உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/724

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

700 ஒளிக்கோட்டம்‌

700 ஒளிக்கோட்டம் M S M IN E S M L₁ M who w N E E படம் 1. ப்ரெனெல் விளைவு இவ்வகையினைத் தோற்றுவாயிலிருந்து ஒளியினை ஒரு குவிவில்லை கொண்டு வரும் ணைக் கற்றைகளாக மாற்றியும். திரையில் விழுமுன் மற் றொரு, குவிவில்லையால் ஒளியினைக் குவித்தும் நடை முறைப் படுத்தலாம். மாறாக, ப்ரெனெல் விளைவில் ஒளித் தோற்று வாயும்,திரையும் கோட்ட விளைவினை ஏற்படுத்தும் தடைப் பொருளிலிருந்து குறிப்பிட்ட தொலைவி லிருக்கும். எனவே, இவ்விளைவினைக் காணக் குவி வில்லைகள் தேவைப்படா. இதனால் இங்கே அலை முகப்பு நேர் தளமாக இல்லாமல் விரிந்து காணப் படுவதால், ப்ரெனெல் விளைவினைப் பற்றிய ஆய்வு சற்றுக் கடினமாகும். . ப்ரான்கோபர் ஒளிக்கோட்டம். இவ்விளைவினை விளக்குவதற்காக ஒரு செவ்வக வடிவப் பிளவினை எடுத்துக் கொள்ளலாம். இதன் நீளம் அகலத்தை விட மிக அதிகமாகும். இதன் நீளவாட்டம் இத் தாளின் பக்கத்திற்குச் செங்குத்தாக இருக்கவேண்டும். இப்பிளவு ஒற்றை நிற இணை ஒளிக் கற்றையினால் ஒளியேற்றப்படுகிறது. இதற்குக் குவிவில்லை L, உதவி புரியும். மற்றொரு குவிவில்லை L, ஆல் ஒளி திரையிலோ புகைப்படத் தாளிலோ குவிக்கப் படலாம். அங்கே ஒளிக்கோட்ட வரிகள் கிடைக்கும் பிளவின் அகலத்தை மாற்றினால் கோட்ட வரிகளும் மாறும். பிளவு ஒரு குறிப்பிட்ட அகலத்திற்குமேல் மாற்றப்பட்டால் கோட்டப்படிவத்தில் தெளிவு இராது. இந்நிகழ்வை விளக்க ஹைஜயனின் (Huygen) துணை அலைக்குட்டிகளுக்கான கொள்கை பயன்படும். துணை அலைக்குட்டிகளின் குறுக்கீட்டு விளைவால் கோட்டப் படிவங்கள் உண்டாகின்றன. தான் படம் 2. ப்ரான்கோபர் விளைவு இதைத் தெளிவுபடுத்த பிளவிலிருந்து தோன்றும் எல்லாத் துணை அலைக் குட்டிகளின் வீச்சுகளைத் திசையன் முறையில் கூடுதல் செய்ய வேண்டும். இம்முறைக்கு அதிர்வு வளைவு முறை என்று பெயர். அதிர்வு வளைவு முறை. இம்முறையில் பிளவின் அகலத்தினை ஓரளவிற்கு அதிக எண்ணிக்கையில், சான்றாக ஒன்பது என்ற சம அளவில் பிரிக்கலாம். ஒவ்வொரு பிரிவும் திரையில் வெவ்வேறு கலையுடன் சமவீச்சுகளை அளிக்கும். ஒரு திசையன் பட டத்தினை அமைத்துத் திரையில் உள்ள ஒவ்வொரு புள்ளியிலும் ஏற்படும் வீச்சு மற்றும் கலையின் தொகுபயனைக் ஒவ்வொரு சமவீச்சும் காணலாம். ஆகவும், ஒன்று மற்றதிலிருந்து tans அளவிற்குச் சரிந்திருப்ப தாகவும் கொண்டால் a, 8 ஆகியவற்றின் மதிப்பு மிகக் குறைவாக இருக்கும். அதாவது திசையன் படம் ஒரு வட்டத்தின் வில்லைப் போன் றிருக்கும். தொகுபயன் வீச்சு அவ்வில்லின் நாணிற்குச் சமமாகும். அத்தகைய தொடர் வளைவுக் கோடுதான் அதிர்வு வளைவுக்கோடு எனப்படுகிறது. எல்லா அதிர்வுக் கூறுகளும் சம கலையில் இருக்கும்போது வில்லின் நீளம் A, (=9a) ஆக இருக்கும். இம்மதிப்பு அச்சுக்கோடு திரையைச் சந்திக்கும் அச்சில் இல்லாத புள்ளியில் இருக்கும். ஒரு புள்ளியில் தொகுபயன் வீச்சு Aக்கும், Aக்கும் உள்ள தகவு நாணிற்கும் வட்டவில்லிற்கும் உள்ள தகவிற்குச் சமம். P என்பது பிளவின் எதிரெதிர் மூலையிலிருந்து வரும் அலைகளின் கலைவேறு பாட்டில் பாதி எனக் கொண்டால் வில் தாங்கும் கோணம் 28 ஆகும். வில்லின் ஆரம் g எனக் கொண்டால் Sin p A/2