உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/734

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

710 ஒளித்திறமை

A 710 ஒளித்திறமை தாவரங்களில் பொதுவாக ஒளிச்சேர்க்கையின் உடன் விளைவாக ஆக்சிஜன் வெளிவரும். பாக்டீரியா வில் ஆக்சிஜன் வருவதில்லை. ஆனால் கந்தகம் வெளி வருகிறது. பயன். ஒளிச்சேர்க்கை மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்கும் மிகவும் இன்றிய மையாதது. எளிய தாதுப் பொருள்கள் உயிரினங் களுக்கு மிகத் தேவையான கரிமப் பொருள்களாக மாறுவதற்கு இச்செயல் உதவுகிறது. ஒளிச்சேர்க்கை முறையைப் பயன்படுத்தியே வேளாண்மைத்தொழில் பல் வழிகளிலும் முன்னேறியுள்ளது. அனைத்து உயிர்களுக்கும் தேவையான உணவுப்பொருள். ஆக்சிஜன் முதலானவற்றையளிப்பதுடன் மனிதனுக்கு வேண்டிய உடை, வீடு கட்ட மரம் பல்வேறு கைத் தொழில்களுக்குப் பயன்படும் செல்லுலோஸ், ஆல் கஹால், ரப்பர் போன்ற செயற்கைப் பொருள் களையும் ஒளிச்சேர்க்கையே வழங்குகிறது. தாவரங்கள், இவற்றின் பச்சையத்தில் நடக்கும் ஒளிச்சேர்க்கை, இதற்கு வேண்டிய ஒளி வழங்கும் சூரியன், ஒளிச்சேர்க்கையால் உண்டாகும் உணவுப் பொருள், இதைப் பயன்படுத்தும் உயிரினம், இவை வெளிவிடும் கார்பன் டைஆக்சைடு. இதைப்பயன் படுத்தி தயாரிக்கும் உணவு தாவரங்கள் என உயிருலகம் ஒரு வட்டத்தில் இயங்குவதைக் காணலாம். ஒளித்திறமை பி. சம்பத் மின் விளக்குகளில் அமைந்துள்ள மின்னிழைகளில் மின்னோட்டம் சென்று உயர் வெப்ப நிலை அடைந்து ஒளிர்கின்றன. இது வெண்சுடர் நிலை (incandescence) எனப்படும். அவ்வாறன்றிச் சில பொருள்கள் குளிர்ந்த நிலையில் இருப்பினும் ஒளிரும் தன்மையைப் பெற்றுள்ளன. இந்நிலை தன் ஒளிர்வு (luminescence) எனப்படுகிறது. பொருளில் திண்மம், நீர்மம், வளிமம் ஆகிய முந்நிலைகளிலும் ஒளிவிலக்கம் ஏற்படக்கூடும். ஆனால் பொருள்தரும் ஒளியின் தன்மை அந்தப் பொருளின் பண்பைப் பொறுத்திருக்கிறது. பொது வாகத் தன் ஒளிர்வு என்னும் நிகழ்ச்சி ஆற்றலை உட்கவருதல், கிளர்வூட்டல், நிறமாலையில் கட்புல னுக்குட்பட்ட அலை நீளங்களில் ஒளியாற்றலை வெளி யிடுதல் ஆகிய நிகழ்வுகளைப் பொறுத்தது. எடுத்துக் காட்டாகத் தொலைக் காட்சிப் பெட்டித் திரையில் ஒளிரும் விளக்கு, அடுக்கு அமைப்பில் ஏற்படும் ஒளி விலக்கம் ஆகும். இவற்றில் ஒளிர்வான் (phosphor) என்னும் பொருளைக் கிளர்வூட்டுவதால் ஒளி பெறப் படுகிறது. ஆனால் இவை