உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/733

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிச்சேர்க்கை 709

பழுத்தாலும் பச்சையம் மறைந்தாலும் மஞ்சள் நிற மிகள் நிலைத்திருக்கின்றன. ஊசி பொதுவாகப் பச்சையம் உண்டாவதற்குச் சூரிய ஒளி தேவையானாலும், பாசி, பாசம், பெரணி, யிலைத் தாவரம் ஆகியவை இருட்டிலிருந்தாலும் பச்சையம் உண்டாகும். தாவரங்கள் தொகுக்கும் கார்போஹைட்ரேட்டில் கார்பன்டைஆக்சைடு, நீர் இவை இருந்தாலும் பச்சையம் அவற்றுடன் சேர்ந் ஒளிச்சேர்க்கையின்போது திருப்பதில்லை. இது குறைவதுமில்லை. எனவே இதை ஒரு செயலூக்கி யென்றே கொள்ளலாம். ஆற்றல் மூலம். கார்பன் டைஆக்சைடு, நீர் ஆகிய வற்றின் மூலக்கூறுகளைச் சிதைத்து வேறு புதிய சேர்மத்தைத் தயாரிப்பதற்கு ஆற்றல் வேண்டும். இருட்டிலுள்ள ஒரு தாவரத்தில், ஒளிச்சேர்க்கைக்குத் தேவையான பிற அனைத்துப் பொருள்களுமிருந்தும் இச்செயல் நிகழ்வதில்லை. சூரிய ஒளியிருந்தால்தான் நடைபெறுகிறது. எனவே ஒளிச்சேர்க்கைக்கு வேண்டிய ஆற்றல் சூரிய ஒளியிலிருந்தே கிடைக்கிறது. சூரிய ஒளியே தாவரங்களுக்கு வேண்டிய ஒளி முழுதும் வழங்கினாலும், விளக்கு வெளிச்சம் போது மான செறிவும் பண்பும் கொண்டிருந்தால் அதிலும் ஒளிச்சேர்க்கை நடைபெறலாம். கட்புலன் ஒளியில் ஏழு நிறமான கதிர்கள் உள்ளன. (காண்க, ஒளிபுற ஊதாக்கதிர் நிறமாலையியல்) அவற்றுள் பச்சையம் அகச்சிவப்புக் கதிர்களையும் நீலக்கதிர்களையும் உட்கவர்ந்து அவற்றிலுள்ள ஆற்றலைக் கொண்டு ஒளிச்சேர்க்கை நடத்துகிறது. ஒளிச்சேர்க்கை மங்கலான ஒளியிலும் நடைபெறக் கூடும். ஆனால் ஒளிர் ஒளியில்தான் முழு வீச்சில் நடைபெறும். அளவுக்கு விஞ்சிய ஒளியில் இதன் விரைவு குறையும். ஒளிச்செறிவுக்கேற்றவாறு பலசூழ் நிலைகளில் தாவரங்கள் வாழ்கின்றன. மிகு ஒளித் தாவரம், மித ஒளித்தாவரம், குறை ஒளித்தாவரம் எனப் பலவகையுண்டு. பொதுவாக ஒளிச்சேர்க்கை 6°C - 45°C வரையில் உள்ள வெப்பச்சூழ்நிலை யில் நடந்தாலும் முழு வீச்சு ஒளிச்சேர்க்கை நடை பெற வெப்பம் 30°செ ஏற்றதென்று கருதப்படுகிறது. விளைவுப்பொருள். ஒளிச்சேர்க்கையின் இறுதியில் குளுகோஸ் உண்டாகிறது. இச்செயல் பல நிலை களில் நடைபெறுகிறது. முதல் நிலையில் ஒளி தேவைப்படும். பின்னர் நிகழ்பவை ஒளியிலும், இருளி லும் நடைபெறும். முதலில் நிகழ்வன ஒளிவினைகள் அல்லது ஒளி வேதிச் செயல்கள் (light reactions or photochemical reactions). அடுத்து நடப்பவை இருள் வினைகள் அல்லது நொதி வேதியியல் செயல்கள் (dark