்றல் E₁ Q X S₁ 4rR", ஒரு நொடியில் CD இன் குறுக்கே பாயும் ஆற்றல் Q x S, E₁ = 4R', E = E, ஆகவே E₂ Q S₁ 4R₁₁ QS2 = 47 R 23 அல்லது S1 = S R₁' R மேலும் ஒரு நொடியில் ஓரலகுப் பரப்பு வழியே இரு கோளங்களிலும் பாயும் ஆற்றல்,