ஒவ்வொன்றிலும் வெவ் வேறு கிளர்ச்சியூட்டும் முறை பயன்படுகிறது. ஒளித் தன்னொளிர்வு (photo luminescence). ஒளி தரும் தன்மையுடைய சில பொருள்கள் சூரிய ஒளி ஆற்றலை உட்கவர்ந்து, அவற்றில் ஒரு நிறமுள்ள ஒளியை வெளிவிடும். எடுத்துக்காட்டாகத் துணிகளை வெண்மையாக்கப் பயன்படுத்தும் நீலம், இப்பண்பைக் கொண்ட சில கரிம மூலங்களைக் கொண்டுள்ளது. எனவே நீலம் போடப்பட்ட ஆடைகள் சூரிய ஒளி யில் உலர்த்தப்பட்டபின் வெண்மையுடன் தோற்ற மளிக்கின்றன. எதிர்முனைத் தன்னொளிர்வு. இதில் ஓர் எலெக்ட் ரான் கற்றை, தன்னொளிர்வுப் பொருளின் மீது மோதும்போது அப்பொருள் ஒளிர்கிறது. மின் தன்னொளிர்வு. இதில் தன்னொளிர்வுப் பொருள் மின் புலத்தில் வைக்கப்படும்போது ஒளிர் கிறது. வேதியியல் தன்னொளிர்வு. இதில் வேதி வினைப் பயனாக ஒளியாற்றல் கிடைக்கிறது. எடுத்துக்காட் டாக லூமினால் என்னும் கரிமப் பொருள் ஆக்சிஜ னேற்றமாக்கக் கூடிய பொருளுடன் கலக்கப்படும் போது நீலநிற ஒளியை வெளிவிடுகிறது. பல்வேறுபட்ட தன் ஒளிர்வு நிகழ்ச்சிகளை ஆராயும்போது இவற்றின் ஒளித்திறமை (luminous efficiency) வேறுபட்ட பல காரணிகளைப் பொறுத் திருக்கிறது என அறியலாம். ஆனால் பொதுவாக ஒளித்திறமையைக் கீழ்க் காணுமாறு வரையறுக்க லாம். ஒளித்திறமை என்பது வெளிப்படும் மொத்த ஒளிப்பாயத்திற்கும் (luminous flux) உள்ளிடப்பட்ட ஆற்றல் திறனுக்கும் உள்ள தகவு ஆகும். ஒளியூட்டுவதன் முக்கிய நோக்கம், கண்கள் எளி தாகத் தன்னொளிமிக்கப் பொருள்களிலிருந்து தன் னொளி குறைந்த பொருள்களை வேறுபடுத்திப் பார்ப் பதற்கு உதவுவதாகும். குறைவான ஒளி எதிரொளிக் கும் தன்மை கொண்ட பொருள்களின் விலக்கங்களைத் தெளிவாகக் கண்கள் உணர ஒளியூட்டுதல் தேவை யாகிறது. ஒளி என்பது பார்வை உணர்வைத் தூண்டும் தன்மைபெற்ற கதிர்வீச்சு ஆற்றல் என வரையறுக்கப் பட்டிருப்பதால், கண்களைப் பயன்படுத்தி ஒளி அள வீட்டு முறைகள் செய்யப்படுகின்றன. ஆனால் ஒரு மனிதனின் கண் மற்றொரு மனிதனின் கண்ணின் இயல்பிலிருந்து வேறுபட்டு இருப்பதால், அவை உணரும் நிறமாலை அலை நீளங்களின் இயல்பில் வேறுபட்டு இருக்கும். எனவே அனைத்துலக ஒளியூட் டும் குழு, ஒரு செந்தர நிறமாலை ஒளித்திறமை வளைகோட்டை ஏற்படுத்தியுள்ளது. வ்வளைகோடு கதிர்வீச்சு மையத்திலிருந்து ஒளித்திறமைப் பாயத்தை உருவாக்கும் திறமையைக் குறிக்கிறது. இந்த வளை கோடு ஓர் இயல்பான கண்ணின் ஃபோட்டோபி