உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/739

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

715 ஒளிப்படக்கருவி

குவிய ஆழம் சில சமயங்களில் புல ஆழம் என்று குறிப்பிடப்படுகிறது. எனினும், படக் கருவியின் உள்ளே படச்சுருளின் தளத்தில் உருத்தோற்றம் தெளிவாக இருக்கும் பரப்பே குவியஆழம் ஆகும். இது ஒளியியல்படிச் சரியான விளக்கமாகும். எடுத்துச் செல்லும் ஒளிப்படக் கருவியில் படச் சுருளைச் சமதளத்தில் வைக்கவும், படமெடுத்தபின் மாற்றவும் படச்சுருள் தாங்கியில், வசதிவேண்டும். சாதாரணப் படக்கருவியில், படத்தாள், ஒளிபுகாத, கரிய நிறத் தகட்டால் மூடப்பட்ட தாங்கியுடன் உள்ளது. இருட்டறையில், படத்தாளைப் படக்கரு வியில் நுழைத்துவிட்டு, படமெடுக்குமுன் ஒளிபுகாக் கருநிறத் தகட்டைநீக்க வேண்டும். படமெடுத்தபீன், மீண்டும் தகட்டைப் படத்தாள் தாங்கியில் நுழைத் துப் பிறகு இருட்டறையில் பதப்படுத்தல் வேண்டும். ஒவ்வொரு படத்தாளாகப் பயன்படுத்துவது கடின மாகும். எனவே 12 அல்லது 16 எண்ணிக்கை உள்ள மெல்லிய வளையக்கூடிய படத்தாள்களைக் கொண்ட கட்டு உள்ளது. இக்கட்டு, கருநிறமுள்ள தகட்டுடன் தாங்கியில் பொருத்தப்பட்டு படக்கருவியுள் வைக்கப் படுகிறது. ஒவ்வொரு முறையும் படமெடுக்கப்பட்ட பின்பு ஒவ்வொரு படத்தாளும், உடன் கப்பட்டுள்ளதாள் துண்டின் உதவியால், கட்டின் பின்புறம் செல்கிறது. இவற்றைத் தயாரிப்பது மிகவும் கடினமாகையால், இவை தனிப்படத்தாளைவிட விலை மிகுதியானவை. இணைக் பல படங்கள் எடுக்குமளவு நீளம் கொண்ட படச் சுருள், ஒளிபுகாப் பின்புறத் தாளுடன் தொழிற் சாலையிலேயே மரம் அல்லது ஞெகிழி உருளையில் சுற்றப்பட்டு வருகிறது. படச்சுருளின் பின்புறத்தாள், படச்சுருளைச் சாதாரண ஒளியிலேயே படக்கருவியில் பொருத்தவும் வெளியே எடுக்கவும் உதவுகிறது. மேலும் பின்புறத் தாளில் எழுதப்பட்ட எண்கள் படக்கருவியின் பின்னேயுள்ள சிவப்பு, அல்லது ஆரஞ்சு வண்ணச் சாளரத்தின் வழியே தெரிவதால், தன் மூலம் எத்தனைப் படங்கள் எடுக்கப்பட்டுள்ளன என் பதையும் தெரிந்து கொள்ளலாம். அண்மைப் படக் கருவிகளில் படச்சுருள் தானாகவே நகர்கிறது. றுதியாகப் படமெடுத்தபிறகு. படச்சுருளை. உருளையை முழுதும் சுற்றிவிட்டுப் பதப்படுத்தப்படு வதற்காகக் கருவியிலிருந்து எடுக்க வேண்டும். 35.மி.மீ. படச்சுருளில் பின்புறத் தாள் பயன் படுவதில்லை. மாறாகப் படச்சுருள் கொண்ட ருளை, ஒளிபுகாப் பெட்டிக்குள் வைக்கப்பட்டுப் படச்சுருளின் நுனி, ஒளி புகாப் பிளவு ஒன்றின் வழியாக வெளியே வருமாறு உள்ளது. படக்கருவி யினுள் படச்சுருளை வைக்கும்போது, படச்சுருளின் சில முதல் செ. மீ. நீளம் படக்கருவியிலுள்ள வாங்கும் உருளையில் சுற்றப்பட்டுப் பின்னர் ஒதுக்கப் படுகிறது. ஏனெனில் படக்கருவியினுள் படச்சுருளை ஒளிப்படக்கருவி 715 வைக்கும்போது, முதல் சிறிது தொலைவு ஒளிபட்டு விடுகிறது. படங்கள் எடுத்து முடிந்த பிறகு, படச் சுருள் மீண்டும் ஒளிபுகாப் பெட்டிக்குள் சுற்றப்பட்டு, வெளியே எடுக்கப்பட்டு, பதப்படுத்தப் படச்சுருள் அனுப்பப்படுகிறது. படக்கருவியிலேயே உள்ள படங்கள் எடுப்பதை எண்ணும் கருவி, படச்சுருளை நகர்த்தும் கருவியுடன் இணைக்கப்பட்டுள்ளது. வாக படக்கருவிகளின் வகைகள். பொதுவாகச் சாதா ரண ஒளிப்படக் கருவிகள், பெட்டி இவற்றில் மாற்றக் கூடியவை எதுவுமில்லாமையால் இவை விலை குறை பயன்படுத்த இருப்பதுடன் எளிதாகவும் உள்ளன. இவற்றில் வில்லையின் குவியத் தொலைவு நிலையாக இருப்பதால் இதிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவிற்கப்பாலுள்ள அனைத்துப் பொருள்களை யும் ஓரளவு தெளிவாகப் படம் பிடிக்க இயலும். வெளிப்புறங்களில் சூரிய ஒளியின் உதவியிலும், வீட்டிற்குள்ளே மின்னொளியிலும் சரியாகப் பட மெடுக்க இதில் வில்லையின் துளையும், வில்லைக் கதவு திறக்கும் வேகமும் தயாரிக்கும் போதே நிலை யாக வைக்கப்பட்டுள்ளன. சாளரத்திரை நோக்கி 7 வில்லை படச்சுருள் படம் 1. ஒளிப்படக்கருவியின் அடிப்படைப் பகுதிகள் மேம்படுத்தப்பட்ட படச்சுருள், கூடவே அமைந் துள்ள மின்னொளி, எளிதில் படச்சுருளைப் பொருத் தும் வசதி, படச்சுருளில் ஓர் இடத்திலேயே முறை படமெடுப்பதைத் தவிர்த்தல் முதலிய வசதி களைக் கொண்டவையாக இவை உள்ளன. சிறப் பான படச்சுருள்கள் மற்றும் பதனம் செய்யும்