உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/731

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிச்சேர்க்கை 707

தடுத்துச் சிதறச் செய்யும் துகள்களின் பருமன். In என்பது பாய்மத்தின் ஒளி விலக்க எண்ணாகும். cos p என்னும் உறுப்பு ஒளி முனைவாக்கம் பெறாத படுகதிரில் உள்ளதாகும். இங்கு 8 என்பது சிதறு கோணம் ஆகும். ராலே சமன்பாடு அவோகாட்ரோ எண் N அல்லது பாய்மத்தின் மூலக்கூறு நிறை M ஆகியவற்றுள் ஒன்று தெரிந்தால் மற்றதைக் கணக் கிட உதவுகிறது. A சிதறும் ஒளியின் செறிவு படுகதிரின் அலை நீளத்தின் நான்கு மடியைப் பொறுத்துள்ளதென்பதை ராலே சமன்பாடு தெளிவாக்குகிறது. இவ்வுண்மையே பகற் காலத்தில் வானம் நீலமாகவும், சூரியன் மறைவு நேரத்தில் சிவப்பாகவும் தோன்றுவதற்கு அடிப்படையாக அமைகின்றது. காற்றின் மூலக் கூறுகள் சிவப்பு நிற ஒளியினைவிட நீல நிற ஒளியினை மிகுதியாகச் சிதறச் செய்கின்றன. சூரியன் மறைவின் போது செந்நிற ஒளி சிதறாமல் நேராக நம் கண்களை வந்து அடைகின்றது. காலை, காலை நேரத்திலும் மாலை நேரத்திலும் தூசிப் படலங்கள் மிகுதியாகச் சூழ்ந்திருப்பதால் மாலை வேளைகளில் சூரியன் சிவந்து தோற்றமளிக் கிறது. ஒளிச்செறிவு சு. மகாதேவன் ஒரு தோற்றுவாயால் ஓரலகுத் திண்மக் கோணத்தில் வெளியிடப்படுகிற ஒளிப்பாயம் அதனுடைய ஒளிச் செறிவு எனப்படுகிறது. ஓர் ஒளிமூலத்தின் மொத்த ஒளிப்பாயம் (luminous flux) F என்க. ஒளி மூலத்தின் திண்மக் கோணம் கொண்ட ஒரு பரப்பின் மேல் இந்த ஒளியாற்றல் விழுமாயின் F என்பது அப் பரப்பின் ஒளிச் செறிவு எனப்படும். பல சமயங்களில் ஒளிச்செறிவு லூமென் என்ற அலகிலும், மெழுகுத் திறன் (candle power) என்ற அலகிலும் குறிக்கப் படும். ஒரு நொடியில் ஒரு மெழுகுத்திறன் அளவு ஒளி வீசும் சீரான ஓர் ஒளிப் புள்ளி மூலத்திலிருந்து ஓரலகுத் திண்மக் கோணமுள்ள பரப்பின் மேல் விழும் ஒளியின் அளவு ஒரு லூமென் எனப்படும். ஒளிச்செறிவு அனைத்துலகச் செந்தர மெழுகுத் திறன் என்ற அலகாலும் அளவிடப்படுகிறது. இந்தச் செறிவின் படித்தர அளவைக் கொடுக்கும் மாதிரி மூலங்கள் டெட்டிங்டன் தேசிய இயற்பியல் ஆய்வ கத்திலும் வேறு நாடுகளில் அதனையொத்த நிலை யங்களிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கின்றன. அவை செந்தர நிலைகளில் இயங்குகிற மின் விளக்கு கள். இந்தச் செறிவானது செந்தரமான ஈரப்பதன், அ.க. 6-45அ ஒளிச்சேர்க்கை 707 அழுத்தம் ஆகியவற்றில் எரிகிற ஒரு வெர்னான் ஹார்கூர்ட் பென்ட்டேன் விளக்கின் (vernon Har- court pentane lamp) சுடருக்குச் செங்குத்தான திசை யிலுள்ள ஒளிச்செறிவில் பத்தில் ஒரு பங்கு ஆகும். ஒரு குறிப்பிட்ட திசையில் இந்த அளவைப் போல i மடங்கு செறிவுள்ள ஓர் ஒளிமூலம் அத்திசையில் n வத்தித்திறன்களைக் கொண்டதாக விவரிக்கப்படு கிறது. கே. என். ராமச்சந்திரன் நூலோதி. G.R Noakes, A Text Book of Light, Macmillan, London, 1965. ஒளிச்சோக்கை இது சில பாக்டீரியா, பாசிகள், பசுமை நிறத்தாவரங் கள் ஆகியவை தம் இலை முதலிய பசுமை உறுப்பு களிலுள்ள பச்சையம் என்னும் நிறமியின் துணை கொண்டு சூரிய ஒளியிலிருந்து ஆற்றலை உறிஞ்சி, நீரையும் கார்பன் டை ஆக்சைடையும் கூட்டிச் சர்க்கரை அல்லது மாவுப்பொருளாகிய கார்போ ஹைட்ரேட்டைத் தயாரிக்கும் செயலாகும். ஒளியின் உதவியால் பொருள்கள் சேர்க்கப்படுவதால் இதற்கு ஒளிச்சேர்க்கை (photosynthesis) என்று பெயர். தாவர உறுப்புகள் முக்கியமாக இலைகள் பச்சையாக உள்ள மையால் ஒளிச்சேர்க்கை, இலைகளிலும் பச்சை நிறம் கொண்ட பிற தாவர உறுப்புகளிலும் நடைபெறும். . தாவரங்களில் நடைபெறும் ஒளிச்சேர்க்கை உல கில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் அடிப்படைத் தேவையாகும். இதன் மூலம் தாவரங்கள் தங்களுக்கு வேண்டிய உணவுப் பொருளைத் தயாரித்துக் கொள் வதோடு அனைத்து உயிர்களுக்கும் இவற்றை அளிப்ப தால், உயிரியல் முதல் தேவையை நிறைவு செய் கின்றன. சூரிய ஆற்றலில் உள்ள இயங்கு ஆற்றல் நிலை ஆற்றலாகத் தாவரங்களில் தேக்கி வைக்கப்படு கிறது. தாவரங்களை உண்ணும் பிற உயிரினங்களில் இந்நிலை ஆற்றல் மீண்டும் இயங்கு ஆற்றலாக மாறி, வாழ்க்கைச் செயல்கள் நடைபெற உதவுகிறது. விலங் கினங்களில் உள்ள அடிப்படைப் பொருள்களிலொன் றான கரிமப்பொருள்கள் பசுந்தாவரங்களிலிருந்தே கிடைக்கின்றன. உயிரினங்களில் நடைபெறும் சிக்க லான பல்வேறு வேதிச் செயல்களனைத்தும் ஒளிச் சேர்க்கையிலுண்டான முதற்பொருள்களைத்தேவைக் கேற்ப மேலும் மாற்றம் செய்வதேயாகும். இதனால் தாவரங்களில் முதலில் உண்டாகும் சர்க்கரைப் பொருள்களே பின்னர் பல தனிமங்களுடன் சேர்ந்து கார்போஹைட்ரேட், புரதம் கொழுப்பு முதலியவை யாக ஆகவும், அவற்றாலான வேறு உயிர்ப் பொருள் களுக்கு மூலமாகவும் உள்ளன.