reactions or enzyme reactions) எனப்படுகின் றன. இச்செயல்களின் முடிவில் மூலக்கூறுகள் ஒன்று சேர்ந்து இறுகுதல் அல்லது கூட்டுறுப்பாதல் நிலை ஒளிச்சேர்க்கை 709 யடைகின்றன. இதில் ஆறு மூலக்கூறு கார்பன்டை ஆக்சைடும் ஆறு மூலக்கூறு நீரும் சேர்ந்து ஒரு மூலக் கூறு குளுக்கோஸும் ஆறு மூலக்கூறு ஆக்சிஜனும் உண்டாகின்றன. 6CO, + 6 H,O - CgH1, O + 60, 13 இச்செயலில் உள்ளேற்கப்படும் கார்பன் டை ஆக்சைடு அளவும், வெளிவரும் ஆக்சிஜன் அளவும் சமமாகும். இலையின் செல்களில் சர்க்கரை மிகுதியாக இருந்தால் ஒளிச்சேர்க்கை வீச்சுக்குறைந்து தடைப் படும். அவ்வாறு தடைப்படாமல் தொடர்ந்து செயல் பட இச்சர்க்கரைப்பொருள் ஸ்டார்ச் என்னும் மாவுப்பொருளாக மாறிவிடுகிறது. குளுக்கோசிலிருந்து நீர் குறைந்தால் ஸ்டார்ச் உண்டாகிறது. செயல் நொதியினால் நிகழ்கிறது. CH,0 -H₂O -CH100, இச் தொகுக்கப்படும் சர்க்கரையோ ஸ்டார்ச்சோ இலையில் சேர்த்து வைக்கப்படாமல் தாவரத்தின் வேர், தண்டு முதலிய உறுப்புகளுக்கு எடுத்துச் செல்லப்படும். இலையிலுள்ள ஸ்டாச்சு சர்க்கரையாக மாற்றப்பட்டுச் சாற்றின் வழியாகக் குழாய்களால் பிற உறுப்புகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு சர்க்கரை மீண்டும் ஸ்டார்ச்சாக மாற்றப்பட்டுத் தேக்கிவைக்கப்படுகிறது. டயாஸ்ட்டேஸ் என்னும் நாதி ஸ்டார்ச்சைச் சர்க்கரையாக மாற்றுகிறது. உமிழ்நீரிலுள்ள டயலின் என்னும் நொதி இவ் வகையைச் சார்ந்ததேயாகும். உடன் விளைவு. ஒளிச்சேர்க்கையால் வெளிவரும் ஆக்சிஜன் அனைத்து உயிர்களுக்கும் பயன்படுகிறது. உயிரிகள் மூச்சுவிடுவதற்கும். பொருள்கள் எரிவதற்கும் இயற்கையில் நடைபெறும் பல்வேறு ஆக்சிஜனேற்றச் செயல்களுக்கும் பயன்படுகிறது. பாக்டீரியாவும் ஒளிச்சேர்க்கையும். பாக்டீரியா கார்பன் டைஆக்சைடு நீர் இவற்றைச் சேர்த்து உணவுப்பொருளைத் தயாரிக்கலாம். ஒருசில பாக்டீரி யாக்கள் பிற தாவரங்களைப் போலவே சூரிய ஒளியைப் பயன்படுத்துகின்றன. மேலும் சில அம்மோனியா. ஹைட்ரஜன்சல்ஃபைடு, கந்தகம், கார்பன் மோனாக்சைடு, ஹைட்ரஜன், இரும்பு கார்பனேட் போன்ற பொருள்களை ஆக்சிஜனேற்றித் தேவையான ஆற்றலைப் பெறுகின்றன. இவ்வகைப் பாக்டீரியாவில் ஒளியைக் கவரும் சில வகை நிறமிகள் உண்டு. பச்சைப் பாக்டீரியா, நீலக்கந்தகப் பாக்டீரியாக்களில் பாக்டீரியா விரிடின் அல்லது பாக்டீரியாகுளோரின் என்னும் நிறமிகள் உள்ளன. இவை பச்சையம் a ஒத்தவை. ஊதாப் பாக்டீரியாவில் இப்பச்சை நிறமி கரோட்டினால் மறைக்கப்பட்டிருக்கும்.